Featured post

மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சில  திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த...

Friday, 30 May 2025

Icon Star Allu Arjun is rewriting history! From being the first Telugu actor to win a National Award

 *Icon Star Allu Arjun is rewriting history! From being the first Telugu actor to win a National Award to now bagging the prestigious Gaddar Award*



A name that's reverberating across the world, and his image is spreading like a wildfire everywhere. The one and only Icon Star Allu Arjun. He has scripted history by emerging as the very first Telugu actor to have won the national award. Allu Arjun was catapulted into the national spotlight thanks to Pushpa: The Rise, a film that transcended regional boundaries and captivated audiences all over the country.


Now, the Pushpa actor wins another accolade that made his name shine again. He won the prestigious Gaddar Telangana Film award. Gaddar Telangana Film Awards aims to honour and celebrate the cinematic brilliance of Telugu filmmakers and artists. It's a rare and roaring feat for Allu Arjun. His relentless efforts and his love towards cinema blessed him with millions of fans across the world, blockbuster successes, and now the prestigious accolades.


The Telangana government on Thursday announced the winners of the Gaddar Film Awards, with Allu Arjun being named Best Actor for his performance in the blockbuster Pushpa-2: The Rule. Icon Star is ruling the box office and hearts and bringing the honors. After Pushpa 2 stormed the Indian box office with a staggering 1900 CR+ global haul, this new honour marks yet another unforgettable milestone in his legendary journey.


Throughout Telugu-speaking states and beyond, he continues to attract fans with his magnetic charisma, exceptional acting skills, and remarkable journey. His epic cinematic journey from Gangotri to Pushpa was written by Allu Arjun himself with his own blood and sweat. His outstanding performances earned him several awards, including five Filmfare Awards, two Nandi Awards, and a Special Jury Award.


He is all set to rule Indian cinema with many more Iconic performances. Now, the national superstar is ready to create sensation with his next AA22xA6 directed by blockbuster filmmaker Atlee. The pre production has recently began and makers planning to start the shoot soon. The world is waiting.

வரலாற்றை திருப்பி எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற

 *வரலாற்றை திருப்பி  எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். !!*



*கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!*


உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.


இப்போது, அல்லு அர்ஜூன்,  கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில்,  இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.


தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம், முழுமையாக அவர் தன் இரத்தமும், வியர்வையும் செலுத்தி எழுதிய வரலாறாகும்.


ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இந்திய திரையுலகின் உண்மையான ‘ஐகான்’ ஆக விளங்குகிறார்.


இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் தனது அடுத்த திரைப்படமான AA22xA6 மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அல்லு அர்ஜூனின் திரை வருகைக்காக உலகமே காத்திருக்கிறது.

மோஹித் சூரி இயக்கத்தில், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா நடிப்பில்

 மோஹித் சூரி இயக்கத்தில், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  அழுத்தமான காதல் கதையான சையாரா திரைப்படத்தின் டீசரை யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது.




யஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய். ஆர். எஃப்) தயாரித்து, மோஹித் சூரி இயக்கத்தில் உருவான சையாரா திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஒய். ஆர். எஃப் மற்றும் மோஹித் ஆகியோர் மீண்டும் ஒன்றிணைவதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இருவரும் காலத்தைக் கடந்த காதல் திரைப்படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர்கள்.


அழுத்தமான காதல் கதையை கொண்ட சையாரா திரைப்படத்தின் டீசரை ஒய். ஆர். எஃப் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் மூலம் இந்தி திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமாகும் அஹான் பாண்டே மற்றும் அவருடன் அனீத் பட்டா (மேலும் மிகுந்த வரவேற்பை பெற்ற வலைத்தளத் தொடரான 'பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை'-இல் தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்) கதாநாயகியாக இணைந்து நடிக்கிறார்.


சையாராவின் டீசரை கீழே உள்ள லிங்க்கில் பார்க்கவும்:-


https://youtu.be/nF31d_f4n_A


'சையாரா' என்ற படத்தலைப்பை சார்ந்து மிகப்பெரிய ஆர்வம் நிலவியது மற்றும் படத்தின் டீசர் அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. சையாரா என்றால் வெறுமனே ஒரு உடல் என்று பொருள், ஆனால் கவிதைகளில் ஏதோ ஒன்றையோ அல்லது யாரோ ஒருவரைப் பற்றியோ கண்கூசச் செய்யக் கூடிய, வேற்றுலகைச் சார்ந்த ஒன்றைப் பற்றியோ விவரிக்கப் பயன்படுகிறது. நன்கு மிளிரக் கூடிய, தனித்து இருக்கக் கூடிய ஒரு நட்சத்திரம், எப்போதும் வழிகாட்டும் ஒன்றாக விளங்குகிறது.


