Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Friday, 11 February 2022

நடிகர் சீயான் விக்ரமின் 60வது பிளாக்பஸ்டர் வெளியீடான 'மகான்'

 நடிகர் சீயான் விக்ரமின் 60வது பிளாக்பஸ்டர் வெளியீடான 'மகான்' படத்தை கொண்டாடும் வகையில்,  ரசிகர்கள் இணைந்து  மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.


சீயான் விக்ரமின் 60வது படமான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு பிரைம் வீடியோவில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒருமித்தமாக பெரும்  பாராட்டுகளைப் குவித்து வருகிறது. திரையில் தீப்பொறி பறக்க  சீயான் விக்ரம் மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றியுடன் திரும்பியுள்ளார்.

சீயான் விக்ரம் அவர்களின் 60 வது படமான "மகான்" படத்தை கொண்டாடும் வகையிலும், சீயான் விக்ரம் அவர்களின் கடும் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரின் ரசிகர்கள் 60 பேர்  தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பல குழுக்களாகப் புறப்பட்டு, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று, தாங்கள் மிகவும் நேசிக்கும்  நடிகரின் 60வது திரைப்படத்தின் புகழை பரப்பி வருகின்றனர் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் மதுரை முழுவதுமான பகுதிகளில் பைக் ஓட்டி, சியான் விக்ரமின் அன்பையும் நேர்மறை எண்ணத்தையும் மக்களிடம்  பரப்பி வருகிறார்கள். இந்திய திரையுலகில் எவருடனும் ஒப்பிடமுடியாத, கதாப்பாத்திரத்திற்குள் புகுந்துகொள்ளும் சீயான் விக்ரமின்  திறமையான நடிப்பாற்றலை  பாராட்டுவதற்காக ரசிகர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.



"மகான்" திரைப்படம்  தற்போது பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும், கன்னடத்தில் மகா புருஷா என்ற பெயரிலும் பிரத்தியேகமாக உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
.
ஒரு தனி மனிதன் தனது சுதந்திரத்திற்கான தேடலில், அவன் குடும்பம் பினபற்றும் கருத்தியல் கொள்கைகளிலிருந்து  விலகிச் செல்லும் போது, குடும்பம் அவரை விட்டு வெளியேறுகிறது. அந்த மனிதனின் கதை தான்  மகான் படம். அவன்  தனது லட்சியங்களை அடைந்தாலும்,  தனது வாழ்க்கையில் தனது மகனின் இருப்பை இழக்கிறான். கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கிய நிலையில், வாழ்க்கை அவருக்கு தந்தையாகும் வாய்ப்பை வழங்குகிறதா? இந்த பரபரப்பான, அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக அவனது வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதே இந்தக் கதை.



No comments:

Post a Comment