Featured post

Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's

 Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Laand...

Monday, 31 October 2022

டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில்

 டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் (andhagan) திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடனபுயல் பிரபுதேவா இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமான உடனே அந்தகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அந்தகன் படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.

No comments:

Post a Comment