Featured post

நடிகர் வசந்த் ரவி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

 *நடிகர் வசந்த் ரவி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ...

Sunday 27 August 2023

கிக் திரைப்படம்

 *கிக் திரைப்படம்*

 


பார்வையாளர்களுக்கு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க வேண்டும் என்கிற ஒற்றை லட்சியம் தான் கிக் திரைப்பட உருவாக்கத்தின் பின்னால் உந்து சக்தியாக இருந்தது.  தமிழ் திரையுலகிற்குள் தனது வருகையின்போது  ஒவ்வொருவரின் முகங்களிலும் அளவற்ற சிரிப்பை பார்க்கவேண்டும் என்கிற இயக்குநரின் நோக்கம் ரொம்பவே தெள்ளத்தெளிவாக இருந்தது. இதனால் காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ பிறந்தது.

 


விளம்பர பட தயாரிப்பு உலகத்தை சுற்றியே இப்படத்தின் மையக்கருவும் திரைக்கதையும்  முற்றிலும் சுழல்கிறது.  ஒருவருக்கொருவர் போட்டியாக விளம்பர நிறுவனங்களை நடத்திவரும், தங்களுக்கென தனித்தன்மை வாய்ந்த முதன்மை கதாபாத்திரங்களான சந்தோஷ் மற்றும் நயனா இருவரின் பயணத்தை இந்த கதை பின்தொடர்கிறது. நயனா விடா முயற்சி கொண்ட உழைப்பாளி என்றாலும், மிகவும் புத்திசாலியான சந்தோஷிடம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறாள். சந்தோஷின் யுக்திகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அவனிடம் நேரடியாகவே சவால் விட அவள் தீர்மானிப்பது அருவியின் எழுச்சியை போன்ற தருணங்களுக்கு அவளை இழுத்து செல்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே அவர்களது தனித்தன்மையான சாரத்தை வெளிக்கொண்டு வரும் விதமாக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டு செழிப்பான நகைச்சுவையுடன் கதை நகர்கிறது.  அதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றால் மைகேல் ஜாக்சனின் தீவிர ரசிகராக தம்பி ராமையுள்ள நடித்துள்ளது தான்.

 

ஆரம்பம் முதல் இறுதி வரை நூறு சதவீதம் நகைச்சுவை அனுபவத்தை வழங்கி, இடைவிடாத சிரிப்புக்கு இப்படம் உத்தரவாதம் தருகிறது. தான்யா ஹோப் (நயனா), ராகினி திவிவேதி, கோவை சரளா, பிரம்மானந்தம், மன்சூர் அலிகான், மற்றும் தங்களது நகைச்சுவைக்காக நன்கு அறியப்பட்ட நடிகர்கள் குழுவையும் இப்படம் கொண்டுள்ளது. இசையமைப்புக்கு அர்ஜுன் ஜான்யா, ஒளிப்பதிவுக்கு சுதாகர் ராஜ், சண்டைக்காட்சிகளுக்கு ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டில்லோ, நடனத்திற்கு பூஷண் மற்றும் சந்தோஷ், படத்தொகுப்பிற்கு நாகூரான், கலை இயக்கத்திற்கு மோகன் என இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

 

*இயக்குநர் பிரசாந்த் ராஜ்*

 

ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்து திரைப்பட இயக்குநராக ஆகவேண்டும் என்பதற்காக அதிலிருந்து வெளியேறியவர் பிரசாந்த் ராஜ். 2009ல் இந்த முடிவை எடுத்ததும் அதற்காக தன்னை முழுமூச்சாக தயார்படுத்திக்கொண்டார். அவரது இயக்கத்தில்  முதல் படமாக வெளியான ‘லவ் குரு’ நூறு நாள் படமாக துவக்கத்திலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்தது. அதன் காரணமாகவே  அவர் ‘லவ் குரு பிரசாந்த்’ என்கிற பெயரில் பிரபலமானார். அடுத்தடுத்து கன்னட சினிமா ரசிகர்களுக்காக அவர் வழங்கிய உடைக்க முடியாத சங்கிலியாக வெளியான அவரது படங்களுடன் அவரது பயணம் தொடர்ந்தது. ‘கானபஜனா’, ‘விசில்’, ‘ஜூம்’, ‘தளபதி’ மற்றும் ‘ஆரஞ்ச்’ ஆகிய படங்கள் அவர் ஒரு நம்பகமான பொழுதுபோக்காளர் என அவரது மதிப்பை உறுதிப்படுத்தின. தற்போது நூறு சதவீத போழுதுபோக்குடன் உருவாகியுள்ள கிக் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் நுழையவேண்டும் என பிரசாந்த் எடுத்த முடிவு என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு படைப்பை தருவதன் மூலம் இலகுவான படங்களை கொடுப்பவர் என அவரது பெயரை பதிய வைப்பதற்காகத்தான்.

 

 

அவரது குறிப்பிடத்தக்க படங்கள் பின்வருமாறு ;

 

2009 - லவ் குரு

 

2010 - கானபஜனா

 

2013 - விசில்

 

2016 - ஜூம்

 

2018 - தளபதி

 

2018 - ஆரஞ்ச்

 

2023 - கிக் (தமிழ்)

 

 

*பார்ச்சூன் பிலிம்ஸ்*

 

பிரசாந்த் மற்றும் நவீன் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட பார்ச்சூன் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் 2009ல் அதன் பயணத்தை தொடங்கியது. நவீன் தயாரிப்பில் தன்னை இணைத்துக்கொள்ள, டைரக்சன் பொறுப்பை பிரசாந்த் கையில் எடுத்துக்கொண்டார். கன்னட திரையுலகில் தங்களது பணிகளை தொடங்கிய அவர்கள் இதுவரை ஏழு திரைப்படங்களை வெற்றிகரமாக தயாரித்துள்ளனர். 6 தொடர் வெற்றிகள் மற்றும் தமிழ் திரையுலகில் இப்போது ஏழாவதாக தயாராகி உள்ள ‘கிக்’ படம் ஆகியவை அவர்களது குறிப்பிடத்தக்க சாதனை பதிவுகளை காட்டுகிறது. தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் திரையுலகில் வரும் மாதங்களிலும் வருடங்களிலும் இன்னும் அதிகமான பங்களிப்பை தர விரும்புகிறது பார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். பலதரப்பட்ட கலைஞர்களுடன் ஏற்கனவே அவர்கள் கைகோர்த்துள்ள படைப்புகள் அடுத்தடுத்து தயாராக இருக்கின்றன. மேலும் கன்னட மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு உயர்தரமான சினிமா அனுபவங்களை தரும் தங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் விதமாக வரும் மாதங்களில் படங்களை உருவாக்க, விநியோகிக்க, மற்றும் குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களை அறிமுகப்படுத்த என சில யுக்தியான திட்டங்களையும்  வைத்திருகின்றனர்.

 

 

 Johnson Pro

No comments:

Post a Comment