*சர்வதேச வழக்கறிஞர் திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி மனித உணர்வுகளையும் காதலையும் அடிப்படையாகக் கொண்டு எழுதிய புதிய நாவல் 'ஃபைனலி அஸ்' (Finally Us) வெளியிடப்பட்டது.*
சர்வதேச வழக்கறிஞரும், எழுத்தாளருமான திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி தனது புதிய இலக்கியப் படைப்பான 'ஃபைனலி அஸ்' என்ற நாவலை வெளியிட்டுள்ளார். மனித உணர்வுகளின் ஆழத்தைத் தொட்டுச் செல்லும் இந்த நாவல், துயரம், மனப்பக்குவம், மௌனம் மற்றும் மீண்டும் காதல் வயப்படும் மனநிலையை மையமாகக் கொண்டு, எழுதப்பட்ட உணர்ச்சிபூர்வமான காதல் கதை இது.
குற்றவியல், சிவில் மற்றும் அரசியலமைப்பு சட்டத் துறைகளில் சிறப்பான அனுபவம் கொண்ட ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி, இந்த நாவல் மூலம் நீதிமன்ற உலகத்தைக் கடந்த மனித மனத்தின் உணர்ச்சி மற்றும் பரிமாணங்களை மிக நுணுக்கமாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
'ஃபைனலி அஸ்'
நாவல், கடலில் தனது தாயை பறிகொடுத்த ராணா என்ற இளைஞன், காதலின் மீதான நம்பிக்கையை இழந்து வாழ்வதில் தொடங்குகிறது. பின்னர் உற்சாகத்தோடு வாழும் கட்டிடக் கலைஞரான மாயாவின் வருகையால் அவரது வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. எதிர்பாராத சந்திப்பாக தொடங்கும் இந்த உறவு, மௌனம், ஏக்கம், மனவேதனை மற்றும் விதியின் பின்னணியில் ஆழமான உணர்ச்சி பிணைப்பாக வளர்வதை விவரிக்கிறது. மேலும், இந்நாவல் இரண்டாவது வாய்ப்பு, உணர்வுகளை மீட்டெடுத்தல் மற்றும் காதலின் மாற்றத்திறன் போன்ற கருத்துகளை மையமாகக் கொண்ட, மென்மையான காதல் கதையாக விவரிக்கப்படுகிறது. ராணாவுக்கு ஒருகாலத்தில் இழப்பின் அடையாளமாக இருந்த கடலே, இறுதியில் உண்மை, ஆறுதல் மற்றும் காதல் மீண்டும் மலரும் இடமாக மாறுகிறது.
இந்த அழகிய இலக்கியப் படைப்பின் உரிமையாளர் திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி உரையாற்றும்போது,
'ஃபைனலி அஸ்' என்பது வெறும் காதல் கதை மட்டுமல்ல என்றும், வாழ்க்கை தலைகீழாக மாறிய பின்னரும், காதல் நம்மைத் தேடி மீண்டும் வர முடியும் என்ற நம்பிக்கையையும், மனதின் அமைதியான போராட்டங்களையும் பேசும் கதை இது என்றும் தெரிவித்தார்.
திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி தற்போது சர்வதேச வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு வழக்கறிஞராகவும் (Government Advocate/Prosecutor) பணியாற்றியுள்ளார். குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ள அவர், சர்வதேச குற்றவியல் சட்ட ஆலோசனையும் வழங்கி வருகிறார். அவரின் சட்ட அணுகுமுறையும் விளக்கத் திறனும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாராட்டைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புனேயிலுள்ள ஐ.எல்.எஸ். சட்டக் கல்லூரியில் (ILS Law College) பட்டம் பெற்ற திரு. ஹரிஹர அருண் சோமசங்கர் ஜி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், (Stanford University) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், (University of Oxford) மற்றும் கார்டிஃப் பல்கலைக்கழகம் (Cardiff University) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்த, சட்ட மற்றும் சர்வதேச கல்வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
சட்டத் துறையில் சாதனைகள் புரிந்ததுடன், இலக்கியத்துறையிலும் சாதனை படைத்துள்ள இவர், முன்னதாக எர்த்மேன்: தி டிஃபண்டர் ஆஃப் தி வேர்ல்டு (Earthman: The Defender of the World) மற்றும் மை லிட்டில் பிரின்ஸஸ் (My Little Princess) போன்ற படைப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது பல்துறை இலக்கிய ஆற்றலும் படைப்பாற்றலும் வெளிப்படுகின்றன.
'ஃபைனலி அஸ்' நாவல் மூலம், எதிர்பாராத தருணங்களில் காதலை கண்டுபிடிக்கும் மனித உணர்வுகளின் அழகையும், மனவலிமையையும், உணர்ச்சி நெகிழ்ச்சியையும் வாசகர்களிடம் இவரது எழுத்துகள் கொண்டு சேர்க்கின்றன.

No comments:
Post a Comment