Featured post

A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen

 A Lifelong Love for Cinema: Yuva Pushpakar Set to Return to the Silver Screen Chennai: After establishing himself as a successful entrepren...

Showing posts with label தென்னிந்திய நடிகர் சங்கம். Show all posts
Showing posts with label தென்னிந்திய நடிகர் சங்கம். Show all posts

Friday, 18 January 2019

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை .

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை . 

 புரட்சி தலைவர் 'பாரத் ரத்னா " எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும்  ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள்  மனோபாலா ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்தனர்.
 





Friday, 21 December 2018

நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி

நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி

தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம். இன்று தமிழ் திரைப்பட உலகம் இருக்கின்ற சூழ்நிலையில் அச்சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும் கடமைகளும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அச்சங்கத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகத்தை பாதிக்கும். 

எதிர்காலத்தை கணக்கில் வைத்து திரையுலகம் சீராய் இயங்குவதற்கும் மற்ற சங்கங்களுக்கு முன் உதாரணமாய் விளங்கும்படி ஒரு சூழலையும் முடிவையும் mm தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.



Wednesday, 5 December 2018

கஜா புயல் நிவாரண நிதி

கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வாடும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு  நிவாரண நிதியாக ரூ.5,000/- வீதம் மொத்தம் ரூ.8,60,000/- “தென்னிந்திய நடிகர் சங்கம்’’ மூலம் வழங்கப்பட்டது. 


இவ்வேளையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி சேவை புரியும், நிறுவனங்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் “தென்னிந்திய நடிகர் சங்கம்” நன்றி தெரிவித்து கொள்கிறது.