Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Saturday, 19 August 2023

சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) மியூசிக்

சாய் தரம் தேஜ், ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya )  மியூசிக் வீடியோவை ராம் சரண் வெளியிட்டார்


நடிகர் சாய் தரம் தேஜ் மற்றும் நடிகை ஸ்வாதி ரெட்டி நடிப்பில்,  சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya )  மியூசிக் வீடியோவை, நவின் விஜய கிருஷ்ணா  இயக்கியுள்ளார். மியூசிக் வீடியோவை முன்னணி நட்சத்திர நடிகர் ராம்சரண் வெளியிட்டார். 


ப்ரோ திரைப்படத்தின் அட்டகாச வெற்றிக்குப்  பிறகு, நடிகர் சாய் தரம் தேஜ் மற்றொரு சுவாரஸ்யமான படைப்புடன் ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார்.  ஆனால் இந்த முறை ஒரு  அழகான மியூசிக் வீடியோவில் அசத்தியிருக்கிறார். சத்யாவின் ஆத்மா  ( Soul Of Satya )  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவில் நடிகை சுவாதி ரெட்டி இணைந்து நடித்துள்ளார். இந்த மியூசிக் வீடியோவை  சாய் தரம் தேஜின் உறவினரும் ஆர்ஆர்ஆர் திரைப்பட நட்சத்திர நடிகருமான ராம் சரண்  சமூக வலைதளங்களில் வழியே  வெளியிட்டார்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட  மியூசிக் வீடியோ, நாட்டின் மீது கொண்ட அன்பிற்காக நாட்டை காக்க,  தேசத்தின் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தடைகளை சித்தரிப்பதாக அமைந்துள்ளது.


மியூசிக் வீடியோ வெளியீட்டை அறிவித்த சாய் தரம் தேஜ் ட்வீட் செய்துள்ளதாவது, ", விதி அதன்  மேஜிக்கை மீண்டும் நிரூபித்துவிட்டது!!! எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும்  எங்கள் நட்பின் அடையாளமாக இருப்பவர், இப்போது நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய #TheSoulOfSatya உடைய பாடலை வெளியிடுகிறார். இந்த அற்புதமான மனிதரை எனக்கு அறிமுகப்படுத்தியற்கும் மற்றும் எங்கள்  மியூசிக் வீடியோவை  வெளியிட்டதற்கும் சரண் @AlwaysRamCharan நன்றி. @NawinVK நவீன் மற்றும் சத்யாவின் ஆத்மா படைப்பின் மொத்த குழுவிற்கும் இது மிகப்பெரும் பெருமை"


இந்த மியூசிக் வீடியோவை நவீன் விஜய் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், ஸ்ருதி ரஞ்சனி பாடி இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் ரவி இப்பாடலை தமிழில் எழுதியுள்ளார்.. தில் ராஜு புரொடக்ஷன்ஸ்  நிறுவனத்தின் கீழ் பாலகம் என்ற வெற்றிப் படத்தை தயாரித்த ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஹன்சிதா ரெட்டி இந்த படைப்பைத் தயாரித்துள்ளனர்.

சாய் தரம் தேஜ் சமீபத்தில் ப்ரோ படம் மூலம் 100 கோடி கிளப்பில் நுழைந்து மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளார். அவரது மாமா பவன் கல்யாண் படத்தில் அவர் இணைந்து நடித்ததால் இது சாத்தியமானது என்கின்றனர் திரைப்பட ஆய்வாளர்கள்.

https://youtu.be/YtgZRtxLyDg

No comments:

Post a Comment