Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Wednesday, 16 February 2022

”ரங்கோலி” கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக

 ”ரங்கோலி” கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக 

 






K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் அவர்கள் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் ”ரங்கோலி” திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. .  

மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இசை- கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு- மருதநாயகம். மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

No comments:

Post a Comment