Featured post

Brand Blitz Entertainment presents* *Filmaker Bharath Mohan’s directorial

 *Brand Blitz Entertainment presents*  *Filmaker Bharath Mohan’s directorial* *Shanthu Bhagyaraj’s “Magenta” Teaser explores life and emotio...

Monday, 19 January 2026

Brand Blitz Entertainment presents* *Filmaker Bharath Mohan’s directorial

 *Brand Blitz Entertainment presents* 

*Filmaker Bharath Mohan’s directorial*

*Shanthu Bhagyaraj’s “Magenta” Teaser explores life and emotions* 




Actor Shanthnu Bhagyaraj has been one among the rarest actors, who has consistently flexed his best to explore his acting potentials. With every film, he has tried exhibiting his best acting nuances, and with slow and steadiness, he has carved a niche of excellence. The teaser of his upcoming film ‘Magenta’ distinctly radiates Shanthnu 2.0 as his expressions and screen presence are totally unique from his erstwhile movies. Kudos to director Bharath Mohan, who has crafted a perfect characterisation for the protagonist. Of course, Anjali Nair has achieved a magnetising charisma with her presence. 


The teaser has instantly garnered colossal response from the film enthusiasts, and the expectations have got decorous for the film’s release. 


The makers will be soon announcing the film’s trailer, audio and worldwide theatrical release date. 


Magenta is written and directed by Bharath Mohan, who earlier fascinated the cinema lovers with critically-acclaimed ‘Igloo’. The film is produced by Dr. JP Leelaram, Raju K, Saravanan B, Rekha L of Brand Blitz Entertainment, and is co-produced by Naveenraja KS. 


While Shanthu Bhagyaraj and Anjali Nair are playing the lead characters, the others in the star-cast include Archana Ravichandran, RJ Ananthi, Bucks, BadavaGopi, Sharath Ravi, Soundarya Priyan among others. 


Dharan Kumar is composing music for this film, which features cinematography by Ballu, editing Pavithran K and Art Direction by Prem Karuthamalai.

பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது

 *பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது!*




தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றி வருபவர் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். அவரது நடிப்பில் வரவிருக்கும் ’மெஜந்தா’ படத்தின் டீசரில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘சாந்தனு 2.0’ என கொண்டாடி வருகின்றனர். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சாந்தனுவை பார்க்கும் விதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. கதாநாயகனுக்கான சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் பரத் மோகன் வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை அஞ்சலி நாயரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 


படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உயர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘இஃக்லூ’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பரத் மோகன் ’மெஜந்தா’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். ‘மெஜந்தா’ படத்தை பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜெ.பி. லீலாராம், ராஜு, சரவணன் பா, ரேகா லீ தயாரித்திருக்க, நவீன்ராஜா இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார்.


இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆர்ஜே ஆனந்தி, பக்ஸ், படவா கோபி, சரத் ரவி, சௌந்தர்யா பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பல்லூ மேற்கொள்ள, படத்தொகுப்பை பவித்ரன் கே செய்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் கருந்தமலை பணியாற்றியுள்ளார்.

Sunday, 18 January 2026

திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா

 *திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்*



*கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர்*


திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.


கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. கலகலப்பான ஒரு ஆபிஸ் சூழலில் அனைத்தும் கலைந்து கிடக்கும் நிலையில், கேமரா மெதுவாக சுழன்று பின்னே நாற்காலியில் அமர்ந்த நிலையில்  பிரியங்கா மோகன் அறிமுகமாக,  இறுதியாக போஸ்டரில் காணப்பட்ட அதே லுக்கில் கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணியுடன் வீடியோ நிறைவடைகிறது.


இந்த அசத்தலான அறிவிப்பு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள்.


இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேண்டஸி – ரொமான்டிக் – காமெடி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.


இப்படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கவின் – பிரியங்கா மோகன் ஜோடி முதன்முறையாக இணைந்திருப்பதே ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சாண்டி மாஸ்டரும் இணைந்திருப்பது இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கலகலப்பான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும்

ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு

 *ஃபேண்டஸி காமெடி பிளாக்பஸ்டர் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியீடு!*



கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’  வெற்றிப்படமாக மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டமான விஷுவல் கிளிம்ப்ஸை பேஷன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் பிரம்மாண்டமான மாயாஜால காட்சிகள், நகைச்சுவை இந்தப் படத்திலும் இருக்கும் என்பதை உறுதியாகியுள்ளது. 


இதுகுறித்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது, “’மரகத நாணயம் 2’ தயாரிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  முதல் பாகத்தின் தீவிர ரசிகன் என்பதால் இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமானது. இந்தமுறை உலகளவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்னும் பல திறமையான நடிகர்களுடன் மிகப் பெரிய அளவில் முழுமையான அல்டிமேட் என்டர்டெய்னராக படம் உருவாகியுள்ளது” என்றார். 


‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தை ARK சரவண் இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் & K V துரை ஆகியோர் பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, RDC மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் கீழ் இணைந்து தயாரித்துள்ளனர். 


*நடிகர்கள்:* இந்தப் படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


இயக்கம் – ARK சரவண்,

இசை – திபு நினன் தாமஸ்,

ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்,

கலை இயக்கம் – என்.கே. ராகுல்,

படத்தொகுப்பு – திருமலை ராஜன் R,

வசனம் – ராஜேஷ் கண்ணன்,

சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்,

தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ். ஸ்ரீதர்,

உடை வடிவமைப்பு – ஏ. கீர்த்திவாசன்,

நடன அமைப்பு – ரகு தாபா,

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – மோகன் P,

தயாரிப்பு மேலாளர் – எஸ். பிரபாகர்,

ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா,

ஒலி கலவை – உதயகுமார்,

VFX – ரெசோல் FX,

VFX மேற்பார்வையாளர் – கிரண் ராகவன்,

மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC,

மக்கள் தொடர்பு– சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர்,

பப்ளிசிட்டி டிசைன் – வியாகி,

சட்ட ஆலோசகர் – எம்.வி. பாஸ்கர்.

MARAGADHA NAANAYAM 2 Visual Glimpse Drops — Fantasy Comedy Blockbuster Returns!

 *”MARAGADHA NAANAYAM 2 Visual Glimpse Drops — Fantasy Comedy Blockbuster Returns!”*



The 2017 fantasy comedy caper Maragadha Naanayam wasn't just a blockbuster, it was a rare phenomenon that redefined Tamil cinema's entertainment quotient with its magical adventures and non-stop hilarity. Now, Maragadha Naanayam 2 arrives with expectations skyrocketing since announcement day. Marking the occasion with a stunning visual glimpse, Passion Studios officially launches this sequel promising even bigger laughs, grander magic, and unstoppable fun.


Producer Sudhan Sundaram of Passion Studios shares: "I am delighted to produce Maragadha Naanayam 2, a project close to my heart as a massive fan of the original blockbuster. This is a prestigious endeavor designed to draw universal crowds to theaters with its magical entertainment. Like the first part, Aadhi and Priya Bhavani Shankar play the lead roles. Shot on a grander canvas with an expanded star-cast, we are committed to delivering the ultimate entertainer.”


Maragadha Naanayam 2, directed by ARK Saravan and produced by Sudhan Sundaram, Manish Singhal, Durgaram Choudhary, Dev & KV Durai  under Passion Studios, Dangal TV, RDC Media,  Axess Film Factory & Good Show, features Aadhi and Priya Bhavani Shankar in the lead roles, and the others in the star-cast includes Sathyaraj, Nikki Galrani Pinisetty,  Munishkanth, Anandaraj, Danie, Arunraja Kamaraj, and Muruganandam in pivotal roles.


Dhibu Ninan Thomas handles the music, PV Shankar cranks the camera, NK Rahul designs the art, Thirumalai Rajan R edits, Rajesh Kannan pens the dialogues, and PC Stunts choreographs the action.



*Star-cast* 


Aadhi 

Priya Bhavani Shankar

Sathyaraj

Nikkii Galrani Pinisetty

Munishkanth

Anandaraj

Danie

Arunraja Kamaraj 

Muruganandam


*Technical Crew*


Director- ARK SARAVAN

Music Director- DHIBU NINAN THOMAS

DOP - PV SHANKAR

Art Director- NK RAHUL

Editor-THIRUMALAI RAJAN R

Dialogue – RAJESH KANNAN

Stunts- PC STUNTS

Production Executive - SS SRIDHAR

Costume Designer – A. KEERTHIVASAN

Choreography – RAGHU THAPA

Executive Producer - MOHAN P

Production Manager - S PRABHAKAR

Sound design - SYNC CINEMA

Sound mixing - UDHAYKUMAR

VFX - RESOL FX

VFX Supervisor – KIRAN RAGHAVAN

Marketing & Promotion - DEC

PRO - SURESH CHANDRA-ABDUL A NASSAR

Publicity design – VIYAKI

Legal Advisor - MV BHASKAR

Saturday, 17 January 2026

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியீடு

 *கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியீடு*



கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த 'காட்டாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான கொண்டாட்டமாக மாறியது. ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். 


கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.  இதில் ரசிகர்களும், ஊடகத்தினரும், விருந்தினர்களும் கலந்து கொண்டனர். டீசருக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிரடியான ஆக்சன் காட்சிகளால் நிரம்பிய இந்த டீசர்-  ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவிற்கு திரில் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. இதுவரை கண்டிராத வகையில் பிரமிக்கத்தக்க வைக்கும் சண்டை காட்சிகள் இப்படத்தின் தனி சிறப்பாக இருக்கும் என்பதையும் இந்த டீசர் உணர்த்துகிறது. 


இந்த டீசரில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸ் அடர்ந்த வனத்தில் ஒரு யானையுடன் மோதும் காட்சிகள் நம்ப முடியாத வகையில் யதார்த்தத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் வி எஃப் எக்ஸ் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல்... ஒரு உண்மையான யானையை கொண்டு படமாக்கப்பட்டவை என்பதை மறுப்பு அறிக்கை (பொறுப்பு துறப்பு அறிவிப்பு) தெளிவுப்படுத்துகிறது. இந்த கதாபாத்திரம் ஆண்டனி வர்கீஸின் திரையுலக பயணத்தில் சக்தி வாய்ந்த- மாசான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


'காட்டாளன்' திரைப்படம் எதிர் வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடுகளில் இப்படமும் ஒன்றாக இருக்கும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். 


'ஓங்-பாக்' தொடரில் பணியாற்றியதற்காக சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளரான கெச்சா கம்பாக்டீ மற்றும் அவரது குழுவினரின் தலைமையில் தாய்லாந்தில் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 'ஓங் -பாங்' படங்கள் மூலம் பிரபலமான பாங் என்ற யானையும், 'காட்டாளன்' திரைப்படத்தில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது. டீசரில் காணப்படும் யானை சண்டை காட்சிகள் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ' காந்தாரா' மற்றும் 'மகாராஜா' போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் தென்னிந்திய படங்கள் மூலம் புகழ்பெற்ற பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இசை - இந்த திரைப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். சர்வதேச அளவிலான சினிமாவிற்கு இணையான காட்சி அமைப்பு - ஆக்சன் மற்றும் இசையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு முழுமையான மாஸ் ஆக்சன் திரில்லராக இருக்கும் என்று உறுதி அளிக்கிறது. 


'காட்டாளன்' திரைப்படம் ஏற்கனவே மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் வெளியிடப்படுவதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே வெளியீட்டுக்கான முந்தைய சாதனைகளையும் முறியடித்துள்ளது. ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு மலையாள திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் வெளிநாடுகளில் வெளியிடுவதற்கு 'காட்டாளன்' தயாராகி வருகிறது. அகில இந்திய பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான 'மார்கோ ' படத்திற்குப் பிறகு கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் இதுவாகும். முன்னதாக ஆண்டனி வர்கீஸ் ஸ்டைலான மாஸ் தோற்றத்தில் தோன்றும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. 


ஒரு பான் இந்திய படைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நட்சத்திர நடிகர் சுனில், கபீர் துஹான் சிங், 'புஷ்பா' புகழ் தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாஜ் , பாலிவுட் நடிகர் பார்த் திவாரி மற்றும் மலையாள திரையுலகை சார்ந்த ஜெகதீஷ், சித்திக் , வ்ளாகர் - பாடகர் ஹனன்ஷா, ராப்பர் பேபி ஜீன், ஹிப்ஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


திரைக்கதையை ஜோபி வர்கீஸ்- பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை உன்னி .ஆர் எழுதியுள்ளார் .இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 


தொழில்நுட்ப குழு: 


எக்ஸிகியூடிவ் புரொடியுசர் : ஜூமானா ஷெஃரீப் 

ஒளிப்பதிவு : ரெனாடிவ்

கூடுதல் ஒலிப்பதிவு: சந்துரு செல்வராஜ் 

இசை :  பி அஜனீஸ் லோக்நாத் 

படத்தொகுப்பு : சமீர் முஹம்மத் 

சண்டை பயிற்சி : கெச்சா கம்பாக்டீ - ஆக்சன் சந்தோஷ் 

தயாரிப்பு வடிவமைப்பு : சுனில் தாஸ் 

கிரியேட்டிவ் புரொடியூசர் : திலீப் தேவ் 

புரொடக்ஷன் கண்ட்ரோலர் : தீபக் பரமேஸ்வரன் 

ஒலிப்பதிவு : ராஜா கிருஷ்ணன் எம். ஆர். 

