Featured post

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வ...

Showing posts with label heroine indhuja. Show all posts
Showing posts with label heroine indhuja. Show all posts

Monday, 21 October 2019

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி


“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.


நிகழ்வில் நடிகை அதுல்யா ரவி, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.


“உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், “22 ஆண்டுகளாக ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வகுழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷ்த்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம்” என்றார்.



Thursday, 12 September 2019

சூப்பர் டூப்பர் ' படம் எப்படி ? நாயகன் கூறுகிறார்



ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. 
வளர்ந்து வரும் நடிகர் துருவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ' சூப்பர் டூப்பர்' இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் துருவா.

 ' சூப்பர் டூப்பர்' படம் பற்றிய தன் அனுபவங்களைக்  கூறுகிறார் நடிகர் துருவா .

 "சூப்பர் டூப்பர் படத்தை எடுத்துக்கொண்டால்  ஆக்ஷன், த்ரில்லர் , ரொமான்ஸ் ,  காமெடி அனைத்தும் இணைந்த ஒரு படமாக இருக்கும் .80 களில் 90களில் வந்த படங்களை எடுத்துக்கொண்டால் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படங்களாகவும் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாகும் இருக்கும். ஏனென்றால் அதில் ஒவ்வொருவருக்கும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருக்கும். ஆக்ஷன் இருக்கும்; ரொமான்ஸ் இருக்கும்; காமெடி இருக்கும்; சென்டிமென்ட் இருக்கும். இப்படி ஏதாவது ஒரு விஷயத்தால் ஈர்க்கப்பட்டு ரசிகர்கள்  திரையரங்குகளுக்குச் சென்றார்கள். அதுபோல் 'சூப்பர் டூப்பர்' படமும் அனைத்து அம்சங்களும் இருக்கும்படியான படமாக உருவாகி இருக்கிறது.

 இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் சத்யா. ஆனால் நான் வாய் திறந்தால் பொய் தான் சொல்லுவேன் .பொய் சொல்வேனே தவிர  கெட்டவன் கிடையாது. இப்படிப் பொய் சொல்லிக்  கதாநாயகியிடம் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வேன்.நெருங்கிப் பார்த்தால் நாயகியும் ஒரு சிக்கலில் இருப்பார்.
தங்கள் சிக்கல்களிலிருந்து அவர்கள் 2 பேரும் எப்படி மீண்டு வெளியே வருகிறார்கள் ? அதாவது நாங்கள் எப்படி வருகிறோம் என்பதுதான் கதை.

 விறுவிறுப்பான ,திரில்லிங்கான, கலகலப்பான ,போரடிக்காத, கவனம்  தளரவிடாத , இறுக்கமான திரைக்கதை அமைப்போடு படம்  உருவாகியிருக்கிறது .

 இரண்டு மணிநேரம் ஓடும் இந்தப்படத்தில் இரண்டு வினாடிகள் கூட உங்கள் கவனம் சிதறாது. அப்படி  விறுவிறுப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகிஇருக்கிறது.

இது எனக்கு இரண்டாவது படம். ஒரு புதுமுக நாயகன் முழுநீள படத்தில் நடிப்பது பற்றிச்  சிலர் விமர்சனம் செய்யலாம் . ஆனால் அதையும் நியாயப்படுத்துகிற மாதிரி காட்சிகளும் என் பாத்திர சித்தரிப்பும் இதில் இருக்கும்.அதனால்  படம் பார்த்தால் என் பாத்திரம் புரிய வைக்கும். என் உயரம் எனக்குத் தெரியும் நான் நீந்த வேண்டிய நீர் நிலையின் ஆழமும் எனக்குத் தெரியும் எனவே ஆழம் தெரியாமல் காலை  விடவில்லை. எல்லாம் சரியாகப்  பொருத்தமாக இருக்கிறது .இதைப் படம் பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

 என்னுடன் நடித்திருக்கும் நாயகி இந்துஜா .இப்போதெல்லாம் கதாநாயகியாக நடித்து வருகிறவர்கள் சினிமாவை ஒரு முறையான தொழிலாக எண்ணித்தான் வருகிறார்கள் .எனவே தொழில் ரீதியாக சரியாக இருக்கிறார்கள் .அப்படித்தான் இந்து ஜாவும். சினிமாவையும் தன் பாத்திரத்தையும் புரிந்து கொண்டு இதில் நடித்திருக்கிறார் .

ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்து கொண்டு சூப்பர் டூப்பர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

 படித்த தைரியமான நகர்ப்புறத்தில் இருக்கும் நவீன பெண்ணாக இந்துஜா வருகிறார் .தன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். 

