Featured post

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

 *இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!* *பத்து வருடங்களுக்க...

Showing posts with label Film maker S A Chandrasekar. Show all posts
Showing posts with label Film maker S A Chandrasekar. Show all posts

Thursday, 8 August 2019

50 -மும்பை நடன அழகிகளுடன் C.M ( கேப்மாரி ) பாடல் காட்சி

.

எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.  

ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.

பிரமாண்ட அரங்கம் – அதிரடி நடனம்.

விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம்.

M.G.R. பிலிம் சிட்டியில் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

“ என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா

 என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா “

என்ற ஹரிசரண்  பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இசை : சித்தார்த் விபின், ஒளிப்பதிவு : ஜீவன்,

படத்தொகுப்பு : ஜி.கே. பிரசன்னா, கலை: வீரமணி கணேசன்.

கதை – திரைக்கதை – வசனம் - இயக்கம் : எஸ் .ஏ. சந்திர சேகரன்.

C.M- யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

கதாநாயகன் .- ஜெய், 

கதாநாயகிகள் - அதுல்யா ரவி, வைபவி சான்ட்லியா