ஒலி வடிவமைப்பு : கிஷன் - சப்தா ரிக்கார்ட்ஸ் 

உடைகள் : தான்யா பாலகிருஷ்ணன் 

ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர் 

பாடலாசிரியர் : சுகைய்ல் கோயா 

புகைப்படம் : அமல் சி. சதார் 

நடனம் : ஷெரிப் 

வி எஃப் எக்ஸ் : 3 டோர்ஸ் 

ஓவர்சீஸ் டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் : பார்ஸ் ஃபிலிம்ஸ் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (S2 மீடியா) 

விளம்பர வடிவமைப்பு : எல்லோ டூத்'ஸ்


https://youtu.be/uxjIcg_Z5sc?si=RhWOpzBY63rTAeNG

Seeking to expand the services of his #VallalarEmploymentServiceMisson, which is credited with having helped over

 Seeking to expand the services of his #VallalarEmploymentServiceMisson, which is credited with having helped over 2.17 lakh youth secure direct employment in the private sector absolutely free of cost, actor @VijaySethuOffl inaugurated a job portal for the mission in Madurai today.  










The portal, vvvsi.in, will directly connect job-seeking youth and job-providing companies on one platform without any fee!

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி

 *இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி*










கட்டணமில்லா vvvsi.com வேலை  வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி*


கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்று, அந்த வாய்ப்புகளை நகர எல்லைகளைத் தாண்டி, கடைசி கிராமங்கள் வரை கட்டணமின்றி கொண்டு சேர்த்ததின் பயனாக, இதுவரை வேலைவாய்ப்பை அணுக முடியாத நிலையில் இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர இந்த இயக்கம் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. இதன் மூலம், பல குடும்பங்களில் பொருளாதார நிலைத்தன்மையும், சமூக முன்னேற்றமும் உருவாகியுள்ளது.


இதுவரை, இந்த இயக்கத்தின் மூலம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எந்தவித கட்டணமும் இன்றி, 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்களில் பெற்றுத்தந்துள்ளது என்பது, இந்த இயக்கத்தின் சேவை வீச்சையும், நம்பகத்தன்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


இந்த சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் உயரிய நோக்குடன், வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் கட்டணமின்றி ஒரே தளத்தில் நேரடியாக இணைக்கும் வகையில், vvvsi.com என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளம் இன்று மதுரையில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.


இந்த இணையதளத்தை சமூக அக்கறையும் மனிதநேயப் பொறுப்பும் கொண்ட நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொடங்கி வைத்து,


“ஒரு இளைஞனுக்கு வேலை கிடைப்பது என்பது அவன் குடும்பத்தின் எதிர்காலமே மாறுவது போன்றது. அந்த மாற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக, கட்டணமின்றி, வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தொடர்ந்து ஒரு உறுதியான பாலமாக இருந்து வருகிறது” என மனதார பாராட்டினார்.


மேலும், அந்த இயக்கத்தின் தலைவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வின்போது, இயக்கத்தின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். நிகழ்விற்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகளை, இயக்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வீரராஹவன் அவர்கள் முன்னின்று செய்திருந்தார்.


மனிதநேய சிந்தனையும், வள்ளலார் வழியிலான கருணை, சமத்துவம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட இந்த கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதள முயற்சி, இனி தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கையின் புதிய வாசலாக திகழும் என சமூக ஆர்வலர்களும் இளைஞர்களும் ஆழ்ந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி கெளரவித்த நடிகர் கார்த்தி

 *உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி*…











*விவசாயத் துறைக்கான அர்ப்பணிப்பை கொண்டாடிய ‘உழவர் விருதுகள் 2026’!**


விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகர் ரவி மோகன், நடிகை ரேவதி, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

இவர்களுடன் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில்,

சிறந்த விவசாயி விருது – கோவில்பட்டியைச் சேர்ந்த திருமதி பழனியம்மாள்,


சிறந்த வேளாண் பங்களிப்பு விருது – மதுரையைச் சேர்ந்த திரு. பாமயன்,


சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது – வேலூர் மக்கள் நலச்சந்தை,


நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது – திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு,


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது – குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு

விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி,

“நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம்.


நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்றார்.


இந்த விழாவில், வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், குப்பை மேலாண்மையின் அவசியம், விவசாயத்தில் பெண்களின் பங்கு, சிறு குறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளின் தேவை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.


மொத்தத்தில், விவசாயத்தைப் பற்றியும், அதில் உள்ள சவால்கள், அவற்றுக்கான அவசியமான முன்னெடுப்புகள் என்ன என்பதையும் அனைவருக்கும் முழுமையாக புரிய வைக்கும் நிகழ்ச்சியாக இந்த ‘உழவர் விருதுகள் 2026’ விழா அமைந்தது.