Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Saturday 26 November 2022

இளம்வயது இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் மற்றும்

 இளம்வயது இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் கிளாசிக் இசைகளில் திறமையானவர். கடந்த ஆண்டுகளில் அவர் மேற்கத்திய கிளாசிக்கல் பியானோ மற்றும் வயலின் ஆகியவற்றில் கடுமையான பயிற்சி பெற்றிருக்கிறார்.


மக்களிடையே புகழ்பெற்ற இசை வல்லுநரான பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்களின் மகனாக பிறந்ததால் இசை என்பது இவருடன் இருந்து தவிர்க்க முடியாதது. மேலும், கர்நாடிக் கிளாசிக்கல் வயலின் பயிற்சியை வயலின் வித்வானான ஸ்ரீ லால்குடி ஜி. ஜெயராமனிடம் பெற்றிருக்கிறார்.












இவ்வாறு அம்ரித்தின் பலம் பாரமரியமான இசைக்கருவிகளிலும் பிறவற்றிலும் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக அவர் கற்றுக் கொண்ட பலவிதமான இசைக்கருவிகளுடன் தனித்துவமான உலகளாவிய இசையை கொடுத்து வருகிறார். இதுதவிர, அம்ரித் புரொஃபஷனலான கலைஞர் மற்றும் கிராஃபிக் டிசைனிங்கில் வல்லுநர். இப்படி எல்லா வகையிலும் கிரியேட்டிவான வகையில் வலுவான களம் அமைத்து இருக்கிறார்.


ஒரு பாடகராக அம்ரித் சிங்கப்பூர், நியூயார்க்கில் லிங்கன் சென்டர்,

ஹாங்காங் பல்கலைக்கழகம், சென்னையில் ஒவ்வொரு ஆண்டு நடக்கும் இசைவிழா , டெல்லி மற்றும் மும்பையில் உள்ள சில இடங்கள் ஆகியவற்றில் இவர் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இசைத் தயாரிப்பாளர் மற்றும் கம்போஸராக அவர் புவி நாளுக்கான கீதம் உட்பட பலவற்றை உருவாக்கி உள்ளார். 


2020 ஆண்டிற்கான நெட்வொர்க் தர்தி மா என அழைக்கப்படுகிறது. இது ஒரு பிரம்மாண்டமான புராஜெக்ட். இதில் சங்ஜர் மாகாதேவன், கெளஷிகி சக்ரவர்த்தி, மகேஷ் கலே மற்றும் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் உள்ளிட்ட பல கலைஞர்கள் பல்வேறு நாடு களில் இருந்தும் பங்கேற்றார்கள்.


2021-ல் அம்ரித் 'மூன் சைல்ட்' என்ற ஆல்பத்தை தயாரித்து கம்போஸ் செய்து ஒருங்கிணைத்து இருக்கிறார். இது ஏழு இந்திய மொழிகளுடைய lullabies தொகுப்பு ஆகும். இதில் பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் பாடியிருக்கிறார். அவரது சமீபத்திய பல மொழிகளில் வெளியான புராஜெக்ட்டான 'ஜெகோ' ஒரு உண்மையான கலாச்சார இசையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 


தற்போது லைவ் சுற்றுபயணமாக இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கும் இசை நிகழ்வு பலதரப்பட்ட பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


மனசே பாடல் மனதின் உண்மைகளை படம் பிடித்து காண்பிக்கும்படியான உரையாடலுடனான பாடலாக அமைந்திருக்கிறது. இது 'self love' என்ற வகையிலும் அமைந்திருக்கிறது. பாடலாகவும் இசையாகவும் இந்த 'மனசே' பாடல் பலரது நினைவுகளுக்கு பிடித்ததாகவும் முணுமுணுக்கும் வகையிலும் வந்துள்ளது. லைவ் நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இது எனக்கு முக்கியமான பாடலும் கூட.


இந்த மனசே பாடல் பலவிதமான மியூசிகல் ஸ்டைலுடன் பாப் ஏஸ்தெட்டிக் உடன் பல விதமான இந்திய இசை அடுக்குகளுடன் அமைந்துள்ளது. கிடாரின் இசை, க்ளிக்ஸ், கைத்தட்டல்கள், முணுமுணுக்கும் சத்தங்கள் மற்றும் பலவற்றுடன் இந்தப் பாடல் பிண்ணப்பட்டுள்ளது. 


மனசே பாடல் அனைத்துத் தளங்களிலும் இந்த வருடம் அக்டோபர் மாதம் 28 ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ வெளியானதுக்குப் பிறகு வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. அதையும் கவனித்து ஆதரவு கொடுங்கள். 


அன்புடன் அம்ரித் ராம்நாத்

No comments:

Post a Comment