Featured post

Rashmika’s Never-Seen-Before Avatar Is Pure Goosebumps In The Highly Intense Teaser Of Rawindra Pulle, Unformula Films’ Pan India Film Mysaa

 Rashmika’s Never-Seen-Before Avatar Is Pure Goosebumps In The Highly Intense Teaser Of Rawindra Pulle, Unformula Films’ Pan India Film Mysa...

Saturday, 29 August 2026

திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!

 *திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி  வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!*





நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள கருணாஸ், ‘என்ன விலை’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.


படம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளனர். விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள் ஊக்கமளித்தாலும், ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்”.


தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.


இப்படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சித்தா தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக அல்பி ஆண்டனி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளராக ஸ்ரீஜித் சாரங் மற்றும் ஒலி வடிவமைப்பாளராக தபஸ் நாயக் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், இந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment