Featured post

Legend Saravanan’s blockbuster 'Leader' to premiere on Amazon Prime Video on May 29

 Legend Saravanan’s blockbuster 'Leader' to premiere on Amazon Prime Video on May 29* *'Leader' starring Legend Saravanan wi...

Showing posts with label Thambi movie 2019. Show all posts
Showing posts with label Thambi movie 2019. Show all posts

Wednesday, 27 November 2019

SDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி

 
சமீபத்தில் டிஸ்டிபூசனில் கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர். சேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள். இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர். பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை   SDC  பிக்சர்ஸ்  கைப்பற்றிள்ளது

Monday, 25 November 2019

வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் “தம்பி”


‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதைதான். நகைச்சுவை, ஆக்‌ஷன்ஸ் , எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே இந்த ‘தம்பி’யில் அமைந்துள்ளது. இதில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு மிகுந்தது. இது போக கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

சென்னை, மேட்டுபாளையத்தில் 17 நாட்களும், கோவாவில் 50 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன் என எல்லா ஜானர்களிலும் படம் இயக்கி வெற்றிபெற்ற மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், நேரடி தமிழ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற 30ம் தேதி பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

நடனம் - ஷோபி, பிரசன்னா சுஜித்
ஸ்டண்ட் - சில்வா
பாடல்கள் - விவேக், கார்த்திக் நேத்தா
ஆர்ட் - பிரேம் நவாஸ்
எடிட்டிங் - வி.எஸ்.விநாயக்
வசனம் - கே.மணிகண்டன்
இசை - கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர்
தயாரிப்பு - சூரஜ் சாதனா, வயாகம்18 ஸ்டுடியோஸ்