Featured post

One Man Movie Review

One Man Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம one man படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது, produce ப...

Saturday, 7 March 2026

காத்திருப்பு முடிந்தது

 *காத்திருப்பு முடிந்தது!*


*ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் வழங்கும் ஆதித்யா தரின் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் துரந்தர் பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் களமிறங்குகிறார் - டிரெய்லர் வெளியானது!*



பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை.


இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது.


ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண்ட் அஜய் சன்யாலாக மாதவன், மிரட்டும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பால் மற்றும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத் ஆகியோர் தங்களது பவர்ஃபுல்லான நடிப்பால் மிரட்டியுள்ளனர். தியேட்டர்களில் விசில் பறக்க வைக்கும் மாஸ் காட்சிகள், அதிரடி ஆக்‌ஷன் மற்றும் கூர்மையான வசனங்களுடன், இதுவரை காணாத பிரம்மாண்டமான ஒரு பழிவாங்கும் படமாக இது உருவாகியுள்ளது என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.


தைரியம் - எரிபொருள் - பழிவாங்குதல் என்ற வசனங்கள் இந்த இரண்டாம் பாகம் எந்த அளவிலான பழிவாங்கும் கதையாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறது.


ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ஆதித்யா தார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-வோல்டேஜ் ஸ்பை-ஆக்‌ஷன் திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தார் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பட்வா, உகாதி பண்டிகைகளை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமிக்க ஆதித்யா தாரின் இந்த பிரம்மாண்ட படைப்பு தயாராகி வருகிறது.


அடையாளம் தெரியாத மனிதர்களின் இந்த அதிரடி வேட்டை, 2026 மார்ச் 19 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தொடங்குகிறது.

No comments:

Post a Comment