ஒய். ஆர். எஃப், அதன் 50 ஆண்டுகால வரலாற்றில், முக்கியமாக யாஷ் சோப்ரா மற்றும் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் சில காதல் படங்களை இந்திய சினிமாவுக்கு வழங்கியதற்காக பெயர் பெற்றது. தற்போது சினிமாவில் தனது 20-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கும் மோஹித் சூரி, ஆஷிகி 2, மலாங், ஏக் வில்லன் உள்ளிட்ட மிகவும் சிறந்த காதல் காவியங்களையும் இயக்கியுள்ளார்.


சையாரா ஜூலை 18,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

Thursday, 29 May 2025

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும்

 *யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் 'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.*





'இராமாயணா' படத்திற்காக யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியது !! 


இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான 'இராமாயணா' படத்திற்காக,  ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: Fury Road, The Suicide Squad புகழ்) மற்றும் இந்தியாவின் 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் கைகோர்த்துள்ளார்கள்.


நடிகர் யாஷ், ராவணனாக நடிப்பதோடு, இப்படத்தின் இணை-தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம், பரந்த எதிர் நாயகனாக ராவணனை மிக பிரம்மாண்டமாகக் காட்டும். ஹாலிவுட் தரத்திலான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கும் நோக்கில், கய் நோரிஸ் இந்தியா வந்து வேலை செய்யும் நிலையில், யாஷ் இதில் நேரடியாக ஈடுபட்டு, இந்திய ஆக்சன் சினிமாவின் தரத்தை புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.


இராமாயணா பாகம் 1 க்காக யாஷ் 60–70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சமீபத்தில் வெளியான படப்பிடிப்பு புகைப்படங்களில், யாஷ் தனது உடல் அமைப்பை மாற்றி, ராவணனாக ஒரு வித்தியாசமான, மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்தத் தோற்றம், இந்திய ஹீரோக்களை உலகளவில் புதிய பார்வையில் காணச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.


இப்படத்தினை நிதேஷ் திவாரி இயக்குகிறார், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்கள். உலகத் தரத்தில் இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட் தர VFX, பிரம்மாண்டமான செட்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்களை ஒன்றிணைத்த ஒரு காட்சித் திருவிழாவாக உருவாகிறது.


'இராமாயணா பாகம் 1' – தீபாவளி 2026, மற்றும் பாகம் 2 – தீபாவளி 2027 வெளியாகவுள்ளது.

Actor-Producer Yash and Mad Max Stunt Director Guy Norris Shoot Massive Action Sequences

 *Actor-Producer Yash and Mad Max Stunt Director Guy Norris Shoot Massive Action Sequences for Namit Malhotra's Ramayana, First Image Out*





_Designed to blend myth, scale, and spectacle — actor-producer Yash joins hands with Hollywood’s legendary stunt director Guy Norris for one of the biggest Indian films in the making._


Ramayana has become one of the most anticipated spectacles in Indian cinema, and the buzz has only grown stronger as actor-producer Yash begins filming for the magnum opus, produced by visionary producer Namit Malhotra. Rocking Star Yash is all set to bring Ravana to life in a larger-than-life action arc, working closely with legendary Hollywood stunt director Guy Norris — celebrated for Mad Max: Fury Road and The Suicide Squad. The film promises to be a landmark in filmmaking— a mythological epic powered by top-tier talent, a world class VFX team, grand sets and an ensemble cast that brings this story to life.  


Norris is currently in India choreographing elaborate, high-octane action sequences tailored for the scale of Ramayana, with Yash’s character at the center of the storm. Known for his close involvement across all aspects of his projects, Yash is actively collaborating with the team to shape a visual spectacle that pushes the limits of Indian action cinema. He is slated to shoot for 60–70 days for Ramayana Part 1.


Recent images from the set reveal Yash in peak physical form — ripped, intense, and battle-ready. His transformation hints at a fierce, reimagined Ravana and a performance that could redefine how Indian action heroes are viewed globally.


Crafted to elevate Indian storytelling for a global stage, Ramayana brings together an extraordinary vision, a stellar ensemble, and world-class talent. With Yash not just leading from the front with Ranbir Kapoor, but also contributing as a co-producer, this is more than just a film — it’s a cinematic milestone in the making. He has been involved with the project from the start, lending his creative insight every step of the way.


Directed by Nitesh Tiwari and produced by Namit Malhotra’s Prime Focus Studios and Yash’s Monster Mind Creations, Ramayana Part 1 is slated for release on Diwali 2026, and the second part on Diwali 2027.

