Featured post

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups* As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inch...

Monday, 28 November 2022

ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்

 ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’

 120 அடி நீள ராட்சத  பாம்பு செய்யும் அட்டகாசம்  இந்திய சினிமாவில்  பார்க்காத ஆச்சரியம்

            

 “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது.

“கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குனர் வி.சி.வடிவுடையான், இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். 

வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு  சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் மல்லிகா ஷெராவத். ‘திருட்டு பயலே’,  ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக கலக்குகிறார். 











ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள ’பாம்பாட்டம்’ ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம், இந்திய சினிமாவில் இதுவரை பார்க்காத ஆச்சரியம். 

படத்தில் இன்னும் என்ன சுவாரஷ்யங்கள்? என்று இயக்குனர் வி.சி.வடிவுடையானிடம் கேட்டோம்.

“பொதுவா எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான்  ‘பாம்பாட்டம்’. அந்த சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள்தான் படத்தின் கதை, கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை டிராவல் ஆகும். இதற்கான செட், உடைகள், அந்தந்த காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் சூழ்நிலை என நிறைய மெனக்கெடல் இருந்தது. 

மும்பையில் பலகோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினோம். படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். குடும்பமாக வந்து ரசிக்கும் அளவுக்கு படத்தில் சுடச்சுட சுவாரஷ்யங்கள் இருக்கும். போர்க் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மும்பை தவிர,சென்னை, மைசூர் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.”என்ற இயக்குனர் படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா பார்த்துவிட்டு பாராட்டியதாக சொன்னார்.


‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர்  நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

இப்படத்தில் மேலும் ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை  - C.E.சண்முகம், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா,மக்கள் தொடர்பு – மணவை புவன், 

இணை தயாரிப்பு  - பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு  - V.பழனிவேல்.


விரைவில் பாம்பட்டதை திரையரங்கில் காணலாம்.

No comments:

Post a Comment