Featured post

Vattakanal Movie Review

Vattakanal Review, Vattakhanal Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vattakhanal படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழ...

Tuesday, 17 August 2021

இருள் அரசன் ஓடியனின் திகில் சம்பவங்களை தாங்கி வரும் ‘கருவு

*இருள் அரசன் ஓடியனின் திகில் சம்பவங்களை தாங்கி வரும் ‘கருவு’*

*திகில் மர்மம் கலந்த த்ரில்லராக உருவாகும் ‘கருவு’*

*மோகன்லால் நடித்த ஒடியன் கதாபாத்திரத்தை மீட்டெடுத்துள்ள ‘கருவு’* 

*கருவு’ படத்தை ரசிகர்களின் பார்வைக்கு சுலபமாக்கும் மோகன்லால்*







ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’. இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளத்தின்  அடையாளங்களில் ஒன்றான மாந்திரீக மாயாஜால கலைகளின் இருள் அரசன் என அழைக்கப்படுபவன் தான் ஒடியன்..

 தங்களுக்குப் பிடிக்காத எதிரிகளை பயமுறுத்துவதற்காக இரவு நேரத்தில் மிருகங்களைப் போல தங்களது தோற்றங்களை மாற்றிக்கொண்டு அச்சுறுத்தும் ஒடியனின் உண்மையான வாழ்க்கை சம்பவங்களை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது  

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஒடியனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, ஒடியனைப் பற்றி எந்த குழப்பமும் இல்லாமல் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அந்தவகையில் இந்த ‘கருவு’ படமும் சற்றும் குறைவில்லாத மர்மம் மற்றும் த்ரில்லர் காட்சிகளோடு உருவாகியுள்ளது.

டோனி ஜார்ஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தின் திகில் மற்றும் த்ரில் காட்சிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரோஷன். பிரம்மிக்கும்படி எடிட்டிங் செய்திருக்கிறார் ஹாரி மோகன்தாஸ் 

முற்றிலும் புதியவர்களால் உருவான இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்,  மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம்  விரைவில்  வெளியாக உள்ளது.

*தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்*

ஒளிப்பதிவு ; டோனி ஜார்ஜ்
இசை ; ரோஷன்.
பாடல்கள் ; பிரசாந்த் J S 
படத்தொகுப்பு ; ஹாரி மோகன்தாஸ்.
கலை இயக்குநர் ; ஶ்ரீஜித் ஶ்ரீதரன் 
ஒப்பனை ; அனூப் சாபு
ஆடைவடிவமைப்பாளர் ; லாவண்யா.
முதன்மை இணைஇயக்குனர் ; சுக்ருத்.
தயாரிப்பு மேற்பார்வையாளர் ; வினோத் பரவூர். 
இரண்டாவது கேமராமேன் ; சரண்பெரும்பாவூர்.
ஸ்டில்ஸ் ; விஷ்ணு ரகு. 
டிஸைன்ஸ் ; அருண்கை 
மக்கள் தொடர்பாளர் A. ஜான்.
 
இந்த திரைப்பட நிறுவனம் அடுத்ததாக ‘பாம்பாடும் சோலை சம்பவங்கள்’ என்கிற மர்மம், கொலை பின்னணி கொண்ட திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறது. ‘தி நைட்’ எனும் த்ரில்லர் படத்தை இயக்கிவரும் ரங்கா புவனேஷ்வர் இப்படத்தை தமிழில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment