Featured post

டிட்வா புயல் மழையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

 *டிட்வா புயல் மழையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி முன்னுதாரணமான பி டி செல்வகுமா...

Monday, 1 December 2025

டிட்வா புயல் மழையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

 *டிட்வா புயல் மழையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி முன்னுதாரணமான பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம்!*   


















பலத்த மழையில் நிவாரணப் நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான பி டி செல்வகுமார், டிட்வா புயல் தாக்கத்தினால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள் வைத்திருக்கிற, சாலையோரத்தில் அமர்ந்து காய்கறி வியாபாரம் செய்கிற ஏழை எளிய மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக களமிறங்கினார்.


இதற்கான நிகழ்வு, 1.12.2025 திங்கள் கிழமையன்று சென்னை முழுவதும் சிறிது நேரம் கூட விடாமல் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில் கோயம்பேட்டில் நடந்தது.


10க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு காய்கறி வியாபாரம் செய்வதற்கான தள்ளுவண்டிகள், நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கு ராட்சத குடைகள், பாய்கள், 200 பேருக்கு ரெய்ன் கோட்டுகள், போர்வைகள் என 500 பேருக்கு பலவித பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்ற பி டி செல்வகுமார், அந்த மக்கள் பயன்பெறும் வகையில் , ஏராளமான மக்களுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்தார்.


கோயம்பேட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பி டி செல்வகுமார், ''மழைக்காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் மழை பெய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் செய்வதே சரியாக இருக்கும். மழையெல்லாம் ஓய்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து செய்வது பயனுள்ளதாக இருக்காது. அதனால்தான் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மழைக்கால நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து செய்யும்'' என்றார்.


'கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதை வைத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா?' என்ற கேள்விக்கு,


''இப்போகூட பாருங்க. இந்தளவு கொட்டுற மழையில யாராச்சும் ஏழை எளிய மக்களுக்கு உதவ முன் வந்திருக்காங்களா? இல்லையே. ஆனா, நாங்க எதையும் பொருட்படுத்தாம இறங்கி சேவை செய்றோம். அப்படியெல்லாம் மக்களைப் பத்தி யோசிச்சு செயல்படுற நான் தேர்தல்ல போட்டியிட ஆசைப்படுறதுல தப்பில்லையே?


நாங்க இந்த மாதிரியான மக்களுக்கான சேவைகளை இன்னைக்கு நேத்து செய்யல. பத்து வருஷமா செய்துக்கிட்டிருக்கோம். அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறை, கலையரங்கம்னு கட்டிக் கொடுத்திருக்கோம். கஜா புயல் காலத்துல, கொரோனா காலகட்டத்துலன்னு பார்த்துப் பார்த்து மக்கள் சேவை செய்திருக்கோம். போன மாசம் பெண் ஆட்டோ ஒட்டுநர்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வாங்கிக் கொடுத்தோம். மக்களுக்கு சேவை செய்ற எத்தனையோ பேருக்கு முன்னுதாரணமா இருக்கோம். அதையெல்லாம் பார்த்து அவங்க பிரதிநிதியா என்னை தேர்ந்தெடுத்தா இதே சமூக சேவையை இன்னும் நல்லா செய்யலாம்'' என்றார்.


'நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் சேர்ந்திருக்கிறாரே? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு ''அவருக்கு 80 வயசு நெருங்குது. இந்த வயசுல அவரு என்னத்த செய்யப் போறாரு? விஜய் இதுவரை நடந்த ஆட்சிகளுக்கு மாற்றா, ஊழல் இல்லாத, சுத்தமான ஆட்சி நடத்த வர்றோம்னு சொல்றாரு. அப்படியிருக்கிறப்போ ஊழல் வழக்குல தண்டிக்கப்பட்ட செங்கோட்டையனை கட்சில சேர்த்திருக்கிறது சரியான அணுகுமுறையில்லைன்னு சொல்வேன். ஆதவ் அர்ஜுனாவும் குற்றச் செயல்கள்ல ஈடுபட்டவர்தான். அவரை மாதிரியான ஆட்களை கூட வெச்சுக்கிட்டா அவர் எதை அடையணும்னு நினைக்கிறாரோ அதை அடைய முடியாது.


ஒருத்தர கடசில சேர்க்குறதுக்கு முன் டிடெக்டிவ் வெச்சு அவர் யாரு, பேக்ரவுண்ட் என்னன்னு அலசி ஆராயணும். திறமையானவங்களா, இளம் வயதுக்காரர்களா, புதியவர்களா, பொருளாதாரம் தெரிஞ்சவங்களா, உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கத் தயாரா இருக்குறவங்களா பார்த்து கட்சில சேர்த்துக்கணும். அதை விட்டுட்டு குற்றவாளிகளை சேர்த்து வெச்சிக்கிட்டா நல்லதில்ல. இதோ பாருங்க, பணம் படைச்ச எத்தனையோ பெரிய பெரிய நடிகர்கள்லாம் இருக்காங்க. அவங்கள்லாம் செய்யாத நலத்திட்ட உதவிகளை நாங்க களமிறங்கிச் செய்றோம். எங்களையெல்லாம் விஜய் கண்ணுக்குத் தெரியாது'' என்றார்.