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

 *நடிகர் ராஜேஷ் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்*



நடிகர் ராஜேஷ் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: 


தமிழ் திரையுலகில் நடிகர் ராஜேஷ் அவர்கள் நடிப்பாற்றல் கொண்டவர், பேச்சாற்றல் மிக்கவர், தனித்தன்மை பெற்றவர், தனக்கென்று தனி முத்திரை பதித்தவர், பன்முகக் கலைஞர், பண்பு மிக்க உள்ளம் நிறைந்தவர், தமிழ் திரையுலகில் தமிழை நன்றாக உச்சரிக்கக்கூடிய அற்புதமான கலைஞர். 


அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய குடும்பத்தினருக்கும், கலையுலகத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


T. ராஜேந்தர், எம்.ஏ.

‍‍- இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் 


***

Jinn the Pet Movie Review

 Jinn the Pet Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம jin the pet படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு fantasy படம். இந்த திரைக்கதையை எழுதி தயாரிச்சு இயக்கி இருக்கிறது T R bala . இந்த படத்துல mugen rao வும் bhavya வும் தான் lead role ல நடிக்கிறாங்க இவங்கள தவிர  Bala Saravanan, Imman Annachi, Radha Ravi, Vadivukkarasi, Nizhalgal Ravi, Vinodhini Vaidyanathan, George Vijay, Rithvik ல நடிச்சிருக்காங்க. ஏற்கனவே T R Bala mugen அ வச்சு ஒத்த தாமரை ன்ற ஆல்பம் song அ direct பண்ணிருக்காரு. அப்போ தான் mugen அ வச்சு படம் எடுக்கறதா official அ சொல்லிருந்தாரு . இந்த படத்துல இருந்து இது வரைக்கும் 4 songs அ வெளி இட்டுருக்காங்க. இந்த படம் மே 30 த் அன்னிக்கு ரிலீஸ் ஆகா போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம். 



mugen ஒரு unlucky person அ இருக்காரு. இவரு நினைக்கிறதோ இல்லனா ஆசைப்படுறதோ எதுவுமே நடக்காது அதுனால ஒரு மந்திரவாதி கிட்ட போறாரு. இந்த மந்திரவாதி black magic அ பண்ணுறவரு. தான் நினைச்சதெல்லாம் நடக்கணும் னு mugen கேக்குறாரு அதுக்கு அந்த மந்திரவாதி ஒரு jinn அ குடுக்குறாரு. இதை வாங்கிட்டு ரொம்ப சந்தோசமா இருக்க ஆரம்பிக்குறாரு mugen . தன்னோட bucket list ல என்னனலாம் இருக்கோ அதெல்லாத்தயும் நிறைவேத்துறாரு. ஆனா இந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. ஆசை பட்டு mugen வாங்கிட்டு வந்த jin ஏ கடைசில இவருக்கும் இவரோட குடும்பத்துக்கும்  எதிரியா மாறிடுது. இந்த jin அ கடைசில எப்படி சமாளிச்சு mugen யும் அவரோட குடும்பம் தப்பிக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு. 


இந்த கதை malaysia ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. fantasy, mystery, magic, comedy னு எல்லாமே சூப்பர் அ balance பண்ணி கொண்டு வந்த interesting ஆனா கதைக்களம் தான் இது. இந்த படத்தோட கதை யா இருக்கட்டும் இல்லனா visuals அ இருக்கட்டும் ரெண்டுமே audience அ ஈர்க்கற விதத்துல அமைச்சிருக்கு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் entertaining அ இருக்குனு தான் சொல்லணும். இந்த படத்தோட highlighting  ஆனா scene  ந படத்தோட climax ல இந்த jinn terminator மாதிரியான ஒரு உருவத்தை எடுக்கும். அது பாக்கவே super அ இருக்கும். அப்புறம் இந்த படத்துல CGI அ use பண்ணிருந்தாங்க. அந்த scenes எல்லாமே ஒரு fantasy  கதைக்களத்துக்கு  பக்கவா குடுத்திருந்தாங்க னு தான் சொல்லணும். 

mugen rao ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமா நல்ல இருந்தது னு சொல்லலாம். இவரோட body language , dialogues எல்லாமே இந்த படத்தோட கதைக்கு highlight அ இருந்தது. bhavya ஓட நடிப்பும் அழகா இருந்தது. balasaravanan எப்பவும் போல அவரோட comedy role ல அசத்திட்டாரு னு தான் சொல்லணும். supporting actors அ நடிச்ச Vinodhini Vaidyanathan அப்புறம்  Vadivukkarasi  ஓட screen presence  கம்மியா இருந்தாலும் படத்துக்கு பக்க பலமா இருந்திருக்காங்க. இந்த படத்தோட villain அ நடிச்சிருக்க radha ravi ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திருக்காரு. 


