Featured post

44 படங்களை ரிலீஸ் செய்த ATM மதுராஜின் 45 ஆவது படமாக

 44 படங்களை ரிலீஸ் செய்த ATM மதுராஜின் 45 ஆவது படமாக அஜித்குமார் நடித்த "பில்லா" ரீ ரிலீஸ் ஆகிறது. டிஸ்டிபியூட்டராக தமிழ்சினிமாவிற...

Wednesday 21 April 2021

பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள்,இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள்,பிறக்கும்

                                             மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்

பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள்,இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள்,பிறக்கும் குழந்தைகள்  உள்ளிட்டோருக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகிறன.ஒரு மருத்துவமனையின் ஆதாரமே இந்த ஆக்ஸிசன் சிலிண்டர்கள் தாம்.

Click here for video : https://youtu.be/L3OYU4YDUVI

ஆனால் நம் நாட்டில் அந்த அளவிற்கு ஆக்ஸிசன் உற்பத்தியும்,ஆகஸிசன் சிலிண்டர்களும் கையிருப்பில் உள்ளனவா?அப்படியே கையிருப்பில் இருந்தாலும் ஆக்ஸிசன் நிரப்பும் மையங்கள்,அவற்றை உடனடியாக மருத்துவமனைகளுக்கு  கொண்டு செல்லும்  வசதிகள் இந்தியாவில் உள்ளனவா என்றால் அதற்கு பதில் இல்லை என்பது தான் வேதனை.

அந்த அளவு முக்கியத்துவமுள்ள இதே ஆக்ஸிசன் பற்றாக்குறையால் 2018 ஆம் ஆண்டு உத்திரபிரதேசம் BRD மருத்துவமனையில் சுமார் 70 குழந்தைகளை பலி நாம்  கொடுத்திருக்கிறோம்.













2019 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் ராஜஸ்தான் ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிசன் பற்றாக்குறை காரணமாக 100 குழந்தைகளை பறி கொடுத்திருக்கிறோம்.

இந்த கடந்த கால வலிகளிலிருந்து இந்த இக்கட்டான கொரோனா பேரிடர் காலத்திலாவது  இந்திய மருத்துவ துறை பாடம் கற்றுக் கொண்டிருக்கிறதா என்றால் அதற்கும்  இல்லை என்பது தான் பதில்.

ஒரு சிறிய பட்டியலை மட்டும் கொடுக்கிறேன்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவில்  பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ....
உயிரிழப்பவர்கள்.....
பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளோரை மீட்க அத்துணை பேருக்கும் ஆக்ஸிசன் உதவி தேவை படுகிறது.
ஆனால் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிசன் சப்ளை போதுமான அளவிற்கு இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை.

சரி அந்த சப்ளையை உறுதி செய்து கொள்ள அரசின் அணுகு முறை எப்படி இருக்கிறது.
ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.

மகாராஷ்ட்ராவில் அந்த அரசாங்கத்தால்  கொரோனா பாதிப்பு கைவிட்டு போன நிலை.
மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.பாதிப்பு முற்றிய நோயாளிகள், ஆம்புலன்சிலும்,மருத்துவமனை வராண்டாக்களிலும் துடிக்க துடிக்க ஆக்ஸிசன் இல்லாமல் இறந்து போகிறார்கள்.இது பாதிப்பு முற்றிய நிலை.
ஆக்ஸிசன் இருந்தால் காப்பாற்றப்படலாம் என்கிற நிலை. நோயாளிகளுக்கு அப்போதைக்கு  அங்கு ஆக்ஸிசன் இல்லை.
மருத்துவமனைகளில் ஆக்ஸிசன் சிலிண்டர்கள் கையிருப்பில் இல்லை.

உடனடியாக முதல்வர் உத்தவ் தாக்கரே ,பிரதமரை தொடர்பு கொள்கிறார்.ஆனால் அவருக்கான பதில்,"பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார்.அவரோடு பேச இயலாது"என்பதே.

தன் மாநில மக்கள் உயிர் காக்க ,ஒரு மாநில முதல்வர்  பிரதமரை தொடர்பு கொண்டால் அவருக்கான பதிலே இப்படியிருக்கிறதென்றால்,
மருத்துவமனைகளின் முதல்வர்களின் நிலையை எண்ணி பாருங்கள். ஈரக்குலை நடுங்குகிறது.

கொரோனாவின்  இந்த இரண்டாம் அலையில் மட்டும் இந்தியாவில் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் பலியானோர் எண்ணிக்கை கணக்கிலடங்காது .
ஆனால் கணக்கிலிருப்பதோ,சொற்பம்.

மத்தியபிரதேசத்தில் 16 பேர்.மகாராஷ்ராவில் 7 பேர்.சத்தீஸ்கரில் 4 பேர் என ஆக்ஸிசன் பற்றாக்குறை கொரோனா பலிகளின் எண்ணிக்கை நம்மை பதறவைக்கிறது.

உத்திரபிரதேசத்தில் நாளொன்றுக்கு மருத்துவமனைகளில் ஆயிரம் ஆக்ஸிசன் சிலிண்டர்கள் தேவையாயிருந்த நிலையில் தற்போது,இந்த கொரோனா பேரிடரில் 
 5 ஆயிரம் சிலிண்டர்கள் தேவையாயிருக்கிறது. 