'வரும் சட்ட மன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திப்பீர்கள்?' என்ற கேள்விக்கு ''சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் அது பற்றி சொல்கிறேன்'' என்றார்.  


நிகழ்வை துவக்கி வைத்துப் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி கே வெங்கடேஷ் கலப்பை மக்கள் இயக்கம் கடந்த 10 வருடங்களில் ஆற்றிய சமூகப் பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.


அடை மழையிலும் விடாது மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.

மகிபால் சிங் சென்னை ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்!!

மகிபால் சிங் சென்னை ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்!!


Picture(L to R) Mahipal Singh and Benigopal L

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மகிபால் சிங், சென்னையில் உள்ள லெட்ஸ் போலில் நடைபெற்ற **சென்னை டைமண்ட்ஸ் 2வது சென்னை ஓபன் டென்பின் போலிம் சாம்பியன்ஷிப்பில்** பட்டம் வென்றுள்ளார்.

 

தலைவரை சவால் செய்யும் வடிவத்தின் அடிப்படையில் நடைபெற்ற ஓபன் டிவிஷன் இறுதிப் போட்டியில், இரண்டாம் சீட் பெனிகோபால் எல்., முதல் சீட் மகிபால் சிங்குக்கு எதிராக முதல் பந்தயத்தை (208-194) வென்றார், இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க இரண்டாவது பந்தயம் ஆடப்பட்டது. இரண்டாவது பந்தயத்தில், மகிபால் மூன்று தொடர் ஸ்ட்ரைக்குகளுடன் தொடங்கி 200 ரன் எடுத்தார், அதேநேரம் பெனிகோபால் 168 ரன்களே எடுத்தார். இதன் மூலம் மகிபால் சாம்பியனாகத் திகழ்ந்தார்!

இதற்கு முன்னர், ஸ்டெப்லேடர் சுற்றின் முதல் போட்டியில், மூன்றாம் சீட் ஆனந்த் பாபு (தமிழ்நாடு), நான்காம் சீட் நவீன் சித்தம் (தெலுங்கானா) ஆகியோரை (222–183) வீழ்த்தினார். அரையிறுதிப் போட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெனிகோபால் லஹோட்டி, ஆனந்த் பாபுவை (223 — 191) எளிதாக வென்றார்.

 


Picture (L to R): Double Divisio - Pervez A, Kishan R and Gurunathan, Soban

இரட்டையர் பிரிவில், கர்நாடகாவைச் சேர்ந்த பர்வேஸ் அஹ்மத் மற்றும் கிஷன் ஆர் (737 பின்ஸ்) ஆகியோர், தமிழ்நாட்டைச் சேர்ந்த குருநாத் மற்றும் சோபன் டி (735 பின்ஸ்) ஆகியோருக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை நெருடும் நிலையில், 2 பின்கள் வித்தியாசத்தில் வென்றனர். இரண்டு பந்தயங்களின் மொத்த பின்ஃபாலின் அடிப்படையில் ஆடப்பட்ட டைட்டில் போட்டியின் முதல் பந்தயத்தில், நான்காம் சீட் பர்வேஸ் மற்றும் கிஷன் ஆர் (386) மூன்றாம் சீட் குருநாத் மற்றும் சோபன் (385) ஆகியோரை 1 பின் வித்தியாசத்தில் விஞ்சினர். இரண்டாவது பந்தயத்தில், முன்னேற்றத்தைப் பெற இரு குழுக்களும் கடுமையாகப் போட்டியிட்டன, இறுதி சுற்றில் கிஷன் ஆர் அடித்த ஒரு ஸ்ட்ரைக், கர்நாடக குழுவிற்கு (351-350) பட்ட வெற்றியை நிச்சயித்தது.

 

 ​​​​   

Picture (L to R): Gurunathan and Anand Babu​​Picture (Lto R) Mohit C and Kushal KS

கிரேடு ஏ பிரிவில், முதல் 12 வீரர்கள் 8-பந்தயங்கள் கொண்ட மாஸ்டர்ஸ் சுற்றில் வெற்றியாளரைத் தீர்மானிக்க போட்டியிட்டனர். 8 பந்தயங்களின் முடிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த குருநாத் 1556 மொத்த பின்ஃபாலுடனும், 194.50 சராசரியுடனும் முதலிடத்தில் வந்தார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் பாபு 1544 மொத்த பின்ஃபாலுடனும், 193.00 சராசரியுடனும் இரண்டாம் இடத்தில் வந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த சதீஷ் ஏ.வி. 1485 மொத்த பின்ஃபாலுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

கிரேடு பி பிரிவில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மோஹித் சவுகான், 8 பந்தயங்களில் 1471 மொத்த பின்ஃபாலுடனும், 183.88 சராசரியுடனும் மாஸ்டர்ஸ் சுற்றில் வென்றார். டெல்லியைச் சேர்ந்த குஷால் கே.எஸ். 1429 மொத்த பின்ஃபாலுடன் (சராசரி 178.63) இந்த பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் ஆர். 1407 மொத்த பின்ஃபாலுடன் (சராசரி 175.88) மூன்றாம் இடத்தில் வந்தார்.

 

10 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 95 போலிம் வீரர்கள் கலந்து கொண்ட இந்த சாம்பியன்ஷிப்,  பன்னிரண்டு நாட்கள் நடைப்பெற்றது.

விடாத அடை மழையிலும் விடாது *கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்* செய்த உதவி

 *விடாத அடை  மழையிலும் விடாது *கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்* செய்த உதவிpp*


ரஜினி,விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் பொது மக்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்


















ரஜினி விஜய் உதவி செய்யுங்கள்  10-ஏழைகளுக்கு தள்ளுவண்டி 100 நடைபாதை ஏழைகளுக்கு ராட்சஷ குடை 200 பேருக்கு  ரெயின்கோட் ...

500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்....


டிட்வா புயல் மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வேலை செய்யும் பலரும் கண்ணீரும் கவலையாக இருந்து வருகின்றனர். அவர்களில் தொழிலை இழந்த 10 ஏழைகளுக்கு தொழில் செய்து முன்னேற காய்கறிக்கடை, இட்லி கடை வைக்க 10 பேருக்கு தள்ளு வண்டிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் புலி பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் வழங்கினார். 


மழையாலும், வெயிலாலும், தொழில் செய்ய முடியாமல் அவதிப்படும் 100-நடைபாதை ஏழை வியாபாரிகளுக்கு ராட்சஷ குடைகளும், 200-பேருக்கு ரெயின் கோட்டுகளும், 500 ஏழை மீனவ பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். இந்த மாதிரி தவிர்க்க முடியாத வேளையில் வேலை பார்க்க முடியாமல் தவிக்கும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகள் செய்வதை இறை தொண்டாக நினைக்கிறேன்.

கலங்கி நிற்பவர்களுக்கு கைகொடுங்கள் கடவுள் உங்களை உயர்த்துவார். பல ஏழைகள், தினசரி கூலிகள், நிலை குலைந்து உள்ளனர். இந்த மாதிரி கடினமான சூழலில் தொழிலாளிகள், விவசாயிகளுக்கு, பணம் படைத்த நல் உள்ளங்கள் உதவ முன் வாருங்கள். குறிப்பாக நடிகர் ரஜினி, கமல், விஜய் அஜித், த்ரிஷா, நயன்தாரா,போன்றோர்களை அதிரடியாக உதவி செய்ய அழைக்கிறேன். 


விடாத அடை  மழையிலும் விடாது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் செய்த உதவியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்

வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் 'ஆல் பாஸ்'

 வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் 'ஆல் பாஸ்' !


























அடிதடி, வெட்டு, குத்து,  அருவா - சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்லும்  படம்  'ஆல் பாஸ் '( ALL PASS ) 


வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில்

"ஆல் பாஸ் " (ALL PASS ) என்றொரு படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை மைதீன் இயக்குகிறார்.


ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்து வருகிறார்.


' நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.


பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


முக்கிய  கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும்

மாஸ்டர் ஸ்பைடர் சஞ்ஜெய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.


' பாண்டியநாடு', 'எதிர்நீச்சல்' போன்ற படங்களின் மூலம் பிரபலமான  சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, 'பாபநாசம்' படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், 'பைசன்' படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.  


'கலகத் தலைவன்', 'அண்ணாதுரை' , 'தகராறு' போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 


'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .


பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.


'பசங்க' படத்தின் படத்தொகுப்பாளர்       எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.


பிரபல நடன இயக்குநர் ராதிகா  நடனம் அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை  மெட்ரோ மகேஷ் அமைத்துள்ளார். 


ஒப்பனை - எல்.வி.ராஜா,

உடைகள் - ஏ.எஸ்..வாசன்,

ஸ்டில்ஸ் - அண்ணாதுரை,

விளம்பர வடிவமைப்பு - கிப்சன் UGA,

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்,

தயாரிப்பு - மோகனா. ஆர்.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.


படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,


" இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட்  கலந்த கதை கொண்டது.

வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.


அப்படி பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் அன்பு, பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று  பகிர்ந்து கொண்டு வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள். ஆனால்  இயற்கை அவர்களுக்கு ஒரு சோதனை வைக்கிறது. அது என்ன சோதனை?அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.


குடும்ப உணர்வுகளை சினிமாவில்  சொல்லிய அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த 'ஆல் பாஸ்' படமும் இருக்கும் "என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் மைதீன்.


படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் மற்றும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர். போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே  பார்வையாளர்களிடம் கவனம் பெற்று, பார்வைகளை அள்ளி  வருகிறது.