*தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு*
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். "எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்" என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.
வரும் அக்-24ஆம் தேதி ‘ஆட்டி’ படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகமெங்கும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்க படத் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment