Thursday, 1 October 2020

ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ்

ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான சைலன்ஸ் திரைப்படத்தின் நீ உணர்வோடு  என்ற உணர்ச்சிபூர்வமான பாடலை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.

டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஆர். மாதவன், மற்றும் அனுஷ்கா ஷெட்டி கதாநாயகர்களாக நடிக்க,
அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல்  நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.

மும்பை, இந்தியா, October 1, 2020 - ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்த தெலுங்கு த்ரில்லர் நிஷப்தம் (தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற தலைப்பில்) திரைப்படத்தின் நீ உணர்வோடு என்ற மென்மையான மற்றும் உணர்ச்சி ததும்பும் ஒரு பாடலை அமேசான் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்த இந்த பாடல், சாக்ஷி (அனுஷ்கா ஷெட்டி) சோகமான மனநிலையில் தனது வாழ்வின் மகிழ்ச்சியான நேரங்களை நினைத்து பார்ப்பது போல் அமைந்திருக்கிறது.  இந்த உணர்ச்சி ததும்பும் சோகப்  பாடலை தெலுங்கில் பத்ரா பாசின் பாடியுள்ளார், ராமஜோகய சாஸ்திரி பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு தமிழ் மற்றும் மலையாளத்திலும் நீ கனுபப்பா என்றே பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் சின்மயி ஸ்ரீபதா பாடியுள்ளார், கருணாகரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.  மலையாளத்தில் திவ்யா எஸ்.மேனன் பாடியுள்ளார்,  பி.கே ஹரிநாராயணன் பாடலை எழுதியுள்ளார்.
ப்ரைம் உறுப்பினர்கள் தெலுங்கு த்ரில்லர் படமான நிஷப்தத்தை ( தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற தலைப்பில்) இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் அக்டோபர் 2, 2020 முதல் பிரத்தியேகமாக ஸ்டிரீம் செய்ய முடியும். டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் மைக்கேல் மேட்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பாடலை இங்கே பாருங்கள்:
Tamil
https://youtu.be/r3Z07MH_Tv8

கதைச் சுருக்கம்:

செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி,
எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான
சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில்  சிக்கிக் கொள்கிறாள். துப்பறியும்
போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன
இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார்செய்கின்றனர். கடைசிவரை
யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு
த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.


ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் நிஷப்தமும் சேருகிறது.

 அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளிபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ். மைசெல் போன்றவற்றுடன் இந்திய படங்களான வி, குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, சி யூ சூன், பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.


ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் நிஷப்தம் திரைப்படத்தை எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து  கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.


ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-ல் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.


No comments:

Post a comment