Featured post

Angammal Movie Review

Angammal Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  angammal  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vipin Radhak...

Thursday, 4 December 2025

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில்

 *லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில் 'டெர்மினேட்டர்' நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்!*



லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியரில் கலந்து கொண்டதன் மூலம், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது நீண்டகால நண்பரான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது ஆதரவை வழங்கினார். பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். 'தி டெர்மினேட்டர்' திரைப்படம்  முதல் அவர்களின் அடுத்தடுத்த பல படைப்புகள் இருவரையும் சினிமாவில் ஜாம்பவான்களாக மாற்றியது. 


இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் பிரீமியர் உற்சாகத்துடன் தொடங்கியது. கேமரூனின் அறிவியல் புனைகதை பிரபஞ்சத்தின் அடுத்த பரிணாமத்தைக் காண ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அதன் அதிநவீன காட்சிகள், விரிவாக்கப்பட்ட உலகம் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கரின் தோற்றம் அந்த இரவை மேலும் ஒளிர செய்தது. 


பிரம்மாண்டமான காட்சியமைப்புகள்,  சிலிர்ப்பூட்டும் புதிய கதாபாத்திரங்கள் மற்றும்  அற்புதமான சினிமா அனுபவத்திற்காக படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பாராட்டினர். 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment