Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Wednesday, 30 August 2023

குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி

 குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக பேசும் 'ரங்கோலி'










கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் Kபாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் 'ரங்கோலி'. அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Rangoli Official Trailer - https://youtu.be/LohOGaqFw1g?si=sktaUtGqO_bMWzXc

அரசு பள்ளியில் மகிழ்ச்சியாக படிக்கும் சத்யா என்ற மாணவன் குடும்ப வற்புறுத்தலினால் தனியார் பள்ளிக்கு மாற்றப்படுகிறான். விருப்பமில்லாமல் செல்லும் சத்யா அந்த புதிய பள்ளியின் சூழலை எவ்வாறு எதிர்கொண்டான். அந்த தனியார் பள்ளிக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்த குடும்பம் எவ்வாறு அந்த பிரச்சனையை எதிர்கொண்டது என்பதையும் குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக இப்படம் பேசுகிறது.


தெய்வதிருமகள், மாநகரம், நிமிர் மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா, சாய்ஸ்ரீ, அக்ஷயா, அமித் பார்கவ் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  


சென்னை சுற்றியுள்ள பகுதிகள் குறிப்பாக ராயபுரம், காசிமேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் என பல பகுதிகளில் படிப்பிடிப்பை நடத்தியுள்ளனர். எட்டு தோட்டாக்கள், ஐரா, ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமுர்த்தி K.S இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு I.மருதநாயகம், படத்தொகுப்பு R.சத்யநாராயணன் மற்றும் கலை இயக்கம் ஆனந்த்மணி செய்துள்ளனர்.


'ரங்கோலி' திரைப்படம் செப்டம்பர் 1 ம் தேதி வெளியாக இருக்கிறது

No comments:

Post a Comment