Featured post

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRIS...

Saturday, 6 December 2025

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’

 *ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது!*




மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.


பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்கவைத்துள்ளது. 


பனோரமா ஸ்டுடியோஸின் தலைவர் குமார் மங்கத் பதக் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் தங்களுக்கு உணர்வுப்பூர்வமானது என்றார். மேலும் அவர் கூறுகையில், "’த்ரிஷ்யம்’ ஒரு திரைப்படம் என்பதை தாண்டி இந்திய சினிமாவில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்று என சொல்வேன். அசல் மலையாள ஃபிரான்சைஸின் உலகளாவிய உரிமைகளை நாங்கள் பெற்றிருப்பது பெருமையான, உணர்ச்சிபூர்வமான தருணம். எங்கள் உலகளாவிய விநியோக வலிமையுடன் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தை இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச வெளியீடுகளில் ஒன்றாக மாற்ற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.


பென் ஸ்டுடியோஸ் இயக்குனர் டாக்டர் ஜெயந்திலால் கடா கூறுகையில், "இந்தியக் கதைகளை ’த்ரிஷ்யம் 3’ திரைப்படம் மூலம் உலகிற்கு எடுத்துச் செல்லும் பணியை நாங்கள் தொடர்கிறோம். பனோரமா ஸ்டுடியோஸுடன் நாங்கள் இணைந்திருப்பதன் மூலம் இந்தத் திரைப்படம் உலகளவில் பார்வையாளர்களை சென்றடைவதை உறுதி செய்கிறது" என்கிறார். 


தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மேலும் கூறுகையில், “பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்துள்ளதால் நிச்சயம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ’த்ரிஷ்யம் 3’ திரைப்படம் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் ஆதரவுடன் இந்தப் படம் அடுத்தடுத்த உயரத்தை சென்றடைவது மகிழ்ச்சி” என்றார். 


நடிகர் மோகன்லால் பகிர்ந்து கொண்டதாவது, “என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், வரிகளுக்கு இடையிலான அமைதியிலும் ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது புதிய ரகசியங்களுடன் என் பழைய நண்பரை சந்திப்பது போல உணர்கிறேன். இந்தமுறை அவரது பயணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலாக உள்ளேன்” என்றார். 


இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்ந்து கொண்டதாவது, “’த்ரிஷ்யம்’ போன்ற கதைகளைக்கு முடிவு என்பதே கிடையாது. அவை அடுத்தடுத்து வளரும். இந்த கூட்டணி அமைந்திருப்பது எங்கள் பயணம் சரியான பாதையில் செல்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்தக் கதை உலகளாவிய பார்வையாளர்களுக்கு தகுதியானது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், இந்தக் கூட்டணியுடன் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஜார்ஜ்குட்டியின் அடுத்த நகர்வு என்ன என்பதைப் பார்க்க தயாராகி விட்டார்கள்” என்றார். 


மலையாள சினிமாவில் நீண்டகால பயணத்திற்கான வலுவான அடித்தளமாக பனோரமா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை அறிவித்துள்ளது. மலையாள சினிமாவை தேசிய மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் திறமையாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரியவும் இந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

No comments:

Post a Comment