Featured post

Indian Cinema Gets Its Most Awaited Platform: Launch of INDIAN FILM MARKET

*Indian Cinema Gets Its Most Awaited Platform: Launch of INDIAN FILM MARKET* We are delighted to announce the official launch of INDIAN FILM...

Wednesday, 10 December 2025

இந்திய திரைப்பட உலகில் அறிமுகமாகும் மிகப்பெரிய புதிய தளம் “ INDIAN FILM MARKET”

 *இந்திய திரைப்பட உலகில் அறிமுகமாகும்   மிகப்பெரிய புதிய தளம் “ INDIAN FILM MARKET” !!*




*திரைத்துறையின் வரப்பிரசாதம் “ INDIAN FILM MARKET” !!*


இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில்  உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான  புதிய தளமாக INDIAN FILM MARKET  தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். 


பல தசாப்தங்களாக, படைப்பிலிருந்து திரைக்கு அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான்  INDIAN FILM MARKET  தளம் உருவாகியுள்ளது.


இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் மிஸ்டர் கண்ணன் (Founder, Indian Film Market)  தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்திய திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் புரிந்தவர் என்பதால், “படத்தை முழுமையாக லாபமளிக்கும் ஒரு தொழில்முறை வணிக மாடலாக மாற்ற வேண்டும்” என்ற நோக்கத்துடன் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.


சினிமாவில் கண்டெண்ட் தான் ராஜா. அந்த கண்டெண்டை உயர்த்த,  சரியான நடிகர்கள் மற்றும் சரியான தொழில்நுட்பக் குழுவை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம். எங்கள் தளத்தின் மூலம், தயாரிப்பாளர்களுக்கு வலுவான, சந்தைத் தரமான கதைகளையும், தயாரிப்புக்கான தொழில்நுட்ப குழுவையும் வழங்கி, ஒவ்வொரு திரைப்படமும் 100% லாபகரமானதாக அமைய எங்கள் குழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அதே நேரத்தில், இந்திய சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதே எங்கள் முக்கிய குறிக்கோள் என அவர் தெரிவித்துள்ளார். 


INDIAN FILM MARKET வழங்கும் முழுமையான சேவைகள்:

கதை தேர்வு & திரைப்பட படைப்புக்கான ஆலோசனை

பட்ஜெட்டிங் & திட்டமிடல்

தயாரிப்பில்  A–Z  வரை படைப்பை நிறைவேற்றுவதற்கான உதவிகள்

மார்க்கெட்டிங் திட்டம் & புரமோசன்  மேற்பார்வை திட்டங்கள். 

     •   ரைட்டர்ஸ் ரூம் மூலம் புதிய படைப்பாளிகளுக்கான உதவிகள். 

தியேட்டர், ஆடியோ, OTT, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகள் விற்பனை


மேலும் அவர் கூறுகையில் 


இந்திய சினிமாவை உலகளவில் வளர்க்க, ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் உள்ள குழுக்களுடன்   நாங்கள் இணைந்துள்ளோம். இதன் மூலம் உலகம் முழுவதும்  மிக உயர்ந்த தரத்திலான படப்பிடிப்பு தளங்களும், அரசாங்க மானியங்களும் படைப்பாளிகளுக்கு பெற்றுத் தருவோம் . மேலும், இந்திய படங்களை உலக சந்தைகளில் அறிமுகப்படுத்த சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், வெளிநாட்டு படங்களின் உரிமைகளைக் கொண்டு வந்து இந்தியாவில் விநியோகிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முயற்சிகள் கலாசார பரிமாற்றத்தையும், பரந்த விநியோக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.


ஒவ்வொரு ஆண்டும், வளர்ந்து வரும் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் INDIAN FILM MARKET விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்து துறைகளிலும் புதியவர்களுக்கு மிகப்பெரிய மேடை அமையும்.


நடிகர்கள் முதல் அனைத்து தொழில்நுட்பத் துறைகளிலும் புதிய திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதில் எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது. இளம் படைப்பாளர்களுக்கு பொருத்தமான வாய்ப்புகளை உருவாக்கி, இந்திய திரைப்பட உலகிற்கு வலுவான, எதிர்காலத்திற்கு  படைப்பாற்றலில் சிறந்த   சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.


புதிய இளம் படைப்பாளிகளுக்கு,  “ரைட்டர்ஸ் ரூம்” உருவாக்கி அதன் மூலம் திரைக்கதை உருவாக்குவதற்கான உதவிகளும், அதை விற்பனை செய்வதற்கும் அதை திரைப்படமாக்குவதற்கான உதவிகளும் வழங்கப்படும். 


புதிய தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.


ஒவ்வொரு படமும் லாபகரமானதாக மாறும் எதிர்காலத்தையும், இந்திய சினிமாவின் உலகளாவிய பெருமையையும் நாம் இணைந்து உருவாக்கலாம்.


INDIAN FILM MARKET — இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய சக்தி.


https://indianfilmmarket.in/


No comments:

Post a Comment