Featured post

Kadhal Reset Repeat Movie Review

Kadhal Reset Repeat Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadhal reset repeat படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்க...

Friday, 6 March 2026

Vadam Movie Review

Vadam Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vadam படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Kenthiran.V . இந்த படத்துலVimal, Natraj, Sanashka Sri, Munishkanth, Naren, Indhumathi, Balasaravanan, Madhusoothan Rao, Deepa Shankarனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்தோட கதை ஒரு ஊர் ல நடக்கற மாதிரி காமிக்கறாங்க. ஊர் ல பெரிய மனுஷனா இருக்காரு naren . அடிமட்டுக்கு போற மாடுகளை காப்பாத்தி அதா நல்லபடியா பராமரிக்க செய்யுறாரு. அதா நல்ல படிய வளக்க அவரே ஒரு கோசாலையா வச்சு நடத்துறாரு. இவரோட பையன் தான் vimal . இவரும் அவரோட அப்பா மாதிரியே மாடுகளை காப்பாத்துறாரு. அப்படி தான் இவருகிட்ட உடல் குறைபாடுள்ள ஒரு கண்ணுகுட்டிய பாக்குறாரு. அந்த குட்டிய காப்பாத்தி அவரே சொந்தமா வளக்க ஆரம்பிக்குறாரு. அதா போஷாக்கா வளத்து மஞ்சுவிரட்டு போட்டில கலந்துக்க விடுறாரு. அந்த காளையும் எல்லா போட்டிலயும் ஜெயிச்சு vimal  க்கு பேர் வாங்கிக்குடுக்குது. 


இதுக்கு நடுவுல இந்த காளை hospital ல சிகைச்சை எடுத்துட்டு இருக்கும் இன்னொரு பக்கம் vimal க்கு ஒரு கொலை வழக்கு ல ஜாமீன் கிடைக்குது. இவரு court வளாகத்துல  இருக்கும்போது  இவரை கொலை செய்ய try பண்ணுறாங்க ஒரு கும்பல். இன்னொரு பக்கம் இவரோட வீட்ல வேலை செய்யுற ஒரு ஆளும் vimal அ கொலை செய்யா plan பண்ணிருக்காரு. இப்படி தொடர்ந்து சோகமான விஷயங்களை சந்திக்கிற vimal க்கு ஆறுதல் அ இருக்கிறது sanshka sree ஓட காதல் தான். இந்த காதலால் புத்துணர்ச்சி ஆகுறாரு vimal அதுனால மறுபடியும் மஞ்சுவிரட்டு ல பங்கேற்க ready ஆயிட்டு இருக்காரு. அதுமட்டுமில்ல இவரோட காளையும் இப்போ treatment க்கு அப்புறம் நல்ல நிலைமைக்கு வந்திருக்கும். இப்படி positive அ போகும்போது தான் இவரோட lover ஒரு surprise குடுக்கறாங்க. அது என்ன? அந்த அதிர்ச்சில இருந்தும் villain கிட்ட இருந்தும் தப்பிச்சாரா vimal ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஜல்லிக்கட்டு போட்டியை வச்சு நெறய தமிழ் படங்கள் வந்திருக்கு. ஆனா முதல் தடவையா வடமாடு மஞ்சுவிரட்டை பத்தி சொல்லிருக்காங்க. ஜல்லிக்கட்டை பத்தி ரொம்ப detailed அ இந்த படத்துல காமிக்கலானாலும், ஜல்லிக்கட்டுல இருக்கற மக்கள், அவங்களோட பெருமை, போட்டி, பொறாமை னு மனுஷங்களோட emotions அ எதார்த்தமா காமிச்சிருக்காரு director. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vimal ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமா இருந்தது. காளைமாடுகளை காப்பாத்துறது, மாடுகளை பராமரிக்கிறது, அதுங்க மேல பாசம் வைக்கிறது னு ரொம்ப emotional அ நடிச்சிருக்காரு. hero கிட்ட காளைமாடு இருந்தாலும் அவங்களும் மஞ்சுவிரட்டு போட்டி ல கலந்துக்கிட்டு mass காமிப்பாங்க ஆனா இதுல vimal அந்த மாட்டோட owner அ மட்டும் நடிச்சு mass காமிச்சிருக்காரு. sanshka sree ஓட நடிப்பும் அழகா இருந்தது. அழகுளையும் ஆபத்து இருக்கும் றத்தை இவங்க character அ பாத்து easy அ புரிஞ்சுக்கலாம். natti nadaraj , வெற்றி மட்டும் தான் கிடைக்கணும், தனக்கு எந்த போட்டியாளர்களும் இருக்கக்கூடாது ன்ற மனநிலை ல நடிச்சு அசத்தி இருக்காரு. munishkanth இதுவரைக்கும் comedy character ல நடிச்சிருப்பாரு ஆனா இந்த படத்துல ஒரு முக்கியமான character ல நடிச்சிருக்காரு. vimal ஓட அப்பாவா நடிச்சிருக்க naren , அம்மாவா நடிச்சிருக்க indhumathi, அத்தையா நடிச்சிருக்க  தீபா சங்கர், உறவினரா நடிச்சிருக்க  பால சரவணன், பகையாளியா நடிச்சிருக்க  மதுசூதனன் ராவ் னு இவங்க எல்லாரோட நடிப்பும் எதார்த்தமாவும் super ஆவும் இருந்தது. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematographer prasanna s kumar , மஞ்சுவிரட்டு போட்டியையும், அதோட களத்தையும் ரொம்ப தத்ரூபமா camera ல பதிவு பண்ணிருக்காரு. D imman எப்பவும் போல அவரோட songs and bgm இந்த படத்லயும் magic பண்ணிருக்கு. sabu joseph ஓட editing work இந்த கதைக்கு set யிருந்தது. audience கொஞ்சம் கூட bore அடிக்கத்தமாதிரி sharp அ edit பண்ணிருக்காரு. writer and director அ work பண்ணிருக்க கேந்திரன் ஒரு அட்டகாசமான கதையோட  commercial elements யும் சேத்து  மக்களுக்கு நல்ல கதைக்களத்தை கொண்டு வந்திருக்காரு.   சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment