Warrent Webseries Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம warrent webseries ஓட review வை தான் பாக்க போறோம். இந்த series ல மாமன் படத்தோட டைரக்டர் தான் ஹீரோ வா நடிச்சிருக்காரு. இந்த series அ எழுதி இயக்கி இருக்கிறது vignesh nadarajan . இந்த webseries இப்போ zee 5 ல தான் ஒளிபரப்பு ஆயிட்டு இருக்கு. இதுல பிரசாந்த் பாண்டியராஜ் , காளி வெங்கட் , பாலாஜி சக்திவேல் , அருள்தாஸ் , நம்ரிதா னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கு. இந்த series க்கு இசை அமைச்சிருக்கறது sam c s . சோ வாங்க இப்போ இந்த series ஓட கதை என்னனு பாக்கலாம்.
kottaikaruppu வா நடிச்சிருக்க prashanth pandiyan ஒரு சாதாரண ஆளு. இவரோட அப்பா தான் தன்னோட பையன police அ ஆக்கி பாக்கணும் னு ஆசைப்படுறாரு. தன்னோட parents விருப்பத்தை நிறைவேத்தனும் ண்றதுக்காக எப்படி கஷ்டப்பட்டு படிச்சு எக்ஸாம் ல எழுதுறாரு. ஆனா ஓவுவுறு தடவையும் ஒரு mark வித்யாசத்துல government வேலைய miss பண்ணிடுறாரு. அப்போ தான் கோட்டை கருப்போட மாமா வா இருக்கற காளி வெங்கட் ஒரு influence ஆனா எடத்துல வேலை பாக்குறாரு. இவரோட influence அ use பண்ணி ஒரு வழியா கோட்டை கருப்பு க்கு police வேலையும் வாங்கி குடுத்துட்டாரு. அப்போ தான் இவருக்கு திருச்சி ல இருக்கற ponmalai ன்ற ஊர்ல இருக்கற police station ல officer posting போட்டு அனுப்புறாங்க.
kottaikaruppu க்கு police இப்படி தான் இருப்பாங்க ன்ற ஒரு expectation இருக்கும் ஆனா இவரு உள்ள வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும், எல்லாமே எதிர்மறையா இருக்குனு. இவரு கொஞ்சம் அப்பாவியா இருப்பாரு. இதுனாலயே மத்த police officers எல்லாரும் இவரை கேலி பண்ணுறாங்க. நம்மளும் strict ஆனா police தான் prove பண்ணுறதுக்காக இவரு எடுக்கற முடிவு தான் விபரீதமா போய் முடியுது. இவரு ஒருத்தன arrest பண்ணுறாரு. விசாரணை பண்ணும்போது அந்த ஆள இவரு ரொம்ப போட்டு அடிச்சிடுறாரு. அதுனால அந்த நபர் இறந்து போய்டுறாரு. police station ல அதுவும் police ஓட விசாரணை னால ஒருத்தர் இறந்துட்டாரு ண்றதுனால police department ஒரு தனி குழுவை ஏற்படுத்தி இந்த case அ விசாரிக்க ஆரம்பிக்குறாங்க. இந்த special force அ lead பண்ணுறது jeyaprakash தான்.
எதுக்காக கோட்டைக்கறுப்பு இவரை கொன்னாரு? இதோட பின்னணி என்ன ன்றது தான் இந்த series ஓட மீதி கதையை இருக்கு. கதையை ரொம்ப direct அ சுத்தி வளைக்காம, தேவையில்லாத scenes னு எதுவுமே கிடையாது. 2022 ல release ஆகி மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்ற விலங்கு series ஓட அதே timeline ல தான் இந்த கதையும் நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்ல ரெண்டு series ளையும் themes எல்லாம் common அ இருந்தது. உதாரணத்துக்கு, சட்டம் ஒன்னு சொல்லும் ஆனா police station ல வேற ஒன்னு நடக்கும், hierarchy ல போலீஸ் officers ஓட domination , discipline ன்ற பேர் ல மத்த police officers க்கு நடக்கற அநியாயம் னு இன்னும் நெறய சொல்லிட்டே போகலாம்.
இந்த show ஓட பெரிய strength ஏ police ஓட procedures அ detailed அ காமிக்கிறது தான். அவங்களோட rules and regulations , custody procedures , raids , arrest warrent க்கான procedures னு நம்ம இன்னும் சொல்லிட்டே போகலாம். இந்த segments எல்லாம் பக்க சுவாரஸ்யமா இருந்தது. ஒரு சில scenes லாம் பாக்கும்போது ரொம்ப disturbing அ இருந்தது. கோட்டை கருப்பு ஓட transformation அ ரொம்ப அழகா கொண்டு வந்திருக்காங்க. முக்கியமா ஆரம்பத்துல இவரு அப்பாவியா இருந்தாலும் தனக்கு பிரச்சனை னு வரும்போது இவரு strong அ மாறுறது எல்லாமே நல்ல இருந்தது.
ஒரு realistic ஆனா கதைக்களம். இன்னும் இந்த மாதிரி கதைகளை பாக்கணும் னு தோணவைக்கற அருமையான series தான் இது. சோ மறக்காம உங்க family and friends ஓட சேந்து இந்த series அ பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment