Featured post

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

 *சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்க...

Saturday, 19 August 2023

கருணாநிதி நூற்றாண்டு விழா - உலக சினிமா விழா ஏற்பாடு

 கருணாநிதி நூற்றாண்டு விழா - உலக சினிமா விழா ஏற்பாடு!

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவின் அங்கமாக



சென்னை உலக சினிமா விழா வடிவமைக்கப்பட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விழாவில் திரையிட கலைஞர் வசனம் எழுதிய சிறப்பான காவியங்களை உரியவரிடம் உரிமை பெற்று திரையிடப்பட உள்ளது.

கலைஞரின் திரைக் காவியங்களை வீடியோ கேசட் மூலமாக முதன் முதலாக ஆவணப்படுத்தி உருவாக்கியவன் என்ற முறையில் கிட்டத்தட்ட 30 வயது குறைந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் என உலக சினிமா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


மேலும் கலைஞரின் திரை காவியங்கள் என்ற ஆவணப்பட கேசட்டை அவரது கோபாலபுரம் இல்லத்தில் வழங்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் அமர்ந்து உரையாடிய நிகழ்ச்சியின் கணங்களை அசை போட்டு மகிழ்ந்து வருவதாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டில் சமையலறையில் வைத்து சந்தித்து அந்த வீடியோ  கேசட்டினை வழங்கி பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.


கலைஞரின் திரை காவியங்களோடு

மீண்டும் பயணிப்பது என் வாழ்க்கையின்

மறக்க இயலாத தருணங்கள்.

சென்னை உலக சினிமா விழாவோடு இணைந்து இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment