Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Friday, 2 October 2020

கல்லூரி மாணவர்களின் கருத்துள்ள

*கல்லூரி மாணவர்களின் கருத்துள்ள குறும்படம் 'கலை'!*


லிசெட், லயோலா  கல்லூரி மாணவர்கள் 'கலை' ௭ன்னும் குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.


இந்த ஐந்து நிமிட குறும்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சாம் க்ளைட்டஸ்,ஒளிப்பதிவு -மெர்வின் ராஜ் ,கதை -தேவா,இசை - அருள் விக்டர் ,எடிட்டிங் -ஆலன் ஜேக்கப், PRO ஜான்சன் .


ஆழ்ந்த உணர்வும் , சமுதாய நலனும் கருதி , இச்சூழலில் மிக முக்கியமாக ஆலோசிக்க வேண்டிய நிகழ்வை 'கலை' குறும்படம் மூலம் சிறப்பாக பதிவு செய்த  ‘லிசெட் , லயோலா கல்லூரி  மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
குவிகின்றன.


மாற்றத்தை ஏற்க முயலாமல், பாகுபாட்டை ௭திர்க்க இயலாமல் தவிக்கும் விளிம்புநிலை சமுதாயத்தின் ௨ண்மை நிலையை ௭டுத்துரைக்கும் 'கலை' குறும்படத்தைப் பதிவு செய்துள்ள ‘லிசெட் , லயோலா மாணவர்களுக்கு  பாராட்டுகள் பெருகி வருகின்றன.


குறிப்பாக
"நிராகரிப்பு, தவறான கருத்துக்கள் சூழ்ந்த இச்சமூகத்தில், ௭திர்கொள்ளுதலின் ஏக்கத்தை தெரிவிப்பதாக 'கலை' ௮மைந்துள்ளது "என்று பார்த்தவர்களால் பாராட்டப்படுகிறது.

இன்று விஞ்ஞானத்தில் எவ்வளவு முன்னேறினாலும் சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் போது சமுதாயத்தில் அவர்கள் எந்தத் தட்டில் இருக்கிறார்கள் என்பதை அனிச்சையாக அறிய முயல்வதும் அதற்கேற்ப எதிர்கொள்வதும் நடக்கிறது என்பதைச் சொல்கிறது இக்குறும்படம்.

'நாங்கள் யாரென்று நீ தெரிந்து கொண்டால் மட்டுமே நீ எங்களை எவ்வாறு பார்க்கிறாய் என்று உனக்கே புரியும்' என்று பலமான வசனங்கள் இடம்பெறும் குறும்படம்.

காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது .ஆட்கள் மாறினாலும் அரசியல் மாறாது. அடித்தட்டு மக்கள் வாழ்க்கை அப்படியேதான் இருக்கும் என்று சொல்கிறது படம்.


No comments:

Post a Comment