Featured post

Netflix Opens Eyeline Studios in Hyderabad, Anchoring Long-Term Investment in

*Netflix Opens Eyeline Studios in Hyderabad, Anchoring Long-Term Investment in India’sGrowing AVGC Sector*  Netflix today announced the laun...

Friday, 13 March 2026

இந்தியாவின் வளர்ந்து வரும் AVGC துறையில் நீண்டகால முதலீட்டை

 *இந்தியாவின் வளர்ந்து வரும் AVGC துறையில் நீண்டகால முதலீட்டை வலுப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ்( Eyeline Studios) தொடங்கிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்!*




நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய தயாரிப்பு மற்றும் இன்னோவேஷன் ஸ்டுடியோவான ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன் இந்தியாவின் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறையில் நீண்டகால முதலீட்டையும் குறிக்கிறது.


உலகளாவிய தயாரிப்பு மற்றும் புதுமை கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொடக்கம் அமைந்துள்ளது. மேம்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ், விர்ச்சுவல் புரொடக்‌ஷன் மற்றும் அடுத்த தலைமுறை தயாரிப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உலகளவில் இந்தியாவை முக்கிய மையமாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் ஐலைன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ, தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் இந்திய நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


32,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம், அதிநவீன விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஜெனரேட்டிவ் விர்ச்சுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்ப வசதிகளுடன், வலுவான ஹைபிரிட் கிளவுட் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் ஒத்துழைப்பு, படைப்பாற்றல் மற்றும் அவர்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் நவீன பணிச்சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸ், வான்கூவர், சியோல் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் இயங்கி வருவதை தொடர்ந்து ஹைதராபாத்தில் ஐலைன் ஸ்டுடியோஸ் ஐந்தாவது உலகளாவிய மையத்தை அமைத்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப காட்சியமைப்புகளுடன் உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்து செல்லும் வகையில் ஒருங்கிணைந்த தயாரிப்பு மையமாக இது செயல்படும்.தொடர்ச்சியான அரசுக் கொள்கை ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் மூலம் கிரியேட்டிவ் டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் தயாரிப்பில்  இந்தியா உலக அரங்கில் வலுப்படுத்தி வருகிறது.  ஐலைன் ஸ்டுடியோஸ் இந்திய அலுவலகம் தொடங்கப்படுவது உலகளாவிய தயாரிப்பு தரம், மேம்பட்ட கருவிகள் மற்றும் ஒருங்கிணைந்த பணிச்சூழலை நாட்டுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


இதுகுறித்து தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி பகிர்ந்து கொண்டதாவது, “ஐலைன் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனங்களை தெலங்கானாவுக்கு வரவேற்பதில் ஹைதராபாத் பெருமை கொள்கிறது. உலகளாவிய வாய்ப்புகளையும் திறமைகளையும் இணைக்கும் நகரமாக ஹைதராபாத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் உலகத் திறமைகள் ஒன்றிணையும் மையமாக எங்கள் நகரம் இருந்து வருகிறது. திரைப்படம், தொழில்நுட்பம் மற்றும் AVGC துறையில் ஹைதராபாத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐலைன் வருகை அமைந்துள்ளது” என்றார். 


தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு பகிர்ந்து கொண்டதாவது, “நான் வளர்ந்த இடத்தில் இது நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு ஜெஃப் என்னை சந்தித்தார். இது இவ்வளவு வேகமாக நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தரமான நல்ல கதைகளை கொடுப்பதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறோம். ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படைப்பு உருவான இந்த இடம் ஐலைன் ஸ்டுடியோஸ் தொடக்கத்திற்கு சரியான தேர்வு. தொழில்நுட்ப திறமை மற்றும் கதை சொல்லும் கலையில்தான் எண்டர்டெயின்மெண்ட் உள்ளது. AVGC இல் ஹைதராபாத் மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான முக்கிய ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஏற்கனவே ஹைதராபாத்தில் அலுவலகங்களைக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஐஐசிடி-க்கு இங்கு ஒரு வளாகம் உண்டு. பான்-இந்தியா திரைப்படங்கள் ஹைதராபாத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த அமைப்பு தொடர்ந்து வளரும்” என்றார்.


 தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, தொழில்கள் மற்றும் வணிக அமைச்சர் ஸ்ரீ. டி. ஸ்ரீதர் பாபு கூறியதாவது, “ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்திற்கு வரவேற்கிறேன். கதை சொல்லிகளின் தலைநகரமாக ஹைதராபாத் மாற வேண்டும் என்ற நமது மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இது ஒத்துப்போகிறது.இந்தியாவின் திறமையை நம்பி இங்கு தங்கள் தயாரிப்பை தொடங்க நெட்ஃபிலிக்ஸ் முடிவு செய்திருப்பது நமக்கு பெருமைமிகு தருணம்.மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான திறமையாளர்களை அரசாங்கம் தேடிவருகிறது. விஎஃப்எக்ஸ் மற்றும் அனிமேஷனில் பல திறமையாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். சிறந்த தொழில்நுட்பத்துடனும் ஐலைன் ஸ்டுடியோஸுடனும் உலகின் சிறந்த கதை சொல்லும் இடமாக நாங்கள் முதலிடத்தில் இருப்போம்” என்றார். 


தொடக்க விழாவின் போது நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி பகிர்ந்து கொண்டதாவது, “இங்கு வந்ததும் எனக்கு பல நல்ல பழைய நினைவுகள் வந்து போகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2005-2006 ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத்தில் இத்தகைய வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தன. அந்த நேரத்தில் டெட் சரண்டோஸ் தொழில்துறையுடன் இணையத் தொடங்கி இருந்தார். இன்று, ஜெஃப் ஷாபிரோ போன்றவர்கள் ஹைதராபாத்தினை படைப்பாற்றலின் எதிர்கால மையமாகப் பேசுவதைப் பார்ப்பது, ஹைதராபாத் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. பார்வையாளர்களின் ஆதரவும், திரைத்துறையினரின் முயற்சிகளும் இதற்கு காரணம். ஐலைன் ஸ்டுடியோஸ் வருகை திரைப்படத் துறைக்கு பெரிய ஆதரவாக இருக்கும். நடிகர்களாக, திரைப்படங்களில் பணியாற்ற அல்லது கதைசொல்லலில் பங்கேற்க விரும்பும் எவருக்கும் இந்த இடம் சிறந்த எதிர்காலம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன், அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பயணத்தை ஆதரித்த அரசாங்கத்திலும் மாநிலத் தலைமையிலும் உள்ள அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இதை அழகான பொழுதுபோக்கு நகரமாக மாற்றுவோம்” என்றார்.


ஐலைன் ஸ்டுடியோஸ் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ கூறியதாவது, “உலகளவில் விஷூவல் எஃபெக்ட்ஸ் துறையில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப நுட்பம் இணைந்த திறமைகள் இந்தியாவில் அதிகம் உள்ளது. வலுவான தொழில்நுட்ப அடித்தளம் மற்றும் திரைப்பட கலாச்சாரம் காரணமாக ஹைதராபாத்தை நாங்கள் தேர்வு செய்தோம். இங்கிருந்து உலகளாவிய கதைசொல்லலில் பங்காற்ற விரும்புகிறோம். இந்த தொடக்கம், இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் தயாரிப்பு மற்றும் கதை சொல்லல் மையமாக உலகளவில் உயர்த்தும்” என்றார்.

No comments:

Post a Comment