இந்தியா முழுக்கவே,நாளொன்றுக்கு 1,200மெட்ரிக் டன் ஆக்ஸிசன் தேவையாயிருந்த நிலையில் ,
இப்போதைய தேவையோ 4,795 மெட்ரிக் டன் ஆக்ஸிசன்.

இது இன்றைய தேவை.நாளை, அதாவது எதிர் காலத்தில் இந்த தேவையின் அளவு நிச்சயமாக கூடும்.அதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?இந்த அரசாங்கங்கள் என்ன செய்ய போகிறது?தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவு.

ஆக்ஸிசன் உற்பத்தியை அதிகமாக்கவேண்டும்.
அதற்கு தான் நாடு முழுவதும் 162 ஆக்ஸிசன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் ஒப்புதல் வழங்கி விட்டாரே? என நீங்கள் கேட்கலாம்.

அவசரத்திற்கு இந்த ஒப்புதல் எந்த அளவிற்கு பயனளிக்கப் போகிறது?

மத்தியபிரதேசம் ஷாடாலில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிசன் காலியானதையொட்டி ,உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற மருத்துவமனை நிர்வாகம் ஆக்ஸிசன் வினியோகஸ்தரை உடனடியாக  தொடர்பு கொள்ளுகின்றனர். அவரிடம் நிலைமையை கூறி அவசரப்படுத்துகின்றனர்.ஆனால்  வினியோகஸ்தரோ 6 பேர் ஆக்ஸிசன் இன்றி இறந்த பிறகு தான்  சிலிண்டர்களை அனுப்பி வைக்கிறார்.
இதுதான் இந்தியா.உண்மை கசக்கும் தான்.

இந்த நிலையில் தான் புதிய உற்பத்திக்கான பிரதமரின் அறிவிப்பை  எண்ணிப் பார்க்கவேண்டும்.

கொரோனாவால் இறந்த நூற்றுக்கணக்கானோரின்   உடலை எரியூட்டவே வடமாநிலங்களில் சிலவாரங்கள் க்யூவில் காத்திருக்க வேண்டிய நிலை.

உயிராயிருப்பவனை,
காப்பாற்ற வேண்டுமே?காத்திருக்கதான் வேண்டும் என்கிறீர்களா?

பிரதமரின் ஒப்புதல் பெற்ற இந்த 162 புதிய ஆலைகள் இயங்கி, உற்பத்தியை தொடங்க  நாட்கள் தேவைப்படும்.அதுவரை ஆக்ஸிசன் பற்றாக்குறையால் நாம் நம் உறவுகளை பலியிடத்தான் வேண்டுமா?

ஏன் பலியிட வேண்டும்?

சில உபயோகமான யோசனைகளை உங்கள் முன் வைக்கிறேன்.

இந்தியா முழுக்க தொழிற்சாலை பயன்பாட்டிற்காக வழங்கப்படும் ஆக்ஸிசனை,எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மருத்துவமனைகளுக்கு திருப்பி விடலாம்.

அரசாங்கத்தின் கடந்தகால  நெருக்கடி காரணமாக இழுத்து மூடப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆக்ஸிசன் தயாரிப்பு நிறுவனங்களை உடனடியாக திறக்க உத்திரவிட்டு,
உற்பத்திக்கு  ஊக்கமளித்து  விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு உத்திரவாதமளிக்கலாம்.

ஏன் தமிழகத்தை எடுத்துக் கொண்டால்,
தூத்துக்குடி 
ஸ்டெர்லைட் ஆலையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிசன் தயாரிப்பை அவசரம் அவசியம் கருதி உடனடிக்கை எடுக்கலாம்.

இதுவெல்லாம் நம் சாமானிய மூளைக்கு எட்டிய உயிர் காக்கும் ஆலோசனைகள்.
அரசாங்கம் இன்னும் தீவிரமாக யோசித்து,சிந்தித்து மனித உயிர்களை இந்த கொரோனாவிலிருந்து காப்பாற்ற வேண்டும்..

உற்பத்தி மட்டுமே நோக்கமாக இருந்தால் உயிர்களை காப்பாற்றி விடமுடியாது.அது சரியான சமயத்தில் நோயாளிக்கு பயன்பட வேண்டும்.அதற்கு கொரோனா கால  லாக்டவுன் போன்றவை இடையூறாக இருந்துவிடவும் கூடாது.

இது நமக்கு இக்கட்டான காலம்.அரசியல் வாதிகளுக்கு தேர்தல் காலம்.வெற்றியை அறுவடை செய்யும் காலம்.

ஆளும் அரசாங்கங்களுக்கு நாம் சொல்ல இருப்பது ஒன்றைதான்.

உங்கள் தலை முண்டாசுக்கு மேலிருப்பது வெறும் பதர் கட்டுகள்.
நெற்மணிகளை களம் சேர்க்க முயற்சியுங்கள்.
அதுவே உங்களின்  அடுத்த விளைச்சலுக்கான அடிப்படை.

No comments:

Post a Comment