Featured post

Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow.

 Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow Kollywood masala entertainer Har...

Friday 2 April 2021

தேசிய தொழில்நுட்ப கழகம் (என் ஐ டி டி), திருச்சியைச் சேர்ந்த

 தேசிய தொழில்நுட்ப கழகம் (என் ஐ டி டி), திருச்சியைச் சேர்ந்த 

இறுதி ஆண்டு பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் சிவம் நேகி, 
மற்றும் எஸ்.அனந்தநாராயணன் பொட்டி, இந்த ஆண்டு கேட்-2021 (GATE-2021) 
தேர்வில் அகில இந்திய தரவரிசை பட்டியலில் 8 மற்றும் 220 இடங்களைப் பெற்று 
சாதனை படைத்தனர். இந்த ஆண்டு  நாடு முழுவதும் கெமிக்கல் இன்ஜினியரிங் 
துறையில், 16705 மாணவர்கள் கேட்-2021 தேர்வை எழுதினார்கள்.
கேட் நுழைவு தேர்வு என்பது ஒருங்கிணைப்பு வாரியம் (NCB) - கேட், 
உயர்கல்வித்துறை, கல்வி அமைச்சகம் (MoE), இந்திய அரசு சார்பாக  இந்திய 
அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) பெங்களூரு மற்றும் பம்பாய், டெல்லி, 
குவஹாத்தி, கான்பூர், கரக்பூர், மெட்ராஸ் மற்றும் ரூர்க்கி ஆகிய ஏழு 
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி) இணைந்து நடத்தும் தேசிய 
தேர்வாகும். இந்த நுழைவு தேர்வில் தகுதி பெறுவது என்பது கல்வி அமைச்சகம் 
(MoE) மற்றும் பிற அரசு உதவித்தொகை / முதுகலை மற்றும் முனைவர் சேர்க்கை 
மற்றும் நிதி உதவி பெற ஒரு கட்டாயத் தேவையாகும். கேட் மதிப்பெண் சில 
பொதுத்துறை நிறுவனங்களால் (பி.எஸ்.யு) தங்கள் ஆட்சேர்ப்புக்காகவும், 
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களால் சேர்க்கைக்குப் 
பயன்படுத்தப்படுகிறது. கேட்-2021 மதிப்பெண் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 
நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.





சிவம் நேகி, கோவிட் முடக்கத்தின் போது  தனது 6 வது செமஸ்டர்  மார்ச் 
2020-ல் கேட் தேர்வுக்கான தயாரிப்புகளைத் தொடங்கினார். குறிப்பு 
புத்தகங்கள், குறிப்புகள் தயாரித்தல் மற்றும் சுய ஆய்வு, மாதிரி 
பரீட்சைகளை முயற்சிப்பது, அதிக மதிப்பெண்கள் பெற உதவியது என்பதையும் அவர் 
கூறினார். "கேட் நுழைவு தேர்வுக்கு தயாரிப்பது தொழில்நுட்ப அறிவை 
மேம்படுத்துவதோடு, நாடு தழுவிய போட்டித் தேர்வுகளை வழங்குவதில் 
மாணவர்களின் மன வலிமையை வளர்த்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். கேட் 
தேர்வில் நல்ல தரவரிசையைப் பெறுவது, நிச்சயமாக இந்தத் துறையில் உயர் 
படிப்பு மற்றும் நிறைய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.", என்றார் சிவம்.

அகில இந்திய தரவரிசை 220 ஐப் பெற்ற எஸ்.அனந்தநாராயணன் பொட்டியும் இதே 
எண்ணங்களை எதிரொலித்தார். அவர் தனது ஏழாவது செமஸ்டர் காலத்தில்   
செப்டம்பரில் 2020 தனது தயாரிப்பைத் தொடங்கினார். "கருத்துக்களை நன்கு 
புரிந்துகொள்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் நல்ல தரவரிசையை பெறுவதில் 
முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக  முக்கியமான பாடங்களைக் கவனம் செலுத்தி 
படிப்பது அதிக மதிப்பெண்களைப் பெற உதவுகிறது", என்றார் அனந்தநாராயணன்.

கெமிக்கல் இன்ஜினியரிங் துறையின் ஆசிரியர்களின் ஊக்கமும் ஆதரவும் 
கிடைத்ததாக இரு மாணவர்களும் குறிப்பிட்டனர். அதற்காக அவர்களுக்கு நன்றி 
தெரிவித்தனர். என்.ஐ.டி.டி-யில் உள்ள கெமிக்கல் இன்ஜினியரிங் 
பாடத்திட்டம் இந்த தேர்வுக்கான தயாரிப்பிற்கு பெரிதும் உதவியது என்றும் 
குறிப்பிட்டனர். மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் 
நன்றியைத் தெரிவித்தனர்.

சிவம் நேகி, பார்க் (BARC) நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை செய்ய 
விரும்புவதாகக் கூறினார். எஸ்.அனந்தநாராயணன் பொட்டி விரைவில் முதுகலை 
படிப்பைத் தொடர விரும்புவதாகக் கூறினார். இந்த இரண்டு சாதனையாளர்களைத் 
தவிர, மேலும் 9 மாணவர்களும் இந்தத் துறையிலிருந்து இந்தத் தேர்வில் தகுதி 
பெற்றனர்.
என் ஐ டி டியின் இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ், சாதித்தவர்களுக்கு 
தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வேதியியல் பொறியியல் 
துறையின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் பி.கலைச்செல்வி மற்றும் பிற 
ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் துணை ஊழியர்கள் ஆகியோர் அனைத்து 
மாணவர்களின் சாதனைகளையும் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment