Featured post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம்

 *பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எ...

Monday 28 November 2022

திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி

 திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !!


பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள்.  


இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரமாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். லலிதா ஷோபி அவர்களும் பிகில் போன்ற பல முன்னணி திரைப்படங்களில் பணிபுரிந்து பிரபலமானவர் 






ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் 2012 நவம்பர் 23 அன்று இல்லற வாழ்வில் இணைந்தனர். தற்போது 10 வருடங்கள் கடந்துள்ளதை இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் என இரு குழந்தைகள்   இருக்கின்றனர்.

இவர்களின் 10வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment