Featured post

Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium

 Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium INA–GNG Partnership Brings 25 Global Experts to...

Sunday, 27 August 2023

காதலின் அழகிய தருணங்களை பேசும் " பரிவர்த்தனை

 காதலின் அழகிய தருணங்களை

பேசும் " பரிவர்த்தனை " 

















M.S.V. Productions சார்பில் பொறி. செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் பரிவர்த்தனை


இப்படத்தினை வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்:


வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது. "காதல் எப்போது வரும் எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை அந்த மாயவலையில் சிக்கிக்கொண்டவர்களின் மனப்பிரவாகம்தான் " இப்பரிவர்த்தனை படம் என்றார்.


மேலும் அவர் கூறும்போது நம் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள் எதுவென்றால் அது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகளோடவே படமாக்கியிருக்கிறோம்  என்றார்.


அத்தோடு கடந்த சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதை பழக்கவழக்கங்களை மட்டுமே பேசி கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்திற்கு மத்தியில் காதலையும் காதல் சார்ந்து ஏற்படக் கூடிய மன உணர்வுகளையும் மட்டுமே இப்படத்தில் பேசியிருக்கிறோம் என்றார்.


இப்படி காதலும் காதல் சார்ந்துமே உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு உயிர்கொடுக்கும் விதமாக இதன் நாயகன் நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்களான சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரியும், இவர்களுக்கு துணையாக தேவிப்ரியா, பாரதிமோகன் திவ்யாஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர்


மேலும் மூன்று காலகட்டங்களாக வரும் இப்படத்தில் பருவ வயதினராக மோகித், ஸ்மேகா ஆகியோரும், சிறு வயதினராக விதுன், ஹாசினி நடித்துள்ளனர்.


இப்படத்தினை மேலும் மெருகேற்றும் விதமாக இதன் படப்பிடிப்பு முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் தென்பகுதியான புளியஞ்சோலையில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளர் கோகுல், இசையமைப்பாளர் ரஷாந்த்அர்வின், எடிட்டர் ரோலக்ஸ், நடனம் தீனா, பாடல் VJP.ரகுபதி, மக்கள் தொடர்பு மணவை புவன் ஆகியோரோடு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இளமாறன்வேணு இணைஇயக்குனராக பணியாற்றியுள்ளார்.


 சமீபத்தில் இப்படத்திணை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்தின் இறுதி காட்சியை கண்டு வியந்து பாராட்டினர்

No comments:

Post a Comment