Featured post

When love travelled through letters and lived on cassettes

 *When love travelled through letters and lived on cassettes* _Habeebi to Premiere on 25th September on Sony LIV_ Before messages to loved o...

Monday, 18 May 2026

உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி

 *உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!* 



சென்னை, மே 16, 2026 — கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து,  முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின்  50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன.


1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் படைப்புகள், உலக சினிமா வரலாற்றில் மிக ஆழமான உணர்வுகளையும் கலாச்சார தாக்கத்தையும் ஏற்படுத்திய இசையாகத் திகழ்கின்றன. இந்த விழா ஒரு சாதாரண மைல்கல் அல்ல; மனிதகுலத்திற்கு ஒரே ஒருவரால் வழங்கப்பட்ட அசாதாரண பரிசை கொண்டாடும் தருணமாகும்.


“இளையராஜா சார் இசை என்பது வெறும் பின்னணி இசை அல்ல; அது தலைமுறைகளின் உணர்ச்சி நினைவகம்,” என்று கனெக்ட் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் வருண் மாதூர் தெரிவித்தார். “அவர் திரையுலகில் 50 அசாதாரண ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், உலகத் தரத்துக்கு இணையான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவரது இசை ஒவ்வொரு படத்திலும் சாதித்ததுபோல, இந்த முயற்சியும் உலகத் தரத்திலான படைப்பாற்றலையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்கிறது என்றார்.”


இந்த அஞ்சலி, தொழில்துறையில் முன்னணியில் உள்ள AI தொழில்நுட்பங்களும், அடுத்த தலைமுறை திரைப்பட உருவாக்க முறைகளும் பயன்படுத்தப்பட்டு,  உருவாக்கப்பட்ட ஒரு உணர்ச்சி மற்றும் காட்சியமைப்பு நிறைந்த சினிமா அனுபவமாக இருக்கும். உணர்வுகள், சினிமா கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்ப புதுமைகள் ஆகியவற்றின் மூலம், இளையராஜாவின் ஐம்பது ஆண்டு கால தாக்கத்தை இன்றைய தலைமுறைக்கும் அதே வலிமையுடன் கொண்டு சேர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


“இளையராஜாவின் பாரம்பரியம் என்பது ஒரு இசையமைப்பாளரின் சாதனை மட்டும் அல்ல; அது அரை நூற்றாண்டாக கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் உணர்வு,” என்று மெர்குரி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் குழும தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீராம் பக்திசரண் கூறினார். 


“அந்த பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக நாளைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எங்களுக்கு ஒரு பெருமையும் பொறுப்பும் ஆகும். AI தொழில்நுட்பம் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ள இந்த காலத்தில், இந்த முயற்சி திரைப்படத் துறையில் புதிய ஆர்வத்தை உருவாக்கும். அதே நேரத்தில், படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை புறக்கணிக்காமல், தயாரிப்பு செலவுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் வாய்ப்பையும் இது வழங்கும்.”


இந்த முயற்சியில் தனது AI மற்றும் படைப்பாற்றல் நிபுணத்துவத்தை வழங்கியுள்ள WPP புரொடக்ஷன், கலாச்சாரத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான புதிய ஒற்றுமையின் அடையாளமாக இதை பார்க்கிறது.


“நிலைத்திருக்கும் சிறந்த படைப்புகள் அனைத்தும் உணர்வு, கலாசாரம் மற்றும் புதுமை ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகின்றன,” என்று WPP புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் நாகராஜன் கூறினார். 


“இந்த அஞ்சலி அதற்கான சிறந்த உதாரணம். இங்கு மிக முன்னேறிய AI தொழில்நுட்பங்கள் வெறும் காட்சிச்சிறப்புக்காக பயன்படுத்தப்படவில்லை; தலைமுறைகள் கடந்து பலரின் வாழ்க்கையின் பின்னணி இசையாக இருந்த ராஜா சார் இசையை கௌரவிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.”என்றார்.


🔗  https://www.youtube.com/watch?v=yomruKvYrWc

No comments:

Post a Comment