Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Monday, 21 August 2023

புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு திரைக்கதையில் உருவாகும் புதிய

 புகழ்  இயக்குநர் கணேஷ் K பாபு  திரைக்கதையில் உருவாகும் புதிய திரைப்படம் “ரேவன்”  *






MG STUDIOS தயாரிப்பில், 

டாடா இயக்குநர் கணேஷ் K பாபு திரைக்கதையில் உருவாகும்   “ரேவன்”  படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் இனிதே துவங்கியது !!


MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர்  கணேஷ் K பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும்  “ரேவன்”  திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள,  எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.  



தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, S. S. லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில், 

ராக்ஃபோர்ட் என்ட்டெயின்மென்ட் முருகானந்தம்,  அருண் விஷ்வா, விநியோகஸ்தர் கோவை அரவிந்த் மற்றும் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, யாத்திசை இயக்குநர் தரணி ராஜேந்திரன், குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். 


மாறுபட்ட களத்தில் புதுமுகங்களின் தற்கால நவீன தலைமுறையின் கதை சொல்லும் திரைப்படமாக  “ரேவன்” படம் உருவாகிறது. டாடா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் கணேஷ் K பாபு கதை திரைக்கதை எழுத, அவரது இணை இயக்குநராக பணியாற்றிய, கல்யாண் K ஜெகன் இயக்குநராக அறிமுகாகிறார். 


அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில்,  நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் கே பாக்யராஜ், VTV கணேஷ், வீரா, இந்துமதி, பா.அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


ஒரே கட்டமாக  படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழுப்படப்பிடிப்பும் நடக்கவுள்ளது. 


“ரேவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


*தொழிழ் நுட்ப குழு விபரம்*


தயாரிப்பு நிறுவனம் - MG STUDIOS 

தயாரிப்பு - APV. மாறன், கணேஷ் K பாபு. 

இயக்கம் - கல்யாண் K ஜெகன்

கதை, திரைக்கதை - கணேஷ் K பாபு. 

ஒளிப்பதிவு - ரவி சக்தி 

இசை அமைப்பாளர் - மனு ரமீசன்

எடிட்டர் - கதிரேஷ் அழகேசன் 

கலை இயக்கம் - சண்முக ராஜா 

நிர்வாக தயாரிப்பு - மீனா அருணேஷ்

ஒலி வடிவமைப்பு - அருணாசலம் சிவலிங்கம் 

ஸ்டன்ட் - நைஃப் நரேன் 

டிசைன்ஸ் - விக்ராந்த் 

ஆடை வடிவமைப்பாளர் - காயத்திரி பாலசுப்பிரமனியன் 

ஸ்டில்ஸ் - குமரேசன் 

சிஜி - NxGen Media 

மக்கள் தொடர்பு - திருமுருகன்,  பரணி அழகிரி

No comments:

Post a Comment