Featured post

ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின்

 *ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் அதிரடி டீசர் வெளியானது !!*  இயக்குநர் ஏ ஆர் மு...

Thursday, 29 May 2025

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

 *நடிகர் ராஜேஷ் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்*



நடிகர் ராஜேஷ் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: 


தமிழ் திரையுலகில் நடிகர் ராஜேஷ் அவர்கள் நடிப்பாற்றல் கொண்டவர், பேச்சாற்றல் மிக்கவர், தனித்தன்மை பெற்றவர், தனக்கென்று தனி முத்திரை பதித்தவர், பன்முகக் கலைஞர், பண்பு மிக்க உள்ளம் நிறைந்தவர், தமிழ் திரையுலகில் தமிழை நன்றாக உச்சரிக்கக்கூடிய அற்புதமான கலைஞர். 


அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய குடும்பத்தினருக்கும், கலையுலகத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


T. ராஜேந்தர், எம்.ஏ.

‍‍- இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் 


***

No comments:

Post a Comment