Featured post

Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!

 *Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!* The release of Dunki Drop 4 has set the excitement at its peak to witne...

Monday 21 November 2022

தமிழ் திரையுலகின் பிதாமகர் ஆரூர் தாஸ் ஐயா அவர்கள்

 21.11.2022

இரங்கல் அறிக்கை

தமிழ் திரையுலகின் பிதாமகர் ஆரூர் தாஸ் ஐயா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் திரையுலக வரலாற்றில் அவர் செய்த சாதனைகள் அளப்பரியது. ஆயிரம் படங்களுக்கு மேல் தனது தமிழ் வசனங்களால் பெரும் புரட்சி செய்தவர் ஆரூர் தாஸ் ஐயா அவர்கள். 

அவரது வசனத்தில் வெளியான விதி படம் திரையை தாண்டி ஆடியோ கேசட்டுகளில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததை யாராலும் மறக்க முடியாது. தினத்தந்தி நாளிதழில் 50 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றை எழுதி தமிழ் திரைப்பட வரலாற்றையே பதிவு செய்த அயராத உழைப்பாளி  ஆரூர் தாஸ் ஐயா அவர்கள். 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கரங்களால் கலைமாமணி விருதை பெற்றவர். தமிழக அரசு சார்பில் கலைஞர் நினைவாக வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான கலைத்துறை வித்தகர் விருதை முதலில் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது தமிழ் திரைத்துறைக்கே கிடைத்த பெருமை.



ஆரூர் தாஸ் ஐயா அவர்கள் மறைந்தாலும் அவரது ஆழமான வசனங்களால் தமிழ் திரைத்துறை இருக்கும் வரை அவர் புகழ் நீடித்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ,தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும்     தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.                    

தென்னிந்திய நடிகர் சங்கம்

 

(M.நாசர்)

தலைவர்,

தென்னிந்திய நடிகர் சங்கம்.

No comments:

Post a Comment