Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Monday, 5 April 2021

டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு

டப்பிங் பணிகளை துவக்கிய “வேலன்” படக்குழு !

Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் அறிமுக  இயக்குநர் கவின் இயக்கும் “வேலன்” படத்தின் முழுப்படப்பிடிப்பும் திட்டமிடப்பட்ட காலத்தில், முடிக்கப்பட்டதில் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு. தற்போது படத்தின் போஸ்ட் டப்பிங் பணிகள் துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது..

“வேலன்” படத்தின் பணிகள் இயக்குநர் கவின் உறுதியளித்தபடி மிகச்சரியாக நடந்து வருவதில் மிகவும் மகிழ்ச்சி. படம் உருவாகி வந்திருக்கும் விதம், மிகவும் திருப்தியை தந்துள்ளது. படத்தின் போஸ்ட்புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிகச்சரியான விழாக்காலத்தில் படத்தின் மோஷன் போஸ்டர், இசை, ட்ரெய்லர், திரையரங்கு வெளியீடு தேதிகள் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.





இப்படத்தில் பிக்பாஸ் முகேன் நாயகனாகவும், மீனாக்‌ஷி

நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழின் முன்னணி இயக்குநர் சிவாவின் உதவியாளராக பணியாற்றிய கவின் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.பிரபல மலையாள  மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு  இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் எழுதியுள்ளனர். உடை வடிவமைப்பை தத்ஷா A பிள்ளை மற்றும் K.ராஜன் செய்துள்ளனர். M.சந்திரன், சவரிமுத்து, கவின் வசனமெழுதியுள்ளனர். சிற்றரசு புகைப்படங்கள் பணிகளை செய்துள்ளார்.



No comments:

Post a Comment