Featured post

Vowels Movie Review

 Vowels Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vowels  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை  Hemanth Kumar, Dhilip Kumar,...

Saturday, 14 March 2026

Police Family Tamil Movie Review

 Police Family Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம police  family படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது பாலு. இந்த படத்துல  saravanan, காதல் சுகுமார், nisha dubey , surekha, rojan leon னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



dhana வா நடிச்சிருக்க saravanan powerful ஆனா local don. இவரு மத்த politicians ஓட எப்பவுமே சண்டைல தான் இருப்பாரு. அதுனால இவரோட family அ கொலை பண்ணிடுறாங்க. இங்க இருந்து தப்பிக்கிறதுக்காக dhana அவரோட பையன் vinoth அ கூட்டிட்டு மதுரை க்கு வந்துடுறாரு. இப்போ ஏதோ ஒரு சில காரணத்துக்காக vinoth அ ஒரு நாலு police officers போட்டு அடிக்கிறாங்க. இந்த police team அ lead பண்ணுறது SI raja. vinoth ஓட background அப்புறம் அப்பாவோட செல்வாக்கை பத்தி தெரிஞ்சஓடனே ஆள்நடமாட்டம் இல்லாத area வா பாத்து vinoth அ தூக்கி போட்டுடறாங்க. vinoth ஓட உடம்பு ல நெறய காயங்கள் இருக்கும், மயக்க நிலமைல தான் இருப்பாரு. ஆனா மறுநாள் vinoth இறந்து போய்ட்டாரு ன்ற செய்தியும் வருது. dhana க்கும் இந்த விஷயம் தெரிய வருது. vinoth அ கொன்னது அந்த police officers தான் னு நம்பி அவங்களையும் அவங்க குடும்பத்தையும் பழி வாங்க plan பண்ணுறாரு. அதே மாதிரி அவங்க family யையும் கொள்ள ஆரம்பிக்குறாரு. இருந்தாலும் police ஆழ அவரை ஒண்ணுமே பண்ணமுடில. என்னதான் police vinoth அ போட்டு அடிச்சிருந்தாலும் அவரை கொன்னுருக்க மாட்டாங்க. யாரோ ஒருத்தர் vinoth அ கழுத்தை நெறிச்சு கொன்னுருப்பாங்க. vinoth அ யாரு கொலை பண்ணா றத்தை விசாரிக்க ஆரம்பிக்குறாங்க police. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sub inspector அ நடிச்சிருக்க raja malasamy ஓட நடிப்பு மிரட்டலா இருந்தது. இவருக்கு இது தான் முதல் படமா இருந்தாலும் எதார்த்தமா நடிச்சிருக்காரு. ஒரு police officer அ இவரோட வேகம், சாதுர்யம், பழிவாங்குற எண்ணம், ஒரு அப்பாவா தன்னோட பொண்ணுக்கு ஏற்பட்ட அநியாயத்தை  பாத்து இவருக்கு ஏற்படுற கோவம், சோகம் னு எல்லாமே super அ நடிச்சிருக்காரு.   saravanan  local don அ நடிச்சிருக்காரு. villain  அ இருந்தாலும் தன் பையன் மேல வச்சிருந்த பாசம் னால இவரு எடுக்கற revenge தான் இந்த கதையை வேகமா நகர்த்திடு போகுது. kadhal sugumar ஓட character யும் நல்ல இருந்தது. heroine  அ நடிச்சிருக்க nisha dubey அவங்க role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. மத்த supporting actors ஆனா சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா னு இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது jeyakumar thangavelu ஓட cinematography கதைக்கு ஏத்த மாதிரி எளிமையாவும் characters ஓட வலியையும் அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. jaya k dass ஓட music அப்புறம் bgm இந்த கதைக்கு பக்க பலமா அமைச்சிருக்கு. m s selva ஓட editing யும் இந்த கதையை sharp ஆவும் crisp ஆவும் edit பண்ணிருக்காரு. 


police station ல விசாரணை நடத்தறோம் ன்ற பேர்ல நடக்கற கொலைகள் நம்ம எத்தனையோ படிச்சிருக்கோம். இதை பின்னணியா வச்சு தான் இந்த படத்தோட கதையை எடுத்திருக்காங்க. thriller , crime , suspense னு எல்லாமே இருக்கற அட்டகாசமான திரைக்கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment