Featured post

Makers of The India Story Drop a Hard-Hitting Promo Exposing Food Adulteration in India

 Makers of The India Story Drop a Hard-Hitting Promo Exposing Food Adulteration in India* Presented by Zee Studios in association with MIG P...

Thursday, 14 May 2026

மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!

 *மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!*



இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண்  நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.


கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.


பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.


“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


புகழ்பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.


ஹொம்பாலே ஃபிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


No comments:

Post a Comment