Featured post

ARC 33rd National Tenpin Bowling Championships

 ARC 33rd National Tenpin Bowling Championships  25th November – 30th November 2024 Amoeba, Church Street, Bangalore 2nd December 2024 Akaas...

Saturday, 19 November 2022

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில்

 *லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது*


லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய வெற்றிப் படங்களை அடுத்து தற்போது வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளது. அதில் அதர்வா முரளியின் ‘பட்டத்து அரசன்’ படமும் ஒன்று. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பத்தின் வெவ்வேறு விதமான உணர்ச்சிகள், செண்டிமெண்ட்ஸ், அழகான கிராமப் பின்னணி, விளையாட்டு மற்றும் ஆக்‌ஷன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி 100% எண்டர்டெயினர் படமாக வெளியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், குடும்ப ரசிகர்களுக்குப் பிடித்த விதமான படங்களை எடுப்பதில் இயக்குநர் சற்குணம் திறமையானவர். அந்த வரிசையில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படமும் நிச்சயம் கவனம் பெறும். 

 

அதர்வா முரளியின் அற்புதமான திரை அனுபவம், ராஜ்கிரணுடைய இரண்டு விதமான தோற்றங்கள், புத்திசாலித்தனமான நடிகர்கள் தேர்வு மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு எல்லாம் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தின் ட்ரைய்லரை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. ’பட்டத்து அரசன்’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதர்வா முரளியின் ஒவ்வொரு படத்தேர்வும் அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில், இந்தத் திரைப்படமும் அவரது திறமையையும் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விதமாகவும் அமையும். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை சற்குணம் இயக்க,  G.K.M. தமிழ்க்குமரன் (லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத் தலைவர்) இந்த படத்தை மேற்பார்வை செய்துள்ளார். 

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காலி, தெலுங்கு சத்ரு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். 


*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: ஜிப்ரான், 

ஒளிப்பதிவு: லோகநாதன் ஸ்ரீனிவாஸ், 

படத்தொகுப்பு: ராஜா முகமது, 

கலை இயக்கம்: அந்தோணி, 

பாடல் வரிகள்: விவேக்-மணி அமுதவன்-A,

ஆடை வடிவமைப்பு: நட்ராஜ், 

ஒப்பனை: சசி குமார், 

சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன், 

நடன இயக்குநர்: பாபி ஆண்டனி ஷெரிஃப், 

தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன்,

படங்கள்: மூர்த்தி மெளலி, 

நிர்வாகத் தயாரிப்பாளர்: நாராயணன்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)


Trailer - https://youtu.be/BopMbDpJmy0

No comments:

Post a Comment