Featured post

“Enn Vaanam Neeye” – A Musical Ode to Every Mother

 “Enn Vaanam Neeye” – A Musical Ode to Every Mother Lyrical Music Video Launched Today “Enn Vaanam Neeye” is a heartfelt lyrical music video...

Wednesday, 23 November 2022

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா

மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்தும் இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா* 


*முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு மற்றும் மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்கு பகுதி மேம்பாடு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி டிசம்பர் 4 அன்று சென்னையில் துவக்கி வைக்கின்றனர்*


*கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி*








மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா மேற்கொண்டுள்ளார். 


முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு மற்றும் மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்கு பகுதி மேம்பாடு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் டிசம்பர் 4 அன்று சென்னை மியூசிக் அகாடெமியில் இந்நிகழ்வை துவக்கி வைக்கின்றனர். 


இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வென்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும். 


தமது கடைசி படைப்பை தலைசிறந்ததாக கண்டசாலா வழங்கினார். அதற்காக அவர் பகவத் கீதையில் இருந்து கவனமாக 100 வசனங்களைத் தேர்ந்தெடுத்தார். கண்டசாலாவின் பகவத் கீதை இசைப் படைப்பு யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.


அவரது நினைவாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் உலகமெங்கிலும் உள்ள 

பாரம்பரிய நடனக் கலைஞர்கள் காணொளி மூலம் அஞ்சலி செலுத்துவார்கள். 

இதில் இந்தியாவை சேர்ந்த அனைத்து வைகையான பாரம்பரிய நடனங்களும் இடம் பெரும். 


இந்த நிகழ்ச்சியில் 40 தேசிய விருது பெற்ற கலைஞர்களும், 60 மாநில விருது பெற்ற கலைஞர்களும் பங்குபெறுவார்கள். 


இதை தவிர உலகமெங்கும் உள்ள கலைஞர்களின் பிரதிநிதித்துவமும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். 


100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டசாலாவின் பாடல்களை பாடுவார்கள். இதற்காக பல்வேறு இசை பள்ளிகளில் பயின்ற 200 மாணவர்களில் இருந்து சிறந்த 100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 


நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக கலா பிரதர்ஷினியை சேர்ந்த கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்துவார்கள். 


இந்தக்குழு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், கதகளி, ஒடிஸ்ஸி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். 


நிகழ்ச்சியில் புத்தக வெளியீடும் இருக்கும், மேலும் கண்டசாலா நினைவு வாழ்நாள் சாதனை விருதுகள் மற்றும் கண்டசாலா கலா

பிரதர்ஷினி புரஸ்கார் வழங்கப்படும். 


உலகமெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதில் மூலம், பார்வதி ரவி கண்டசாலாவின் கலா பிரதர்ஷினி, 1998 முதல் இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களை உலகம் முழுவதும் பரப்பும் மற்றும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 10,000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் எண்ணற்ற துணைக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் பயனடைந்துள்ளனர்.


பார்வதி ரவி கலைமாமணி, நாட்டிய இளவரசி, பத்ம சாதனா, நாட்டிய மயூரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பயிற்சியாளர், நடன இயக்குநர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியர் ஆவார்.


நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கலை உலகில் வெற்றிகரமாக வளம் வரும் பார்வதி ரவி இளைஞர்களிடையே பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் முயற்சியில் அவரது அமைப்பான கலா பிரதர்ஷினி மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளார். 


**

No comments:

Post a Comment