படத்தோட creativity அப்புறம் ஒரு தனித்துவமான கதைகளத்தக்காகவே இந்த படத்தை பாக்கலாம். entertaining அ இருக்கணும் அதே சமயம் fantasy  கதைக்களமா இருக்கணும் நினைச்சிங்கன்னா இந்த படம் உங்களுக்காக தான். கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and friends ஓட சேந்து  theatre  ல போய் பாருங்க. இது ஒரு must  watch movie னு தான் சொல்லுவேன்.

Wednesday, 28 May 2025

Witness The Epic World, The Spectacular Adventurous Teaser Of Super Hero Teja Sajja,

 *Witness The Epic World, The Spectacular Adventurous Teaser Of Super Hero Teja Sajja, Karthik Ghattamaneni, TG Vishwa Prasad, Krithi Prasad, People Media Factory’s Pan India Film Mirai Unleashed, Theatrical Release On September 5th*



Super Hero Teja Sajja who previously captured nationwide attention with HanuMan is coming u with much bigger and ambitious project Mirai produced by the leading production house People Media Factory and helmed by director Karthik Gattamaneni. Backed by TG Vishwa Prasad and Krithi Prasad, the teaser of Mirai was unveiled today, leaving viewers across the country awestruck with its scale, visual aesthetics, and mytho-fantasy world-building.


The teaser ignites with a saintly voice, solemnly foretelling the rise of an unstoppable force- a raw, destructive energy born in the chaos of Kali Yug. Enters The Black Sword (Manoj Manchu), wielding powers beyond mortal reach and beginning his path of annihilation. But this time, it’s not the gods who intervene. It’s their weapon. That divine force is Mirai. Teja makes an entry as an unassuming warrior, clutching a mystical wand, burdened with unanswered questions. As his journey unfolds, he discovers the truth about his destiny, unlocking his hidden potential. In a battle where light and shadow collide, it’s his rise against evil that forms the soul of the story. The film has an unique and very fresh story line that has never been explored on the Indian Screens till date.


Teja Sajja, hailed as India’s youngest Pan-India star, roars onto the screen as the underdog-turned-Super Yodha, delivering a powerhouse performance. With magnetic screen presence and fearless execution of high-risk stunts, including a breath-taking action sequence atop a moving train, Teja Sajja proves he’s a force to reckon with.


Manoj Manchu stuns as the menacing antihero with dark powers. His commanding portrayal oozes intensity, making his every move feel like a seismic threat. The teaser also gives us a glimpse of key characters played by Ritika Nayak, Shriya Saran, Jayaram, and Jagapathi Babu.


Director Karthik Gattamneni pulls off a masterstroke with Mirai, blending epic storytelling with a grand visual spectacle. His vision is ambitious and vivid, from incredible action to the intricate character design. The teaser’s final moment, where monkeys bow in reverence as Lord Ram walks, is pure goosebumps material.


Karthik, who wields the camera, captures every frame marvellously, while Gowra Hari’s adrenaline-charged score elevates the experience to another level. The director also penned the screenplay, alongside Manibabu Karanam who also wrote dialogues. Sri Nagendra Tangala is the art director of the movie, whereas Sujith Kumar Kolli is the Executive Producer.


Backed by People Media Factory, the hitmakers behind Karthikeya 2 and Jaat, Mirai marks another massive leap into the Pan-India arena. The production values are absolutely world-class. What’s making waves isn’t just the VFX or cinematic canvas — it’s the revelation that Mirai has been made on an essential, controlled budget while still matching the grandeur of films typically made with hundreds of crore budgets. It’s a compelling reminder that true cinematic impact doesn’t always need blockbuster spending, just bold imagination and sharp execution.


Mirai, the film that has already set the bar sky-high with this teaser, storms into theatres on September 5th. The movie will have a global release in 8 different languages in 2D and 3D formats.


Cast: Super Hero Teja Sajja, Manoj Manchu, Ritika Nayak, Shriya Saran, Jayaram, Jagapathi Babu


Technical Crew:

Director: Karthik Gattamneni 

Producers: TG Vishwa Prasad, Krithi Prasad

Banner: People Media Factory

Executive Producer: Sujith Kumar Kolli

Music: Gowra Hari

Art Director: Sri Nagendra Tangala

Writer: Manibabu Karanam 

Editor: Sreekar Prasad

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media


 https://youtu.be/Uf6allM1yWc

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது

 *தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!*



இந்தியாவில் முதன்முறையாக ஒரு  அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!


ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான  “மிராய்” படத்தோடு வந்துள்ளார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர்  தயாரிக்கும், இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். காட்சியமைப்பிலும், ஃபேண்டஸி கதைக்களத்திலும் பிரம்மாண்டத்திலும் அசத்தும், 

டீசர் இந்தியா முழுவதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 




டீசரில் ஒரு முனிவரின் குரல், கலியுகக் களத்தில் பிறந்த கட்டுப்பாடற்ற சக்தியின் எழுச்சியைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கிறது. அந்த இருண்ட சக்தி தான் தி பிளாக் ஸ்வார்ட் The Black Sword (மனோஜ் மாஞ்சு), மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை கொண்டவர், அழிவுக்கான பயணத்தை தொடங்குகிறார். ஆனால், இந்த முறை கடவுள்கள் அல்ல; அவர்களின் ஆயுதமே எதிர்விளைவு தருகிறது. அதுதான் மிராய்.


தேஜா ஒரு எளிய வீரராக அரங்கேற்றமாகிறார் — ஒரு மர்ம வாய்ந்த சக்தி மிக்க ஆயுதத்துடன், அதன் பலம் குறித்த கேள்விகளுடம் தனது பயணத்தை தொடங்குகிறார். இருளுக்கு எதிரான போரில் தன்னுடைய சக்தியை வலிமையை கண்டடைகிறார், நியாயத்திற்கு உண்மைக்கு ஆதரவாக அவர் எழும் தருணமே கதையின் மையம்.


இந்தியாவின் இளம் பான் இந்தியா நட்சத்திரமான தேஜா சஜ்ஜா, ஒரு சாதாரண மனிதனில் இருந்து சூப்பர் யோதாவாக மாறும் ஹீரோவாக வெளிப்படுகிறார். ரயிலின் மேலே  செய்யும் சாகசம்  உட்பட, பல உயிர் அபாயம் நிறைந்த சாகசங்களை  துணிவுடன் செய்து, அவர் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரம் என்பதை நிரூபிக்கிறார்.


மனோஜ் மாஞ்சு ஒரு படு பயங்கர எதிர் நாயகனாக திகழ்கிறார். அவரது சக்தி வாய்ந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரிதிகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


கார்த்திக் கட்டமனேனி இயக்குநராக மட்டுமல்ல,  மிரட்டலான உலகை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். அவரது காட்சியை உருவாக்கும் திறமை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், அதிரடி சண்டைகள் — இவை அனைத்தும் திரைக்கதையை சிறப்பிக்கின்றன. டீசரின் கடைசி நிமிடத்தில், இராமர் வரும் தருணத்தில் குரங்குகள் தலைவணங்கும் காட்சி, நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கிறது. 


கேமராவை கையாண்டுள்ள கார்த்திக், ஒவ்வொரு பிரேமையும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் இசை அமைப்பாளர் கௌர ஹரி பின்னணி இசை, திரை அனுபவத்தை மேலோங்கச் செய்கிறது. மனிபாபு கரணம் வசனங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா கலை இயக்குநராக, சுஜித் குமார் கொல்லி நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.



கார்த்திகேயா 2 மற்றும் ஜாட் படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் தயாரிப்பில், மிராய் திரைப்படம் இந்திய அளவில் மற்றொரு பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. இப்படம் முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. வெறும் VFX பிரம்மாண்டமாக இல்லாமல் - மிராய் திரைப்படம் அத்தியாவசியமான, கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்களின் பிரமாண்டத்திற்கு இணையாக உள்ளது என்பதுதான் இதன் சிறப்பம்சம். உண்மையான சினிமா தாக்கத்திற்கு எப்போதும் பிளாக்பஸ்டர் செலவு தேவையில்லை, துணிச்சலான கற்பனை மற்றும் கூர்மையான செயல்படுத்தல் மட்டுமே தேவை என்பதற்கு  இது உதாரணமாக இருக்கும்.


இந்த டீசர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள "மிராய்" திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடியாக வெளியாகிறது. இந்த திரைப்படம் 8 வெவ்வேறு மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகளவில் வெளியிடப்படும்.


நடிகர்கள்: சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு


தொழில்நுட்பக் குழு: 

இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி 

தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் 

பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி 

நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி 

இசை: கவுரா ஹரி 

கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எழுத்தாளர்: மணிபாபு கரணம் 

எடிட்டர் - ஶ்ரீகர் பிரசாத்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் - ஹேஷ்டேக் மீடியா


https://youtu.be/Uf6allM1yWc