Featured post

இசை பெரிதா? மொழி பெரிதா?” - கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்

 *“இசை பெரிதா? மொழி பெரிதா?” - கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்* முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’...

Wednesday 21 April 2021

மெக்டொனால்ட்ஸ் வெளியிட்டுள்ள புதிய விளம்பரப்

     மெக்டொனால்ட்ஸ் வெளியிட்டுள்ள புதிய விளம்பரப் பிரச்சாரங்களில் ராஷ்மிகா மந்தனாவிற்கு  புதிய மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் போதுமானதாக இல்லை

~360 டிகிரி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த பிராண்ட் இரண்டு தொலைகாட்சி விளம்பரங்களை வெளியிட்டுள்ளது, அவை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒளிபரப்பப்படும் ~

சென்னை, 20 ஏப்ரல் 2021: உங்களுக்கு பிடித்த உணவு ஒன்றுதான், அது எப்போதும் உங்களுக்குப் போதுமானதாக இருக்காது என்பது உறுதி! இதை மைய கருப்பொருளாகக் கொண்டு, மெக்டொனால்ட்ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு) பிரபலமான திரைப்பட நட்சத்திரமும் மற்றும் “நேஷனல் க்ரஷ்” என்றும் அழைக்கப்படம் ராஷ்மிகா மந்தனா  உடன் இணைந்து, மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கனின் சுவையை கொண்டாடும் வகையில் ஒரு விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் வெஸ்ட் லைஃப் டெவலப்மென்ட்டுக்கு சொந்தமானவை, அதன் முழு உரிமையாளரான ஹார்ட்கேஸில் ரெஸ்டாரன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் அவை இயக்கப்படுகின்றன.

மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் அறிமுகத்தின் மூலம் இந்த பிராண்ட் வறுத்த கோழி வகைக்குள் கால்பதித்துள்ளது - குறிப்பாக தென்னிந்திய வாடிக்கையாளர்களின் சுவையுணர்வுகளை மகிழ்விக்கும் வகையில் இத்தயாரிப்பு வழங்கப்படுகிறது. மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் சிறந்த தரமான கோழியுடன் தயாரிக்கப்படுகிறது மற்றும் கோஸ்ட் பெப்பர் மிளகாய் என்ற மிகக்காரமான மிளகாயைப் பயன்படுத்தி மேரினேட் செய்யப்படுகிறது, இது எலும்பு வரை மசாலா ஊடுறுவ உதவுகிறது. இது மெக்ஸ்பைஸி பர்க்கர்கள், மெக்சிக்கன் நக்கெட்ஸ் மற்றும் பலவிதமான சிக்கன் பர்கர்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் விரிவான கோழி உணவுகள் வகையின் மற்றொரு அற்புதமான மற்றும் சுவையான சேர்ப்பாகும்.

சமீபத்திய விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்த பிராண்ட் இரண்டு நகைச்சுவையான, மனதிற்கு இதமான தொலைகாட்சி விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார், அவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனைத்து புதிய மெக்ஸ்பைசி ஃப்ரைட் சிக்கனை உண்பதைக் காணலாம். இந்த விளம்பரங்கள் மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்களனுக்கு இணை வேறு எதுவும் இல்லை என்பதையும், எவ்வளவு தின்றாலும் ஒருபோதும் போதுமானதாக இருக்காது என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


முதல் தொலைகாட்சி விளம்பரத்தில் ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ராஷ்மிகாவை தனது நண்பர்களுடன் மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் உணவை உண்கிறார். அவர் நகைச்சுவையாக, மாற்றத்திற்காக வேறு ஏதாவது முயற்சி செய்ய பரிந்துரைக்கிறார். அவரது நண்பர்கள் ஒரு கணம் திகைத்துப் போகிறார்கள். ஒவ்வொரு நாளும் மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் சாப்பிடுவதை அவர்கள் விரும்புவதால், அந்த ஆலோசனை எவ்வளவு அபத்தமானது என்பதை அவர்கள் உணரும்போது அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சிரிக்கிறார்கள். பின்னர் மீண்டும் தங்கள் கோழியை சுவைக்கிறார்கள்.

தொலைகாட்சி விளம்பரத்தைக் காண இங்கு கிளிக் செய்யவும்

இரண்டாவது தொலைகாட்சி விளம்பரத்தில், ராஷ்மிகாவும் அவரது நண்பர்களும் வீட்டில் மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கனை உண்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான தயாரிப்பை சாப்பிடுவதால், அடுத்த முறை மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கனைத் தவிர வேறு ஏதாவது முயற்சி செய்யுலாம் என்று நண்பர் ஒருவர் பரிந்துரைக்கும்போது, ​​ தனக்குப் பிடித்த வறுத்த கோழியை மாற்றாமல் ராஷ்மிகா தனது நண்பரையே மாற்றுகிறார்.

தொலைகாட்சி விளம்பரத்தைக் காண இங்கு கிளிக் செய்யவும்


கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய முக்கிய சந்தைகளில் மில்லினியல்களுடன் தனது தொடர்பை மேலும் வலுப்படுத்த ராஷ்மிகா சமீபத்தில் மெக்டொனால்ட்ஸின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார். இந்த தொலைகாட்சி விளம்பரங்கள் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கில் தென் சந்தைகளில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும், மேலும் டிஜிட்டல் தளங்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இந்த பிரச்சாரத்தை DDB முத்ரா கருத்துருவாக்கம் செய்துள்ளது.

இந்த புதிய பிரச்சாரத்தின் மூலம், இந்த பிராண்ட் இந்திய வறுத்த கோழி சந்தையில் ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த பிரச்சாரமானது டிவி, டிஜிட்டல் மற்றும் சமூக தளங்களின் ஊடக கலவையுடன் பலதரப்பட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கும், மேலும் வலுவான அங்காடி தெரிவுநிலை, கள மற்றும் OOH செயல்பாடுகளையும் கொண்டிருக்கும்.

இந்த புதிய 360 டிகிரி பிரச்சாரத்தின் அறிமுகம் குறித்துப் பேசிய, மெக்டொனால்ட்ஸ் இந்தியா (மேற்கு மற்றும் தெற்கு) சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் அரவிந்த் RP அவர்கள்: “தென்னிந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கோழியை மொறுமொறுப்பாக மட்டுமின்றி, காரமாகவும் விரும்புவதை எங்கள் வாடிக்கையாளர் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தின. காரமான, மற்றும் கடைசி கடி வரை சுவைமிக்கதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் மூலம் நாங்கள் அதை வழங்குகிறோம். இந்த தயாரிப்பு கோஸ்ட் மிளகாயுடன் கவனமாக மேரினேட் செய்யப்பட்டு, நுகர்வோர் விரும்பும் விதத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக முழுமையாக வறுத்தெடுக்கப்படுகிறது. எங்கள் நோக்கம் என்னவென்றால், இந்த சிறந்த தயாரிப்பு மற்றும் ராஷ்மிகாவின் வலுவான முறையீடு மூலம், இந்த சந்தைகளில் எங்கள் சந்தைப் பங்கை விரைவாக வளர்ப்பதே ஆகும்” என்று கூறினார்.

DDB முத்ரா குழுமத்தின் தலைமை படைப்பாற்றல் அதிகாரி ராகுல் மேத்யூ அவர்கள், “இந்த பிரச்சாரம் நுகர்வோர் மெக்ஸ்ஸ்பைசி ஃபிரைடு சிக்கன் பற்றி என்ன நினைக்கின்றனர்என்பதைப் பிரதிபலிக்கிறது – மீண்டும் மீண்டும் சென்று சாப்பிட வேண்டும் என்று விரும்புவதை. ராஷ்மிகா தென்னிந்தியாவின் மிகப்பிரபலமான நட்சத்திரம் ஆவார்  மற்றும் எங்கள் கோழியைப் போலவே, அவரைக் காண்பதும் மக்களுக்கு என்றும் பத்தாது. எனவே, இவை இணைந்து ஒரு சரியான கலவையாக மாறியது” என்று கூறினார்.

புதிய மெக்ஸ்பைசி ஃபிரைடு சிக்கனில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் கூடுதல் செயற்கை சுவைகள், செயற்கை வண்ணங்கள் அல்லது செயற்கை பாதுகாப்புகள் எதுவும் இல்லை. மெக்டொனால்டின் தரம் மற்றும் பாதுகாப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, கோழி 64 தனித்துவமான சோதனைகளை


மேற்கொள்கிறது, இது பண்ணையிலிருந்து தட்டுக்கு 100% கண்டறியத்தக்க தன்மையுடன் வருவதை உறுதி செய்கிறது. மெக்டொனால்ட்ஸ் இந்தியா சிறந்த தரமான கோழியைப் பயன்படுத்துகிறது மற்றும் அதற்கு எந்த வளர்ச்சி ஊக்குவிப்பான்களையும் வழங்குவதில்லை.

எனவே, இன்று மதிய உணவிற்கு ஒரு மெக்ஸ்பைசி ஃப்ரைட் சிக்கன் சாப்பிடலாமா? மெக்டொனால்டில் இப்போதே ஆர்டர் செய்யுங்கள்!

 

வெஸ்ட்லைஃப் டெவலப்மெண்ட் குறித்து:

வெஸ்ட் லைஃப் டெவலப்மெண்ட் லிமிடெட் (BSE: 505533) (WDL) அதன் துணை நிறுவனமான ஹார்ட் கேஸில் ரெஸ்டாரன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இந்தியாவில் விரைவு சேவை உணவகங்களை (QSR) அமைத்து இயக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம், மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் மெக்டொனால்ட்’ஸ் உணவகச் சங்கிலியைஇயக்குகிறது, மெக்டொனால்ட்’ஸ் கார்ப்பரேஷன் யுஎஸ்ஏவுடன் பிந்தையதின் இந்திய துணை நிறுவனம் மூலம் முதன்மை உரிமையாளர் கூட்டாண்மையைக் கொண்டுள்ளது.

 

ஹார்ட்காசில் ரெஸ்டாரன்ட்ஸ் குறித்து:

இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு சந்தைகளில் உள்ள மெக்டொனால்ட்’ஸ் உணவகங்களை சொந்தமாக வைத்து செயல்படும், ஹார்ட் கேஸில் ரெஸ்டாரன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (HRPL) என்பது மெக்டொனால்ட்’ஸ் உரிமையாளராகும். HRPL 1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவின் இந்த பகுதியில் ஒரு உரிமையாளராக இருந்து வருகிறது.

 

தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், ஆந்திரா, கோவா மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் உள்ள 42 நகரங்களில், தனது 310 (செப்டம்பர் 30, 2020 நிலவரப்படி) உணவகங்களின் வழியாக, HRPL ஆண்டுதோறும் சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. மெக்டொனால்ட்’ஸ் தனிப்பட்ட உணவகங்கள், டிரைவ்-த்ரூக்கள், 24/7, மெக்டெலிவரி மற்றும் டெஸர்ட் கியோஸ்க்குகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் மற்றும் பிராண்ட் நீட்டிப்புகள் மூலம் செயல்படுகிறது. இதன் மெனுவில் பர்கர்கள், ஃபிங்கர் ஃபுட்ஸ், ராப்ஸ் மற்றும் சூடான மற்றும் குளிர் பானங்கள் ஆகியவை உள்ளன. மெக்டொனால்ட்’ஸ் உணவகங்களில் பல உள்ளமை மெக்கஃபேக்கள் அடங்கியுள்ளன.


மெக்டொனால்ட்’ஸ் அமைப்பின் தூண்கள் - தரம், சேவை, தூய்மை மற்றும் மதிப்பு – அவை, HRPL இயக்கும் ஒவ்வொரு உணவகங்களிலும் தெளிவாகத் தெரியும்.

 

மேலும் கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ளவும்:

  

No comments:

Post a Comment