Featured post

Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's

 Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Laand...

Thursday, 17 November 2022

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “கலகத் தலைவன்” படம் பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் !!! 


ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் உலகமெங்கும் நாளை நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. 







இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து,  தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 


நாளை நவம்பர் 18 ஆம் முதல் உலகமெங்குமுள்ள ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘கலகத் தலைவன்’.

No comments:

Post a Comment