*#AskSRK ரசிகர்கள் நிகழ்வில் ஜவான் படத்திலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும், “நாட் ராமையா வஸ்தாவையா” பாடலின் டீசரை ரசிகர்களுக்காக ஷாருக்கான் வெளியிட்டார்*
பாலிவுட்டின் கிங்கான், ஷாருக்கான் மீண்டும் தனது ரசிகர்களுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். கிங்கான் ஷாருக்கான் சமீபத்தில் #AskSRK அமர்வின் போது, அவரது நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான "ஜவான்" திரைப்படத்திலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும் 'நாட் ராமையா வஸ்தாவய்யா' பாடலின் டீசரை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிட்டார். ரசிகர்களுடன் மிக இயல்பாக இருக்கும் அவரது இந்த நடவடிக்கை இணையத்தில் பாரட்டுக்களை குவித்து வருகிறது .
'வந்த எடம்' ரசிகர்களால் கொண்டாடப்பட்டப் பாடல் மற்றும் 'ஹய்யோடா' என்ற ரொமாண்டிக் மெல்லிசைப் பாடல்களின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, SRK, தற்போது படத்தின் மூன்றாவது பாடலான ' நாட் ராமையா வஸ்தாவய்யா' பாடல் குறித்து ஒரு சிறு அறிமுகத்தை வெளியிட்டுள்ளார். இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளை கொள்வதுடன் மியூசிக் சார்ட்களில் முதன்மையாக இடம்பெற்று வருகிறது. ஜவான் படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்து வருகின்றன.
இந்த #AskSRK அமர்வின் போது, அடுத்த பாடலான 'நாட் ராமையா வஸ்தாவய்யா' பாடலின் டீசரை ஷாருக் வெளியிட்டு பின்வருமாறு எழுதியுள்ளார்..
"சரி நண்பர்களே, எல்லோரும் விரும்புவது போல் டிரெய்லரை உருவாக்கும் நேரம் இது @இப்போதைக்கு உங்களுக்காக TSeries & @anirudhofficial & @Atlee_dir …. “ நாட் ராமையா வஸ்தாவய்யா” பாடலின் டீசரை தந்துள்ளார்கள், @AntonyLRuben உங்களுக்காக டிரெய்லரை உருவாக்கி வருகிறார். அனைவரையும் நேசிக்கிறேன் இப்போதைக்கு பை #ஜவான்"
https://x.com/iamsrk/status/1695392900581106175?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA
டீஸர் ஒரு விதமான அதிர்வை வெளிப்படுத்துகிறது, சிறப்பான பொழுதுபோக்கு பாடலாக இருக்குமென்பதை உறுதியளிக்கிறது. இந்த டீசர், வரவிருக்கும் பாடல் தரப்போகும் இசை அனுபவத்தை, ஒரு சூறாவளியாக வெளிப்படுத்துகிறது, ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது.
“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
No comments:
Post a Comment