இப் படப்பிடிப்பின் 55 நாட்களும் நல்ல நட்பு சூழலில் கழிந்ததை எங்களால்  மறக்கமுடியாது.

 நான் சினிமாவை நேசித்து நல்ல வாய்ப்புக்காகப்  போராடிவரும்  வளரும் நடிகர். எனக்கு இப் படம் நல்லதொரு வாய்ப்பாகும். அனைவரும் உழைக்கத் தயங்காத குழுவாக  இப்படக் குழு உருவானது. நண்பர்கள் நட்புச் சூழல் நிலவ இப் படம் தொடங்கியது முதல் சாதகமான நல்லெண்ண அலைகளும் எங்களைச் சூழ்ந்து வருகின்றன. எனவே இப்படம் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது .

 வாய்ப்புக்காக ஆசைப்பட்டு சுமாரான கதைகளில் நடிக்க  நான் தயார் இல்லை .என்னை ஆச்சரியமூட்டும் வகையில் கதை அமைந்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். வாய்ப்பு வந்தால் போதும் என்று  அடுத்தவர் வலிகளில் கைத்தட்டல் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை .

சூப்பர் டூப்பர் படத்தில் என் நண்பனாக ஷாரா நடித்துள்ள, நானும் அவரும் படம் ஃபுல்லா காமெடியில் கலக்கி இருக்கிறோம். மற்றும் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா நல்லதொரு வில்லனாக வருகிறார். அவருக்கும் இது நல்ல பெயர் வாங்கித்தரும். இயக்குநர்  ஏகே  ,  நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா ,  படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா  தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்தனர்.

மொத்தத்தில் வெகுஜன ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்படியான சிறப்பான படமாக 'சூப்பர் டூப்பர்' இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை .
நான் சொல்வதில் உள்ள நியாயத்தைப் படம் பார்த்து அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்" இவ்வாறு' சூப்பர் டூப்பர்' நாயகன் துருவா கூறினார்.

Sunday, 14 July 2019

*சினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை!*

*தயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்களா ? தயாரிப்பாளர் டி. சிவா பேச்சு!*

*ட்ரெய்லர் போல படமும் பிடித்திருந்தால்' சூப்பர் டூப்பர்' படத்தை வாங்கி வெளியிடுவேன் : தயாரிப்பாளர்  லிப்ரா ரவீந்திரன் பேச்சு!*


தயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று தயாரிப்பாளர் டி. சிவா ' சூப்பர் டூப்பர்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 விழாவில் இயக்குநர்  ஏகே  , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா ,  படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா  தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ,அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.



விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற  ஏ.கே. பேசும்போது ,

 "இது என் 15 ஆண்டு காலக் கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி -கஷ்டப்படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.  இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான்  ஆரம்பித்தோம் .ஆனால் அப்படியே இருக்கக்கூடாது என்று யோசித்தோம்.பலவித வண்ணங்களையும் வாசனைகளையும் கலந்து இதை வேறு வகையான படமாக உருவாக்கி இருக்கிறோம். இதில் பலரது உழைப்பு இருக்கிறது .ஒரு புதிய படக்குழு செப்துள்ள புதிய முயற்சி இது .ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் .பொதுவாகக் கண்டிப்பவர்களை யாருக்கும் பிடிக்காது அப்பாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. ஆனால் ஊடகங்கள்தான் கண்டிக்கிறபோதும்  நண்பர்களாக இருப்பவர்கள் . இப்படத்திற்கு அவர்களின் ஆதரவு வேண்டும்" என்றார் .

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது , "இந்த மேடையில் நான் நிற்பதற்கு பல மனிதர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இப் படத்தின் போது பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பைப்
 பெற்றிருக்கிறேன் . ஒன்பது  ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு வந்துள்ளது. இதில்பலரும் உழைத்திருக்கிறார்கள் "என்றார்.


 இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜா பேசும்போது, 
" ஐந்தாண்டு பயணத்தில் வந்த படம் இது. நான் ஐடியில் வேலை பார்த்து வந்தேன். வாய்ப்புக்கான போராட்டத்தில் முடியாமல் மீண்டும் திரும்பிச்சென்று சென்று விடலாம் என்று இருந்தவன் .என்னை ஏகே தான் பிடித்து இழுத்து  மீண்டும் அழைத்து வந்தார்.   குறும்பட முயற்சிகள் என்று செய்தோம். அது இந்த படம் வரை வந்து இருக்கிறது " என்றார்.

