Featured post

Indian Basketball Federation President Aadhav Arjuna has said that the 3x3

 *Indian Basketball Federation President Aadhav Arjuna has said that the 3x3 Senior National Championship Men & Woman 2023 will be held ...

Monday, 14 August 2023

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்  32-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தேசிய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர்சீதாராம் :-மருத்துவம் போன்று இன்ஜினியரிங் படிப்பதற்கு நீட் தேர்வு திட்டம் தற்போது வரை இல்லை என்று தெரிவித்தார்.*






சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்  32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.


சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தொழில் நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் 3504 இளநிலை பட்டதாரிகளுக்கும், 551 முதுநிலை பட்டதாரிகளுக்கும்,

104 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கினார்.


மேலும் பல்வேறு துறை படிப்புகளில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர் 47 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.


இதில் டிப்ளமோ மருந்தகத் துறையில் பயின்ற 9 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் :-  மாணவர்கள் தொடர்ந்து  தங்கள் இலக்கை நோக்கி பயணிக்கவும் உங்கள்  பாதையை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்திற்கு கல்வி அவசியம் என்றும் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி இந்தியா முழுக்க தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் தொடர்ந்து தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வித்தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வை போன்ற அவசியம் தற்போது வரை தொழில்நுட்ப துறைகளில் படிப்பதற்கு தேசிய தொழில்நுட்ப  கல்வி குழுமத்தின் சார்பாக

எந்தவித தேர்வு திட்டமும் இல்லை என பேட்டியளித்தார்.


சத்தியபாமா நிகர் நிலை  பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழாவில் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கினார்


இந்நிகழ்ச்சியில் சத்தியபாமா நிகர் நிலை  பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியாஜீனா ஜான்சன்,தலைவர் மேரி ஜான்சன் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment