Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Thursday, 24 November 2022

மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்தில்

 *'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெறும் 'பாஸ் பார்ட்டி..' பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியீடு*


*'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து நடனமாடியிருக்கும் 'பாஸ் பார்ட்டி..' பாடல் வெளியீடு*



ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.


'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே. எஸ். ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.


வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையை காட்சிப்படுத்தி இருக்கிறார். மேலும் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களிலும் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு, காட்சிகளையும், நடனங்களையும் செதுக்கி வருகிறார்.


'பாஸ் பார்ட்டி..' பாடலுக்கான குறு முன்னோட்டம் வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, வைரலானது. மேலும் 'பாஸ் பார்ட்டி..' பாடல், இந்த ஆண்டின் தன்னிகரற்ற பார்ட்டி என கொண்டாடப்படும் இரவு விருந்துக்குரிய பாடலாகத் திகழும்.


'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத், 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மீதான தன்னுடைய அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடலை ராப் இசை பாணியில், இசையமைத்து, எழுதி, பாடியிருக்கிறார். 'பாஸ் பார்ட்டி..' பாடல், 'ராக் ஸ்டார்' டி எஸ் பி பாணியில் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய பாடலாக வெளியாகி இருக்கிறது. இதற்கு பின்னனி பாடகர் நகாஷ் அஜீஸ் மற்றும் பாடகி ஹரிப்ரியாவின் சக்தி மிக்க குரல்களும் இணைந்து இரட்டிப்பு இன்னிசையை வழங்கி இருக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடலுக்கான மெட்டை விறுவிறுப்பாகவும், முழு நேர பொழுதுபோக்கு அம்சங்களுடனும் உருவாக்கி இருப்பதால், இந்தப் பாடலை கேட்டவுடன் அனைவருக்கும் சக்தி பிறக்கிறது. ஆற்றல் தொற்றிக் கொள்கிறது.


இந்தப் பாடலுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி தன்னுடைய அற்புதமான நடன அசைவுகளால், பாடலை மேலும் அழகு சேர்த்திருக்கிறார். அவருடைய தோற்றமும், நடன அசைவும் வெகுஜன மக்களின் ரசனைக்குரியவை. இந்தப் பாடலில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியுடன் இணைந்து நடனமாடியிருக்கும் நடிகை ஊர்வசி ரௌத்லாவும், அவருக்கு இணையாக நடனமாடி ரசிகர்களை கவர்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை, நடன இயக்குநர் சேகர் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்.


இந்தப் படத்தில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியுடன், 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். கமர்ஷியல் அம்சங்களுடன் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி. கே. மோகன் இணை தயாரிப்பாளராகவும், ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.


கதை, வசனத்தை பாபி எழுத, இயக்குநர் கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரை கதையை எழுதியுள்ளனர். இவர்களுடன் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லூரி ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, நிரஞ்சன் தேவராமனே படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.


அனைத்து தரப்பு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி திருவிழா விடுமுறையில் வெளியாகிறது.


https://youtu.be/nsMhMQfD0V0

No comments:

Post a Comment