நாயகன் துருவா பேசும்போது,
 " இயக்குநர் ஏ .கே  ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா .  இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா ,ஆதித்யா நல்ல பெயர் பெறுவார்கள். ஒரு படத்திற்குக் கதை தான் முக்கியம் என்றாலும் விநியோகம் மிக முக்கியம் என்று இப்போது மாறியிருக்கிறது. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை . வெற்றிப்படம் தோல்விப்படம் என்று மட்டுமே பேசப்படுகிறது. இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்." என்றார்.

தயாரிப்பாளர் சதீஷ்குமார் பேசும்போது, 
" இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லரைப் பார்க்கும் போது யார் ஒளிப்பதிவாளர் ? யார் இசையமைப்பாளர் ? என்று தேடிப் பிடித்துப் பாராட்டத் தோன்றியது.

இன்று சினிமா எடுக்கும் போது அதன் வியாபார சாத்தியங்களை வெளியீட்டு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு உதவ நானும் தயார். அனுபவமுள்ள மூத்த தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்." என்றார்.


 நாயகி இந்துஜா பேசும்போது, 

" இந்தப் படக்குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறும்படக் கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் .அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள் ." என்றார்.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது ,
 " இந்த விழாவிற்கு என்னை நாயகன் துருவா ,இயக்குநர் ஏ கே , இசையமைப்பாளர் திவாகர் வந்துஅழைத்தார்கள். நானும் குறும்பட உலகத்திலிருந்து  பெரும் படத்துக்கு பல கனவோடுவந்தவன். அப்போது எனக்குப் பழைய நினைவுகள் வந்தன.  நிகழ்ச்சிக்கு இங்கே வந்துள்ள இந்த டி.சிவா சார் அன்று என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இங்கிருக்கிறார். எனக்குத் தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கிய ஜே எஸ்கே சதீஷ் சார் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

 இந்தப் படக்குழுவினரைப் பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அதில் இருக்கும் என நம்புகிறேன். படத்தை எனக்குப் பிடித்து இருந்தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்.

நான் பெரும்பாலும் புதுவித படக்குழுவுடன் தான் பணியாற்றுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே உள்ள சினிமா வெளியீடு மற்றும் வியாபார விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது .அது புரிவதற்கு ஏழு வருடங்களானது. நேற்று வெளியான 'கூர்கா' படத்தை நான் முதன்முதலில் வெளியிட்டுள்ளேன். பெரிய விலை கொடுத்துவிட்டதாகவும் பலரும் சொன்னார்கள் .கதையை மட்டும் பார்த்தேன் .படமும்  வெற்றிகரமாக ஓடுகிறது.

 ஒரு படத்தை உருவாக்க நினைக்கும் போது கிடைக்கும் தோல்வியில் இருந்து எழுந்து போராடி கிடைக்கும் வெற்றி அளவில் பெரியதாக இருக்கும் " என்றார்.

 தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது " இது ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். குறும்படத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள் . சமீபத்தில் ஏழு குறும் படங்கள்பார்த்தேன். அதில் ஒருவர் பிரமாதமாக நடித்திருந்தார்.

ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். ஊடகங்களில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதனால் இந்த  விளக்கம் தர வேண்டி உள்ளது. தயாரிப்பாளர்கள் விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன் .ஒருபோதும் தயாரிப்பாளர்கள்  விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. தரக்குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம்.

 மோசமாக விமர்சனம் செய்த படங்க களும் ஓடிஇருக்கின்றன .விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும் .அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லை மீறிப் போகக்கூடாது ."என்ன படம் எடுத்திருக்கிறார் ? தியேட்டருக்குப் போகாதீர்கள்" என்று எல்லாம் கேவலமாகப் பேசக் கூடாது.


தி.நகரில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டு  "அந்த கடையில் பொருள் வாங்காதே, எதுவும் எடுக்காதே" என்று கூறினால் அவர் அந்த நேரம் எந்தச் சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள். சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல .படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். முதல் நாள் முதல் ஷோவே  வெற்றி பெறுவதில்லை. அவன் பார்க்க அவகாசம் கொடுங்கள். 

 விமர்சனங்களால் ஓடிய படம் நிறைய உண்டு. நல்ல விமர்சனங்களால் ஓடாத படங்களும் உண்டு,விமர்சனம் என்கிற பெயரில் சிலர் செய்யும் இந்த செயல்களால் வருத்தப்படுகிறோம். இது எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று  எச்சரிக்கிறோம் . " இவ்வாறு டி.சிவா பேசினார். முன்னதாக 'சூப்பர் டூப்பர்' படத்தின் பாடல்கள்  வெளியிடப்பட்டன.

