Featured post

CHALLANI'S DAIMOND FESTIVAL

 *CHALLANI'S DAIMOND FESTIVAL*  Challani Jewellers T.Nagar Celebrates Diamond Festival From 5th June To 15th June. The Inauguration Has ...

Monday, 14 November 2022

நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர்

 *நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் பைலிங்குவல் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம்*


முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணைந்திருக்கக்கூடியத் திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய தயாரிப்புச் செலவில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. பவன் குமார் வழங்ககூடிய இந்தத் திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். 




நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, நடிகர்  அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். கதையின் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் மகேஷ் மாத்யூ மாஸ்டரின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யா மற்றும் அரவிந்த் சுவாமி இருவரையும் திரையில் இணைந்து பார்ப்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டக் கூடிய ஒன்றாக அமையும். 


கீர்த்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று உள்ளனர். விறுவிறுப்பாக இதன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. 


இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் மூலம் நடிகர் நாக சைதன்யா நேரடித் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகிறார். இசையில் மேதைகளான தந்தை-மகன் இணை 'இசைஞானி' இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். 


*நடிகர்கள்:* நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சுவாமி, சரத்குமார், பிரியாமணி, சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், பிரேமி விஷ்வானந்த், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர். 


*தொழில்நுட்பக் குழு:*


கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு,

தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,

பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,

வழங்குபவர்: பவம் குமார்,

இசை: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா,

வசனம்: அபூரி ரவி,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D'One),

டிஜிட்டல் மீடியா: விஷ்ணு தேஜ் புட்டா

No comments:

Post a Comment