Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Tuesday, 20 October 2020

தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்

 தம்பி விஜயசேதுபதி,

ஒரு அற்புதமான மனிதர்.

இரக்க மனமும்,

ஈகை குணமும் கொண்டவர்.


தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர்.


அவரை நான் பார்த்ததோ, 

அவருடன் பேசியதோ

இல்லையென்றாலும்,

அவரைப்பற்றி என் காதுக்கு வந்த

நல்ல செய்திகள் ஏராளம்...



அவருக்கு என்ன அழுத்தங்களோ,

800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு...

இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார்.


இந்த ஒரு சம்பவத்தை வைத்து,

அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது,

எந்த வகையிலும் ஏற்புடையதல்ல...

இது தமிழனின் பண்பும் அல்ல.


தமிழ் உணர்வு என்று,

வசனம் பேசினால் மட்டும் போதாது,

தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும்.


தமிழ் உணர்வு என்பது அவசியம் தான்.

அதற்காக தரம் தாழ்ந்து,

அவரையோ, அவர் குடும்பத்தினரையோ

விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது...


தமிழ் உணர்வை விட, 

மனித நேயம் மேலானது.


மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின்

வாழ்க்கையை முழுமையாக

படித்தவர்களுக்கு இது புரியும்...


- Actor Rajkiran

No comments:

Post a Comment