Thursday, 7 March 2019

ஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கும்

ஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கும். ஒன்று கவர்ந்திழுக்கும் தோற்றம், மற்றொன்று நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது. அதர்வா முரளியின் முந்தைய படங்களை கவனித்தால் இது தெளிவாக விளங்கும். மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் அவரின் 'பூமராங்' படமும் ஏற்கனவே ரசிகர்களை ஒரு புதுவித அனுபவத்துக்கு தயார் செய்துள்ளது.






எப்போதும் போல், அதர்வா படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களை, கடும் முயற்சிகளை பற்றி பெரிதாக பேசாமல், இயக்குனர் கண்ணனை புகழ்ந்து பேசுகிறார். "கண்ணன் சார் அவருடைய கலைத்திறமையை தாண்டி, அரிதான பல தனிப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார். யாரும் அவ்வளவாக பேசாத சமூக பிரச்சினைகள் பற்றி படங்களில்  பேசுவது அதில் ஒன்று. நாம் பல ஆண்டுகளாக சமூக வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பல படங்களை பார்த்திருக்கிறோம். எனினும், அவர் எனக்கு சொன்ன 'பூமராங்' ஸ்கிரிப்ட்டை முற்றிலுமாக புதிதாக உணர்ந்தேன். நாம் ஏற்கனவே சொன்னபடி, இது இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது என்ற விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங் காதல், காமெடி, எமோஷன் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம் என்று தான் சொல்லுவேன். மேலும், கண்ணன் சார், ஸ்கிரிப்ட்டில் சில ஆச்சரியமான விஷயங்களை வைத்திருக்கிறார், அது எனக்கு மிகவும் புதியதாகவும்  இருந்தது" என்றார் அதர்வா முரளி.

உடன் நடித்த நடிகர்கள் பற்றி அதர்வா கூறும்போது, "நான் எப்போதும் நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருப்பதை நம்புகிறேன். ஒரு படம் மிகச் சரியானதாக இருக்க ஒவ்வொரு நடிகருக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இந்த விதத்தில், கண்ணன் சார், கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் மிகச்சிறந்த வேலையை செய்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல், மேகா ஆகாஷ், இந்துஜா உட்பட அனைவரது கதாபாத்திரத்திற்கும் உண்டான நியாயத்தை செய்திருக்கிறார் கண்ணன் சார்.

தொழில்நுட்ப குழுவை பற்றி கூறும்போது, "ரதனின் பாடல்கள் ஒரு தனித்துவமான உணர்வை உருவாக்கியுள்ளன. ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு வலுவான மற்றும் சிறந்த பின்னணி இசையை வழங்கி தன்னை மேம்படுத்தி வருகிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாரின் வண்ணங்கள் மற்றும் கலர் டோன் மிகவும் புதுமையாக இருக்கிறது. அவருடைய கேமரா, பச்சோந்தி போல சூழ்நிலையைப் பொறுத்து அதன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது  என்று நகைச்சுவையாக அவரது வேலையை பற்றி குறிப்பிடுவது உண்டு" என்றார்.

Wednesday, 5 December 2018

BOOMERANG TO SPIN ITS WOWING SPELL

BOOMERANG TO SPIN ITS WOWING SPELL 
WITH WORLDWIDE RELEASE FROM DECEMBER 28 

Filmmaker Kannan and his entire team of ‘Boomerang’ have landed upon seventh heaven for a reason. The official confirmation pertaining to the worldwide release of their ambitious film on December 28 has kept them in gleeful mode. 

Feeling sublime invigoration over the release, director Kannan shares this joyful news saying, “We as an entire team of ‘Boomerang’ are so happy about getting our release date confirmed for December 28. It’s been a year of challenges for everyone in the team, especially for Atharvaa Murali, who took scrupulous efforts for three different looks in this movie. As a filmmaker and producer, I am so delighted that the entire team has stood beside me in shaping the project efficiently. I am sure; our unceasing hard work will be paid off well as New Year gift. Megha Akash and Indhuja will eventually have their stature escalated for their earnest work in this film.” 











He continues to shower his praises on others in the star-cast citing, “Upen Patel  didn’t want to compromise over giving the best shots. Although, he would be having someone to dub, he was keen on learning the Tamil dialogues and gave his flawless rendition during the shoot. Suhasini Maniratnam madam will appear in a significant character, which will add more substantiality to the tale. Both Satish and RJ Balaji will have equal prominence in not merely tickling our funny bones, but groovy roles too.” 

Boomerang features musical score by Radan, who had his glorious fame accomplished through magnum opus ‘Arjun Reddy’…. The visual treat by Prasanna Kumar involving his cinematographic composing of colours and grades will definitely offer a fresh experience for the audiences.  Filmmaker Kannan is producing Boomerang for his production home studio of Masala Pix.