Featured post

Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers*

 Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers* The monumental project featuring Icon Star Allu Arjun in...

Sunday, 27 November 2022

சில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் மது பாலகிருஷ்ணன் தயாரிக்கும்

 சில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் மது பாலகிருஷ்ணன் தயாரிக்கும் "டேலண்ட்" படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாம் வாரத்தில் கேரளாவில் தொடங்க உள்ளது.


இப்படம் முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது இதில் நாயகியாக ராசியா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு ,தினேஷ் ,கார்த்திக் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்...





தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும்

இப்படம் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் அலெக்சாண்டர்

இசை அம்ப்ரோஸ் நடனம் பிரான்சிஸ்....


இப்படத்தின் கதையை பற்றி இயக்குனர் கூறுகையில் ...


தேசிய அளவில் கால்பந்து விளையாட்டில் முன்னணியில் இருக்கும் தனது தந்தை சில சந்தர்ப்ப சூழ்நிலையால் உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் படுக்கையே கதி என்று வாழ்கிறார் அதனால்

தனது வறுமையை போக்கவும் அப்பாவைப் போல் தானும் ஒரு நல்ல கால்பந்து வீராங்கனையாகி நாட்டுக்கு பெருமை சேர்க்க  முயற்சிக்கும் கதாநாயகிக்கு

 அவள் எதிர்பாராத விதத்தில் பல இன்னல்கள்  வருகிறது அதனை மீறி நாயகி ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை என்கிறார் இயக்குனர்...


--

No comments:

Post a Comment